ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் ஆடம்பர கார்கள் குறித்த ருசிகர தகவல்கள்..!

ஐபிஎல் தொடரில் பங்குபெற்றுள்ள கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் ஆடம்பர கார்கள் குறித்த ருசிகர தகவலகளை இந்த தொகுப்பில் காணலாம்.

By Arun

பிரீத்தி ஜிந்தா, ஷாருக் கான், கலாநிதி மாறன்,விஜய் மல்லையா உள்ளிட்ட ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் குறித்தும் அவர்கள் பயன்படுத்தும் ஆடம்பர கார்கள் குறித்தும் இந்த தொகுப்பில் நாம் காண இருக்கிறோம்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஐபிஎல் இந்த ஆண்டில் தனது 10வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், கடந்த 2008ஆம் ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆசியுடன் துவங்கப்பட்டது.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இடம்பிடித்துள்ளன.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

ஒவ்வொரு அணியிலும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுடன், வெளிநாட்டு நட்சத்திர வீரர்களும், பரிச்சயமில்லாத இளம் இந்திய வீரர்களும் இணைந்து விளையாடுவது கிரிக்கெட் விளையாட்டின் புதிய பரினாம வளர்ச்சிக்கு வித்திட்டது எனலாம்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

சாதாரண உள்ளூர் வீரர்களை கூட கோடீஸ்வரர்களாக மாற்றிய பெருமை கொண்டது இந்த மதிப்புமிக்க ஐபிஎல் தொடர்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

இதில் விளையாடும் வீரர்களே கோடீஸ்வரர்களாக மாறியுள்ளபோது, அந்த அணிகளின் உரிமையாளர்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரகளாக இருப்பர் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

அம்பானி, ஷாருக் கான், பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட தொழில் அதிபர்கள் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரையிலான பிரபலங்கள் பலரும் இந்த ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களாக இருந்து வருகின்றனர்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

இவர்கள் எந்த மாடல் கார் பயன்படுத்துகின்றனர், அதில் என்ன விஷேசம் உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழலாம். அதனை இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

இந்த தொகுப்பில் முதலாவதாக நாம் பார்க்க இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றிதான்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு காரனங்களுக்காக பிரபலமானது. முதலாவது கிரிக்கெட் விளையாட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அதில் இடம்பிடித்திருப்பது.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

இரண்டாவது காரணம் அந்த அணியின் உரிமையாளரும் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக வலம்வருபவருமான அம்பானி.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

700 கோடிக்கு வாங்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ், தான் ஐபிஎல் அணிகளிலேயே அதிக விலைக்கு ஏலம் போன அணி என்ற பெருமையை தட்டிச் சென்றது.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

மும்பை இந்தியன்ஸின் உரிமையாளரான அம்பானியிடம் நூற்றுக்கனக்கான சொகுசுக் கார்கள் இருப்பது தெரிந்த விஷயமே. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று மெர்சிடிஸ் மேபக் எஸ்600 கார்டு காராகும்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

பிரதமர், ஜனாதிபதி ஆகியோர்களின் கார்களுக்கு நிகரான பலமான குண்டு தடுப்பு கவசங்கள் பொருத்தப்பட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது இந்த மேபக் மாடல்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

பாதுகாப்பில் மட்டுமல்ல செயல்திறனிலும் சிறந்த மெர்சிடிஸ் மேபக் எஸ்600 கார்டு காரில் 6.0 லிட்டர் வி12 இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 530 பிஹச்பி ஆற்றலையும், 830 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது.

