பழைய சாதனைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாக்லேவ் ரயில்... வேகத்தில் புதிய சாதனை!

By Saravana

மணிக்கு 600 கிமீ என்ற புதிய உச்சத்தை தாண்டி ஜப்பானின் மாக்லேவ் ரயில் புதிய உலக சாதனை படைத்திருக்கிறது. இந்த அதிவேக சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.

கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 590 கிமீ வேகத்தை மாக்லேவ் ரயில் தொட்டது. இதைத்தொடர்ந்து, இன்று நடத்தப்பட்ட மற்றொரு சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு அதிகபட்சமாக 603 கிமீ வேகத்தை தொட்டது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

ஜப்பானின் ஹோன்சூ பிராந்தியத்தின் சுபு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மாக்லேவ் ரயிலுக்கான பிரத்யேக சோதனை ஓட்ட ரயில் தடத்தில் இந்த அதிவேக சோதனை நடத்தப்பட்டது.

ஒரே வாரத்தில் இரு சாதனைகள்

ஒரே வாரத்தில் இரு சாதனைகள்

கடந்த வாரம் வியாழக்கிழமை நடத்தப்பட்ட சோதனையின்போது மாக்லேவ் ரயில் 590 கிமீ வேகத்தை தொட்டு புதிய சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து, இன்று நடத்தப்பட்ட சோதனையின்போது மணிக்கு அதிகபட்சமாக 603 கிமீ வேகத்தை தொட்டு புதிய சாதனையை பதிவு செய்தது.

 அந்த 11 நிமிடங்களில்...

அந்த 11 நிமிடங்களில்...

யமனாஷி பகுதியில் உனோஹரா மற்றும் ஃபியூபியூகி இடையில் 42.8 கிமீ தூரத்துக்கு அதிவேக மாக்லேவ் ரயில் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சோதனை ஓட்ட வழித்தடத்தில் இருக்கும் சுரங்கப்பாதையில் 11 நிமிடங்கள் தொடர்ந்து 603 கிமீ வேகத்தில் இந்த ரயில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறது.

சக்கரங்கள் கிடையாது

சக்கரங்கள் கிடையாது

மாக்லேவ் வகை ரயில்களில் சக்கரங்கள் இருக்காது. இவை காந்த விசை மூலமாக தண்டவாளத்தின் மேலே மிதந்து செல்லும் தொழில்நுட்பம் கொண்டது. அதிர்வுகள் குறைவான மிக சொகுசான பயணத்தை வழங்கும் இந்த மாக்லேவ் ரயில்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேகம்

வேகம்

தற்போது ஜப்பானில் இயக்கப்படும் புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. ஆனால், மாக்லேவ் ரயில்கள் மணிக்கு 600 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது. இதன்மூலமாக, பயண நேரம் பாதியாக குறையும்.

 சேவை

சேவை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து, நகோயா நகரை இணைக்கும் வகையில் இந்த ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 286 கிமீ தூரத்தை வெறும் ஒரு மணிநேரம் 7 நிமிடங்களில் இந்த ரயில் கடக்கும்.

 அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

வரும் 2027ம் ஆண்டில் பயணிகள் சேவைக்கு இந்த அதிவேக மாக்லேவ் ரயில்களை அறிமுகம் செய்ய ஜப்பான் திட்டமிட்டுள்ளது. ஒரு மாக்லேவ் ரயிலில் 1,000 பேர் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Japan’s state-of-the-art maglev train set a world speed record on Tuesday in a test run near Mount Fuji, clocking more than 600km/h (373mph).
Story first published: Tuesday, April 21, 2015, 12:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X