யானை 'உறவாடி'யதில் சின்னாபின்னமான ஃபோக்ஸ்வேகன் போலோ!

By Saravana

ஆப்ரிக்காவில் உள்ள வனப்பகுதிகளில் சுற்றுலா செல்வோரின் வாகனங்கள் விலங்குகளால் தாக்கப்படுவது வாடிக்கையான விஷயம். ஆனால், இந்த சம்பவம் சற்று வித்தியாசமானதாக குறிப்பிடப்படுகிறது.

தென் ஆப்ரிக்காவின் பிலனஸ்பர்க் தேசிய பூங்கா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஃபோக்ஸ்வேகன் போலோ காரை ஆப்ரிக்க ஆண் யானை ஒன்று வளைத்துக் கொண்டது. அத்தோடு, அந்த காரை படாதபாடுபடுத்தி சேதத்தை ஏற்படுத்தியது.


 தம்பதியரா?

தம்பதியரா?

காருக்குள் 30வயதுடைய ஆண் ஒருவரும், 20 வயதுடைய பெண் ஒருவரும் இருந்துள்ளனர். வனப் பகுதி சாலையில் காரை நிறுத்தியிருந்தபோதுதான் அந்த இடத்துக்கு எதிர்பாராதவிதமாக வந்த ஒரு ஆண் யானை காரை வளைத்துக்கொண்டது.

 படம் பிடித்தவர்கள்

படம் பிடித்தவர்கள்

யானை வளைத்துக் கொண்டதை அந்த பகுதியில் நின்றிருந்த அர்மாண்ட் க்ரோப்ளர் என்ற இளைஞரும் மற்றொருவரும் படம் எடுத்துள்ளனர். அப்போது அந்த யானை காரை படாத பாடு படுத்தியுள்ளது. இதுகுறித்து அர்மாண்ட் க்ராப்ளர் கூறுகையில், ஆண்டுக்கு ஒருமுறை இனப்பெருக்க காலத்தில் ஆண் யானைகள் மிக மூர்க்கத்தனமாக இருக்கும். ஆனால், இந்த யானை மிக விளையாட்டுத் தனமாக காருடன் விளையாடியதாக தெரிகிறது. அதன் செய்கைகளை பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது என்றார்.

 உண்ணி கடி

உண்ணி கடி

சில வேளைகளில் உடலில் இருக்கும் உண்ணி போன்ற பூச்சிகளால் ஏற்படும் அரிப்பை போக்கிக் கொள்வதற்காக பாறைகள் மற்றும் சிறிய மரங்களின்போது இது போன்று யானைகள் உடலைத் தேய்த்துக் கொள்ளும். ஆனால், யானைக்கு அரிப்பு ஏற்பட்டபோது, கார் அதன் கண்ணில் பட்டுவிட்டது போலும் என சிலர் கூறுகின்றனர்.

 அதிர்ஷ்டவசம்

அதிர்ஷ்டவசம்

யானையிடம் சிக்கிய ஃபோக்ஸ்வேகன் காரின் கூரை கடும் சேதமடைந்தது. அதுபோன்று, கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கியதோடு, சேஸீயும் முறிந்துவிட்டதாம். தவிர, 4 டயர்களும் வெடித்தன. இந்த சம்பவத்தில் காரில் இருந்த ஆண், பெண் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Image Credit: Armand Grobler

Most Read Articles
English summary
An elephant in Pilanesburg National Park in South Africa used a small car apparently to scratch an itch while terrifying the passengers inside.
Story first published: Thursday, August 7, 2014, 16:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X