பறக்கும் கார் தயாரிப்பில் கூகுளின் துணை நிறுவனத்துடன் மோதும் டொயோட்டா

Written By:

ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா பறக்கும் கார்கள் தயாரிப்பதற்காக 3.7 அமெரிக்கென் மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 2.43 கோடியில் உருவாகும் பறக்கும் கார்களை, ’கார் ஏவியேட்டர்’ என்ற பெயரில் தயாரிக்கிறது டொயோட்டா.

இந்தாண்டின் இறுதிக்குள் அனைத்து தயாரிப்பு பணிகளையும் முடித்துவிட்டு தனது பறக்கும் கார்களுக்கு 2018ம் ஆண்டில் சோதனை ஓட்டம் நடத்த டொயோட்டா திட்டமிட்டு வருகிறது.

சோதனை ஓட்டத்திற்கு பிறகு 2020ம் ஆண்டில் டொயோட்டாவின் பறக்கும் கார்கள் பயன்பாட்டிற்கு வரும். ஒருவேளை இது நடந்தால் 2020ல் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், பறக்கும் கார்களை கொண்டு ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படும் என டொயோட்டா தெரிவித்துள்ளது.

2012ம் ஆண்டே பறக்கும் கார்களை தயாரிக்க அந்நிறுவனத்தில் பணிபுரிந்த சில ஊழியர்கள் ஈடுபடத் தொடங்கினர். இதனை கண்டுகொள்ளாமல், பறக்கும் காருக்கான சந்தையை உருவாக்காமல், வேறொரு சிந்தனையில் இருந்தது டொயோட்டா.

ஆனால் பறக்கும் கார்களை தயாரிக்க உலகளவில் பல முன்னணி நிறுவனங்கள் களமிறங்கவே, தானும் இதில் ஈடுபட நினைத்தது. ஊழியர்களுக்கு ஊக்கம் கொடுத்து டொயோட்டா வேலை வாங்கியது.

பறக்கும் கார்களை தயார் செய்யும் குழுவினருக்கு ஸ்கைடிரைவ் டீம் என்று பெயரிட்டுள்ளது டொயோட்டா. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 'கார் ஏவியேட்டர்' என்ற பெயரில் பறக்கும் கார்களை தயாரிக்கவுள்ளனர்.

மேலும் ஏற்கனவே அமெரிக்காவின் தொழிற்சாலையில் தனது ஊழியர்கள் இருவரால் தயாரிக்கப்பட்ட 2 கார்களுக்கு காப்பீடு வாங்கவும் டொயோட்டா முயற்சித்து வருகிறது.

ஜப்பானின் ஒரு பள்ளியில் பறக்கும் கார்களை இயக்குவதற்கும் மற்றும் சோதனை செய்வதற்கும் ஒரு இடத்தைக் கூட தேர்வு செய்துள்ளது டொயோட்டா.

 

செயல்திறனை பொறுத்தவரையில் டொயோட்டா தயாரிக்கவுள்ள பறக்கும் கார் ஒரு மணி நேரத்தில் 100 முதல் 150 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய் ஆற்றலில் இருக்கும்.

அமெரிக்காவை பொறுத்தவரை பறக்கும் கார் தொழில்நுட்பத்தில் இறங்கும் இரண்டாவது நிறுவனமாக உள்ளது டொயோட்டா.

கூகுளின் நிறுவனரான லாரி பேஜ்ஜின் கிட்டி ஹாக் நிறுவனம் ஏற்கனவே ஃபைலயர் என்ற பெயரில் விரைவில் ஒரு நபர் அமர்ந்து இயக்கும் பறக்கும் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஃபைலயர்ஸ் பறக்கும் கார் முற்றிலும் செங்குத்தான டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் செய்யும் திறனுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மூன்று சக்கரங்கள் கொண்டு தயாரிக்கப்படும் டொயோட்டாவின் இந்த பறக்கும் கார், வானில் மட்டுமில்லாமல் சாலைகளிலும் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களோடு தயாரிக்கப்படவுள்ளது. 

மேலும்... #ஆஃப் பீட் #off beat
Story first published: Thursday, May 18, 2017, 8:30 [IST]
English summary
Cartivator a team of Toyota, is going to develop flying cars, called as SkyDrive this year. Check for Details...
Please Wait while comments are loading...

Latest Photos