கனவை நனவாக்கும் நாசாவின் புதிய போக்குவரத்து சாதனம்... இஸ்ரேலில் அறிமுகமாகிறது

By Saravana

எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், புதிய போக்குவரத்து சாதனத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அமைப்பின் அங்கமாக செயல்படும் ஏம்ஸ் ஆராய்ச்சி மையம் உருவாக்கி வருகிறது

ஸ்கைட்ரான் என்ற பெயரில் உருவாகி வரும் இந்த புதிய போக்குவரத்து சாதன திட்டத்தை இஸ்ரேல் நாட்டின் விமானவியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து டெல் அவிவ் நகரில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த சிறப்பு வாய்ந்த புதிய போக்குவரத்து சாதனத் திட்டத்தை பற்றிய பல கூடுதல் தகவல், மாதிரி படங்களை ஸ்லைடரில் தொகுத்துள்ளோம்.

மோனோ ரயில் மாதிரி

மோனோ ரயில் மாதிரி

மோனோ ரயில் போன்றே இருக்கிறது இந்த புதிய ஸ்கைட்ரான் சாதனம். ஆனால், இவைகளில் சக்கரங்கள் இருக்காது. காந்த சக்தியின் துணையுடன் தூண்களில் இணைக்கப்பட்டிருக்கும் கம்பி வடத்தை சில மிமீ இடைவெளியில் தொற்றிக்கொண்டே செல்லும். இதனால், உராய்வு போன்ற பிரச்னைகள் இருக்காது.

சோதனை தடம்

சோதனை தடம்

லோத் என்ற இடத்தில் உள்ள இஸ்ரேல் விமானவியல் ஆராய்ச்சி மைய வளாகத்தில் 1,640 அடி நீளத்திற்கு சோதனை வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், பாட் என்ற அந்த கார்களை ஓட விட்டு சோதனைகள் நடத்த உள்ளனர்.

சொகுசு

சொகுசு

இவை கம்பி வடத்தை பற்றிச் செல்லாது என்பதால் காற்றில் மிதந்து செல்வது போன்று பயணிகளுக்கு மிக சொகுசான பயணத்தை வழங்கும். முதலில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் சோதித்து பார்க்கப்பட உள்ளது. சோதனைகள் வெற்றி பெற்றால் வேகத்தை இரு மடங்கு உயர்த்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

பயன்பாடு

பயன்பாடு

இது பொது பயன்பாட்டு போக்குவரத்து சாதனமாக மட்டுமின்றி, டாக்சி போன்று வாடகைக்கு எடுத்துக் கொண்டு விரும்பும் இடத்தை சென்று சேரலாம். மேலும், அலுவலங்களிலிருந்து பணியாளர்களை குறிப்பிட்ட நேரத்தில் வந்து பிக்கப் செய்து கொள்ளும் வசதியையும் வழங்க முடியுமாம்.

ஸ்மார்ட்போனில் ஆர்டர்

ஸ்மார்ட்போனில் ஆர்டர்

ஸ்மார்ட்போனிலிருந்து பாட் என்று அழைக்கப்படும் கார் போன்ற சாதனத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அந்த பாட் சாதனத்தில் அமர்ந்தவுடன் அதிலிருக்கும் திரையில் செல்ல விரும்பும் நிலையத்தை பதிவு செய்தால் போதும்.

சூரிய மின்சக்தி

சூரிய மின்சக்தி

இந்த போக்குவரத்து சாதனம் முழுவதும் சூரிய மின்சக்தி மூலம் இயங்கக்கூடியதாக இருக்கும் என்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் தவிர்க்கும். இது மிக குறைவான மின் சக்தியை உபயோகப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

2015ல் சோதனை

2015ல் சோதனை

அடுத்த ஆண்டு இறுதியில் இந்த கனவு போக்குவரத்து சாதனத்தை பரிச்சார்த்த முறையில் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். இது வெற்றிகரமாக இயங்கும் பட்சத்தில் மூன்று வழித்தடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

வசதிகள்

வசதிகள்

இந்த பாட் எனப்படும் கார்களில் இன்டர்நெட் இணைப்பு, ஏசி போன்ற வசதிகள் இருக்கும். மேலும், டெல் அவிவ் நகரத்தில் இயக்கப்படும் டாக்சி கட்டணத்தை ஒப்பிடும்போது மிக குறைவான கட்டணமாக இருக்கும்.

கட்டமைப்பு செலவு

கட்டமைப்பு செலவு

இதன் கட்டமைப்பு செலவும் மிக குறைவாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு மைல் தொலைவுக்கு இந்த ஸ்கைட்ரான் வழித்தடத்தை அமைப்பதற்கு 9 மில்லியன் டாலர் செலவு பிடிக்குமாம். இதே ஒரு ரயில் வழித்தடத்தை அமைப்பதற்கு ஒரு மைல் தொலைவுக்கு 100 மில்லியன் டாலர் செலவு பிடிக்கும் என்றும் ஒப்பிடப்படுகிறது.

பராமரிப்பு செலவு

பராமரிப்பு செலவு

பராமரிப்பு செலவும் மிக மிக குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பாட் போக்குவரத்து சாதனங்கள் அனைத்து மிக துல்லியமாக கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும்.

இந்தியாவுக்கு சிறந்தது

இந்தியாவுக்கு சிறந்தது

போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கி வரும் சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த போக்குவரத்து சாதனம் மிக சிறப்பானது என்று கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இது மிக விரைவான போக்குவரத்தை பொதுமக்களுக்கு வழங்கும்.

Most Read Articles
English summary
Officials in Tel Aviv, Israel, announced this week that the long-anticipated skyTran system should be up and running by the end of 2015. 
Story first published: Monday, June 30, 2014, 14:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X