இங்கிலாந்தில், சொகுசு கார்களுடன் கவிழ்ந்த கப்பல் மீட்பு: சேதமடைந்த கார்களை உடைக்க முடிவு!

By Saravana

கடந்த மாதம் இங்கிலாந்தின் சவுதம்டன் துறைமுகத்தில் இருந்து 1400 சொகுசு கார்கள் ஏற்றப்பட்ட ஹோ- ஒசாகா என்ற சரக்கு கப்பல், புறப்பட்ட சிறிது நேரத்தில் தரைதட்டி கவிழ்ந்தது.

அந்த கப்பல் சிறிது சிறிதாக 52 டிகிரி கோணத்தில் சாய்ந்ததால், அதில் இருந்த சொகுசு கார்கள் கடும் சேதமடைந்ததிருக்கும் என கருதப்பட்டது. இந்த நிலையில், கப்பலை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. பல வாரங்கள் போராட்டத்திற்கு பிறகு தரைதட்டிய அந்த கப்பலை மீட்டு துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அதிலிருந்து கார்கள் ஆய்வு செய்யப்பட்டு கப்பலில் இருந்து தரை இறக்கப்பட்டு வருகின்றன. அந்த காரில் இருந்த பெரும்பாலான கார்கள் சேதமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சொகுசு கார்கள்

சொகுசு கார்கள்

கப்பலின் அடித்தளத்தில் 1,200 ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள், 65 மினி கார்கள், ஒரு ரோல்ஸ்ராய்ஸ் ரெயீத் கார் மற்றும் 105 ஜேசிபி கட்டுமான எந்திரங்கள் அந்த காரில் இருந்தன.

கடும் சேதம்

கடும் சேதம்

கவிழ்ந்த கப்பலில் இருந்த சேதமடையாத கார்களை பணியாளர்கள் ஓட்டி வந்து எளிதாக இறக்கினர். சேதமடைந்த கார்களையும் இறக்கும் பணி நடந்து வருகிறது.

உடைக்கப்படும்...

உடைக்கப்படும்...

சேதமடைந்த கார்களை உடைக்க கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மீதமுள்ள கார்கள் மீட்கப்பட்டு பரிசோதனைகளுக்கு பின்னர் மூன்று வாரங்களுக்கு பிறகு விற்பனைக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சிறிய சேதமடைந்திருந்தாலும், அந்த கார்களை உடைக்க கார் நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, சில கார்கள் மட்டுமே உயிர்தப்பும் வாய்ப்பு இருப்பதாக மதிப்பீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அந்த கப்பலில் இருந்த கார்கள் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்காக அனுப்பப்பட்டிருந்தன. கப்பல் கவிழ்ந்ததால், சம்பந்தப்பட்ட நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் கார்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மதிப்பு

மதிப்பு

கவிழ்ந்த அந்த கப்பலில் 100 மில்லியன் டாலர் மதிப்புடைய கார்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ

கப்பலில் இருந்து உற்சாகமாக வெளியேறிய கார்களை வீடியோவில் காணலாம்.

Most Read Articles
English summary
The Hoegh Osaka, the car transporter that was grounded after developing a massive 52 degree list off the coast of the U.K., has been taken back to port where its cargo of roughly 1400 cars, mostly Jaguar, Land Rover, and Mini products, are being unloaded.
Story first published: Thursday, January 29, 2015, 15:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X