நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் காரை புக்கிங் செய்த நடிகர் ஜான் ஆபிரஹாம்!

புதிய நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்க இருக்கிறார் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம். அந்த காருக்காக அவர் விசேஷ கார் கராஜ் ஒன்றையும் தயார் செய்து வருகிறார்.

Written By:

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் மோட்டார்சைக்கிள் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. புதிதாக வரும் சூப்பர் பைக்குகளை முதல் ஆளாக போய் ஓட்டி பார்த்துவிடுவதும், வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவார்.

அதேபோன்று, விலை உயர்ந்த கார்களிலும் அவருக்கு தீராத ஆர்வம் உண்டு. ஆடி கார்தான் தனது கனவு காராக ஒருமுறை அவர் குறிப்பிட்டதுடன், பல ஆடி கார்களை வாங்கி பயன்படுத்தியும், பரிசளித்தும் வருகிறார். இந்த நிலையில், நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் காருக்கு ஜான் ஆபிரஹாம் முன்பதிவு செய்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில்தான் இந்த புதிய நிசான் ஜிடிஆர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் ஜான் ஆபிரஹாம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த நிலையில், அந்த காரை அறிமுக நிகழ்ச்சியில் பார்த்தது முதல் அவரது மனதை வசீகரித்துவிட்டது போலும். தற்போது ரூ.2 கோடி கொடுத்து அந்த காரை வாங்க முன்பதிவு செய்துள்ளார்.

நடிகர் ஜான் ஆபிரஹாம் வாங்க முன்பதிவு செய்திருக்கும் மாடல் நிசான் ஜிடிஆர் காரின் பிளாக் எடிசன் என்ற விசேஷ பதிப்பு மாடல். மேலும், இது மேம்படுத்தப்பட்ட மாடலாகவும் வந்துள்ளது.

இந்த காரில் சக்திவாயந்த 3.6 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 562 பிஎச்பி பவரையும், 637 என்எம் டார்க்கையும் வழங்கும். ஒவ்வொரு எஞ்சினையும் 5 பேர் கொண்ட அனுபவமிக்க பணியாளர்கள் ஒருங்கிணைத்து உருவாக்குகின்றனர்.

இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து சக்கரங்களுக்கும் இந்த கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் சக்தி கடத்தப்படுகிறது.

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 3 வினாடிகளுக்குள் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 307 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

ஒரு மாதத்திற்குள் இந்த கார் நடிகர் ஜான் ஆபிரஹாமுக்கு டெலிவிரி கொடுக்கப்படும் என நிசான் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, விரைவில் இந்த காரை மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் பார்க்கும் வாய்ப்பு பலருக்கு கிடைக்கும்.

கார் வாங்குவதை விட அதனை போற்றி பராமரிப்பது ஒரு கலை. அந்த வகையில், கார், பைக் பிரியரான ஜான் ஆபிரஹாம், விரைவில் டெலிவிரி பெறப்போகும் நிசான் ஜிடிஆர் காருக்காக முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட கார் கராஜ் ஒன்றை தயார் செய்து வருகிறார்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
We all know that John is an avid motorcycle fan and he has a collection of motorcycles. The actor is also putting together an air-conditioned garage for this Japanese beauty.
Please Wait while comments are loading...

Latest Photos