ஹெல்மெட் போடாமல் சூப்பர் பைக்கில் பறந்த நடிகர் ஜான் ஆபிரஹாம்

Posted by:
Updated: Friday, September 20, 2013, 19:56 [IST]
 

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் கார், பைக் காதலர் என்பது அனைவரும் அறிந்ததே. ஜான் ஆபிரஹாமின் கார், பைக் காதல் குறித்து ஏற்கனவே சில செய்திகளை வழங்கியுள்ளோம். இந்த நிலையில், ஜான் ஆபிரஹாம் ஹெல்மெட் போடாமல் தனது அப்ரிலியா ஆர்எஸ்வி4 சூப்பர் பைக்கில் மும்பை வீதிகளில் வலம் வந்துள்ளார்.

மும்பையில் நாளை நடைபெற இருக்கும் விழாவில் அப்ரிலியா ஆர்எஸ்வி 4 பைக் குறித்து அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கும் நிலையில், அவர் ஹெல்மெட் போடாமல் சூப்பர் பைக்கில் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

(ரூ.5 லட்சத்திற்குள் விலை கொண்ட கார்களின் ஏ டூ இசட் விபரங்கள்)

இத்தாலி பிராண்டு

இத்தாலியை சேர்ந்த பியாஜியோவின் 7 பைக் பிராண்டுகளில் ஒன்றான அப்ரிலியா பிராண்டில் வெளிவரும் சூப்பர் பைக் மாடல்தான் ஆர்எஸ்வி 4.

ஷோரூம்

புனேயில் அப்ரிலியா பைக் பிராண்டின் ஷோரூம் அமைந்துள்ளது. இந்த ஷோரூமை பிரபல பைக் பந்தய வீரர் ஸ்ரீகாந்த் ஆப்டேதான் நடத்துகிறார்.

எஞ்சின்

அப்ரிலியா ஆர்எஸ்வி - 4 பைக்கில் 999.6சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்

இந்த பைக்கின் எஞ்சின் அதிகபட்சமாக 12,500 ஆர்பிஎம்மில் 180 பிஎச்பி பவரையும், 10000 ஆர்பிஎம்மில் 115 என்எம் டார்க்கையும் அளிக்கும். 179 கிலோ எடை கொண்டது.

டாப் ஸ்பீடு

அப்ரிலியா ஆர்எஸ்வி 4 மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. 0- 100 கிமீ வேகத்தை 3.5 வினாடிகளில் கடந்துவிடும்.

பிரேக்

முன்புறத்தில் 320மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்குகளை கொண்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாகவும் கிடைக்கிறது.

விலை

ரூ.17.5 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. டிராக்ஷன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் இதில் உண்டு.

Story first published:  Friday, September 20, 2013, 11:10 [IST]
English summary

John Abraham rides Aprilia super bike without helmet

Here’s a glimpse of John Abraham test riding the Aprilia RSV4. Considering this is not a film shoot, it is worth asking, why he’s riding without helmet.
கருத்தை எழுதுங்கள்

Latest Photos

Latest Videos

Free Newsletter

Sign up for daily auto updates

New Launches