"வானத்துல பறக்கறவுங்களுக்கு நம்ம கஷ்டம் எப்படிங்க தெரியும்"!

By Saravana

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்வர் ஜெயலலிதா தனி ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருவது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் திடீர் வெள்ளத்தால் நிலை குலைந்து நின்ற சென்னையை ஹெலிகாப்டரில் அவர் பார்வையிட்டது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. அவரது உடல் நல பிரச்னையை காரணமாக எடுத்துக் கொண்டாலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆரோக்கியமாக இருந்தபோதே அவர், தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரையும், தனி விமானத்தையும் பயன்படுத்த துவங்கிவிட்டார்.

தற்போது எதிர்கட்சிகளின் நெருக்கடி, உளவுத் துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட் ஆகியவற்றின் காரணமாக, மக்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டு ஹெலிகாப்டர் விசிறியின் உதவியுடன் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று விளக்கம் அளித்திருந்தாலும், அவரது ஹெலிகாப்டருக்கு செலவு எதிர்கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

முதல்முறையல்ல...

முதல்முறையல்ல...

2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரை பயன்படுத்த துவங்கிவிட்டார் ஜெயலலிதா. அப்போது அவர் ஆரோக்கியமாகவே இருந்தார். இருந்தாலும் குறுகிய காலத்தில் அதிக இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால், ஹெலிகாப்டரை பயன்படுத்துவதே சிறந்தது என கருதுகிறார்.

வாடகைக்கு...

வாடகைக்கு...

தற்போதைய தேர்தல் பிரச்சாரத்திற்காக, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று வாடகை ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து சொகுசு வேன் மூலமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஹெலிகாப்டர் வாடகை

ஹெலிகாப்டர் வாடகை

சென்னையில் ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.95 லட்சத்திலிருந்து வாடகை துவங்குகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாகும் பட்சத்தில், கூடுதலாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.80,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. வெயிட்டிங் சார்ஜ் தனி.

இதர கட்டணம்

இதர கட்டணம்

ஹெலிகாப்டருக்கான வாடகை கட்டணத்தை மட்டுமே அங்கே பார்த்தீர்கள். அதுமட்டுமின்றி, விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் புறப்படுவதற்கும், தரை இறக்குவதற்கும் எடை மற்றும் வகையை பொறுத்து தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். நேவிகேஷன் கட்டணமும் தனி. கிட்டத்தட்ட இந்த செலவு லட்சத்தை நெருங்கும்.

 பார்க்கிங் கட்டணம்

பார்க்கிங் கட்டணம்

மேலும், ஹெலிகாப்டரை நிறுத்தி வைக்கும் நேரத்திற்கும் பார்க்கிங் கட்டணமும். எரிபொருள் தொகையும் செலுத்த வேண்டியிருக்கும். ஒருமுறை பயணத்திற்கு சில லட்சங்கள் ஆகும்.

ஹெலிபேட்

ஹெலிபேட்

இந்த முறை தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் ஹெலிபேட் அமைக்கப்பட்டன. ஒரு ஹெலிபேட் அமைப்பதற்கு சில லட்சங்கள் செலவாகும். ஜெயலலிதா பிரச்சாரத்திற்காக 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஹெலிபேட் அமைக்கப்பட்டன.

மொத்த செலவு

மொத்த செலவு

இந்த முறை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டருக்கான வாடகை, விமானப் பயணம், ஹெலிபேட் அமைக்கப்பட்டது என இந்த முறை ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடி வரை ஜெயலலிதா செலவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாடல் விபரம்

மாடல் விபரம்

அவர் சமீபத்தில் தர்மபுரிக்கு வந்தபோது பயன்படுத்திய ஹெலிகாப்டர் மாடல் பெல் 412இபி. வர்த்தக போக்குவரத்து, டிராவல்ஸ் நிறுவனங்கள், பாதுகாப்புத் துறை என பல்துறை பயன்பாடுகளில் உள்ளது.

பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

இந்த ஹெலிகாப்டரில் அதிகபட்சமாக 14 பேர் வரை பயணிக்க முடியும். ஆனால், சொகுசு இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்ட மாடல்களில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே செல்ல முடியும்.

வேகம்

வேகம்

மணிக்கு 259 கிமீ வேகம் வரை பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 662 கிமீ தூரம் செல்லும். அதிகபட்சமாக 3.8 மணிநேரம் வரை பறக்கும்.

சொகுசு வேன்

சொகுசு வேன்

கோடி ரூபாய் மதிப்புடைய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவிகளை பயன்படுத்தி வரும் முதல்வர் ஜெயலலிதா தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக விசேஷ வசதிகளுடன் கட்டமைக்கப்பட்ட டெம்போ டிராவலர் சொகுசு வேனை பயன்படுத்தி வருகிறார்.

பொருத்தமான விளம்பரம்

பொருத்தமான விளம்பரம்

ஆக மொத்தம் தேர்தல் பிரச்சார போக்குவரத்திற்காக மட்டும் பல கோடி ரூபாய்களை முதல்வர் ஜெயலலிதா இதுவரை செலவு செய்துள்ளார். இதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட, "வானத்துல பறக்குறவுங்களுக்கு நம்ம கஷ்டம் எப்படிங்க தெரியும்," என்ற தொலைக்காட்சி விளம்பரம் தேர்தல் நேரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

 இதுவும் பல லட்சம்

இதுவும் பல லட்சம்

சொகுசு இருக்கைகள், ரெஸ்ட் ரூம், மைக், செட், கூடுதல் விளக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கம் இந்த வேன்கள் ரூ.20 லட்சத்திற்கும் மேலான மதிப்பில் கோவையில் கஸ்டமைஸ் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.20 கோடி அதிகமான மதிப்பில் கார்கள்!

உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.20 கோடி அதிகமான மதிப்பில் கார்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Jayalalitha's helicopter Travel Expenses becomes poll plank for opposition
Story first published: Friday, May 13, 2016, 12:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X