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்

ஐபிஎல் அணிகளிலேயே இரண்டாவது அதிக தொகைக்கு ஏலம்போன பெருமை கொண்டது தற்போதைய இந்திய அணியின் கேப்டன் கோலி இடம்பெற்றுள்ள பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியாகும்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

பெங்களூரு அணி என்றவுடன் நம் நினைவுக்கு சட்டென வருபவர் வங்கிகளில் 10,000 கோடி ரூபாயை கடனாக வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பியோடிய விஜய் மல்லையா தான்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

விஜய் விட்டல் மல்லையா என்ற இயற்பெயர் கொண்ட இவர் கிங்ஃபிஷர் பீர் தயாரிப்பில் உள்ள யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கூட இவரின் நிறுவனங்களுள் ஒன்றே.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

விண்டேஜ் கார்கள் முதல் சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்கள் வரை இவர் வீட்டில், என்னற்ற கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

இவற்றில் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது டிரான்ஸ் ஆக்ஸில் உடன் வெளிவந்த முதல் கார் என்ற சிறப்பை பெற்ற ஃபெராரி 275 ஜிடிபி சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் தான்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

ஃபெராரி கார்களிலேயே அதிக மதிப்பு வாய்ந்த மாடலாக கருதப்படும் ஃபெராரி 275 ஜிடிபி காரில் 3.3 லிட்டர் வி12 எஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 280 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

டெல்லி டேர்டெவில்ஸ்

டெல்லி டேர்டெவில்ஸ்

அடுத்து நாம் பார்க்கவிருப்பது தலைநகர் டெல்லியை அடிப்படையாகக் கொண்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் உரிமையாளர் பற்றியும் அவரின் கார் பற்றியும் தான்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

உலகம் முழுவதும் கட்டுமானப் பணியில் சிறந்துவிளங்கும் ஜிஎம்ஆர் இன்ஃபிரா நிறுவனத்தின் தலைவர் ஜி.எம்.ராவ் டெல்லி அணியின் உரிமையாளர் ஆவார்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

ஜி.எம்.ராவ் பயன்படுத்துவது டொயோட்டா கேம்ரி ரக கார் ஆகும். இது ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

மற்ற அணி உரிமையாளர்களுடன் ஒப்பிடும் போது இந்த கார் அதிக விலை மதிப்பு இல்லை என்றாலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த காரை இவர் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

டொயோட்டா கேம்ரி காரில் எலெக்ட்ரிக் மோட்டாருடன் கூடிய 2.5 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 202 பிஹச்பி ஆற்றலையும், 213 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

அடுத்து பார்க்கவிருப்பது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த அணியை பிரபலப்படுத்துவது அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் ஷாருக் கான் தான்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

‘கிங் கான்' என்று செல்லமாக அழைக்கப்படும் பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக் கான் 2008ஆம் ஆண்டு முதல் இந்த அணியை வழிநடத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

முதல் மூன்று ஐபிஎல் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சொதப்பினாலும், 2012ல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

கார்கள் மீது ஆர்வம் கொண்டவரான நடிகர் ஷாருக் கான் பல விலையுயர்ந்த கார்களை தன் கேரஜில் நிறுத்தியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்கது புகாடி வெய்ரோன்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

புகாடி வெய்ரோன் கார் குறித்து எந்த வித அறிமுகமும் தேவைப்படாது, ஏனெனில் உலகின் அதிவேக கார்களில் ஒன்றாக வலம் வருகிறது வெய்ரோன் மாடல்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

அதிகபட்சமாக மணிக்கு 404 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய புகாடி வெய்ரோனில் 8.0 லிட்டர் டபிள்யூ16 எஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 1,000 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்

ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்

ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு புதிதாக களமிறங்கியுள்ள அணி ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட். இதன் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

ஐபிஎல் தொடரில் பங்கேற்க இயலாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனியை நடப்புத் தொடரில் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார் கோயன்கா.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்கியதோடு அவரின் ஆட்டத்திறன் குறித்தும் டிவிட்டரில் மறைமுகமாக கருத்து பதிவிட்டதால் சென்னை ரசிகர்களின் வசைபாடலுக்கும் ஆளாகி வரும் கோயன்கா ஒரு தீவிர ஸ்போர்ட்ஸ் விரும்பி.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

