ஃபெராரி டிசைனர் கைவண்ணத்தில் உருவான ஜப்பானின் புதிய உல்லாச ரயில்!

ஃபெராரி டிசைனர் கைவண்ணத்தில் உருவான புதிய உல்லாச ரயிலின் படங்கள் மற்றும் தகவல்களை கிழக்கு ஜப்பானிய ரயில்வே வெளியிட்டுள்ளது. வரும் 2017ம் ஆண்டில் இந்த புதிய உல்லாச ரயில் சேவையை துவங்க இருக்கிறது.

ஜப்பான் ரயில்வேயின் நானாட்சுபோஷி சொகுசு ரயிலின் அடிப்படையில் இந்த புதிய உல்லாச ரயிலை ஃபெராரி நிறுவனத்தின் டிசைனர் கென் ஒகுயாமா டிசைன் செய்து கொடுத்துள்ளார்.


வடிவமைப்பு

வடிவமைப்பு

மொத்தம் 10 பெட்டிகள் கொண்ட இந்த உல்லாச ரயிலில் சொகுசு படுக்கையறைகள், குளியலறை, சாப்பாட்டுக் கூடம், இயற்கை அழகை ரசிப்பதற்கான கண்ணாடி மாளிகை போன்ற ரயில் பெட்டி போன்றவற்றை கொண்டிருக்கும்.

சாப்பாட்டுக் கூடம்

சாப்பாட்டுக் கூடம்

உல்லாசப் பயணிகளுக்கான வசதிகளை மனதில் கொண்டு வடிவமைத்துள்ளனர். மொத்தம் 34 பயணிகள் இந்த உல்லாச ரயிலில் செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கும். பயணத்தில் ஓர் புதிய அனுபவத்தை தரும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது இந்த ரயில்.

டிசைனர் கருத்து

டிசைனர் கருத்து

நிரம்பிய வசதிகள் மற்றும் மிக தாராள இடவசதி கொண்டதாக இதன் இன்டிரியர் டிசைன் செய்யப்பட்டிருப்பதாக இந்த ரயிலை வடிவமைத்த கென் ஒன்குயாமா தெரிவித்துள்ளார்.

படுக்கையறை

படுக்கையறை

கடைசிப் பெட்டியில் பயணிகள் அமர்ந்து இயற்கை எழிலை ரசித்துச் செல்லும் வண்ணம் கண்ணாடி மாளிகை போன்று இந்த ரயில் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

 விலை

விலை

30 மில்லியன் பவுண்ட் விலையில் இந்த புதிய உல்லாச ரயில் வடிவமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம்

கட்டணம்

இந்த உல்லாச ரயிலில் செல்வதற்கான கட்டண விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Source: JR East

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X