கொல்கத்தாவில் ஒரு விலையுயர்ந்த வணிக வளாகத்தை நிறுவியுள்ளதோடு ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இடம்பிடித்துள்ள அட்லெட்டிகோ-டி-கொல்கத்தா அணியின் உரிமையாளராகவும் உள்ளார் இவர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் நமது கலாநிதி மாறன்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த இவர் உலகம் முழுவதும் பிரபலமாக விளங்கும் சன் நெட்வொர்க் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் ஆவார்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 30க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், ரேடியோ சேனல்கள், செய்திதாள்கள், டிடிஹச் சேவை உள்ளிட்ட தொழில்களில் இவர் ஈடுபட்டுள்ளார்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

கிளாசிக் மற்றும் விண்டேஜ் கார் கலெக்டரான கலாநிதி மாறனிடம் என்னற்ற கார்கள் உள்ளது. அதில் குறிப்பிடத்தகக்து மஞ்சள் வண்ண லம்போர்கினி மர்சீயலாகோ காராகும்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

லம்போர்கினி நிறுவனத்தின் முக்கிய கார் மாடல்களில் ஒன்றான லம்போர்கினி மர்சீயலாகோ 2001 முதல் 2010 வரை தயாரிப்பில் இருந்து வந்தது. இதில் வி12 இஞ்சின் உள்ளது.

குஜராத் லயன்ஸ்

குஜராத் லயன்ஸ்

ஐபிஎல் தொடரில் மற்றொரு கத்துக்குட்டி அணியாக களமிறங்கியிருப்பது குஜராத் லயன்ஸ் அணியாகும்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

அதிக இளம் வீரர்களை கொண்டதாக விளங்கும் அந்த அணியின் கேப்டனாக சென்னை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா செயல்பட்டு வருகிறார்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

இந்தியாவின் குறைந்த வயது கொண்ட தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கும் கேஷவ் பன்சால் குஜராத் லயன்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார். இவரின் வயது 26.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

இண்டெக்ஸ் என்ற ஸ்மார்ஃபோன் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் கேஷவ் பன்சால் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயது கொண்ட அணி உரிமையாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

டெல்லியைச் சேர்ந்த பன்சால் இளைஞர்களுக்கே உரிய வகையில் கார்கள் மீது மோகம் கொண்டவராக உள்ளார். இவரிடம் விலையுயர்ந்த ஃபெராரி, ஃபோர்சே, புகாடி உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் கார்கள் உள்ளது.

கிங்ஸ் XI பஞ்சாப்

கிங்ஸ் XI பஞ்சாப்

ஐபிஎல் தொடரில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் உரிமையாளராக விளங்குபவர் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வெளிவந்த உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களை கிறங்கடித்த பிரீத்தி ஜிந்தா பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

தற்போது ஐபிஎல் தொடரிலும் முத்திரை பதித்து வரும் பிரீத்தி கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவர்.இவர் லெக்ஸஸ் எல்எக்ஸ்470 என்ற பெரிய எஸ்யூவி காரை வைத்துள்ளார்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

இதில் எல்எக்ஸ் என்பது லக்‌ஷுரி கிராஸ்ஓவர் என்பதனை குறிப்பதாகும். 1955 முதல் தயாரிப்பில் உள்ள இக்கார் சில நாடுகளில் டொயோட்டா லேன் க்ரூசர் என்ற பெயரில் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ்?

சென்னை சூப்பர் கிங்ஸ்?

எல்லாரைப் பத்தியும் சொன்னீங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தி சொல்லலயே என நினைப்பவர்களுக்கு ஒரு சின்ன தகவல்.

ஐபிஎல் ஸ்பெஷல்: மல்லையா முதல் அம்பானியின் கார் வரை..!

சென்னை அணி அடுத்த ஆண்டு முதல் தான் ஐபிஎல் களத்தில் மீண்டும் இறங்கும் என்பதால் அதன் உரிமையாளர் குறித்து உறுதியான தகவல் இல்லாததால் இங்கு தகவல் தரப்படவில்லை.

Most Read Articles
English summary
Read in Tamil about IPL owners details and their luxury cars. mallya, shah rukh, preeti jinta and more
Story first published: Friday, April 21, 2017, 16:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X