ஃபீல்டிங் புயல் ஜாண்டி ரோட்ஸ் மனதைக் கவர்ந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்..!

Written By:

தென் ஆஃப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜாண்டி ரோட்ஸ் ஃபீல்டிங் புயல் என்று செல்லமாக வர்ணிக்கக்கப்படுகிறார். ஜாண்டி ரோட்ஸுக்கு நம்ம சென்னையைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்டு நிறுவன பைக்குகள் என்றால் கொள்ளை பிரியம்.

சமீபகாலமாக ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் மீது அவர் வைத்திருக்கும் காதல் வெளிப்பட்டு வருகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவின் மதிப்புமிகு அடையாளம் என்றும் சகட்டு மேனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் அவர்.

தென் ஆப்பிரிக்காவின் தேசிய கிரிக்கெட் அணி மற்றும் ஹாக்கி அணியிலும் இடம்பிடித்து உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரராக விளங்கியவர் ஜாண்டி ரோட்ஸ்.

கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங்கிற்கு புகழ்பெற்றவர்களாக சச்சின், பிராட் மேன் ஆகியோரை உதாரணமாக கூறுவார்கள், இதே போல பவுலிங்கில் முரளிதரன், வாசிம் அக்ரம், கும்பிளே என்று பலரையும் கூறலாம். ஆனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றிலும் ஃபீல்டிங்கில் சிறந்த ஒரே வீரர் என்ற சிறப்பை பெற்றவர் ஜாண்டி ரோட்ஸ் மட்டுமே. இவர் 1992ஆம் ஆண்டு முதல் 1993 வரை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முத்திரை பதித்தவர் ஆவார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார் ரோட்ஸ்.

அதே நேரத்தில் இந்தியாவின் ஐபிஎல் 20-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார் ரோட்ஸ்.

ஜாண்டி ரோட்ஸ் இந்தியாவின் மீது மிகவும் பற்றுகொண்டவராகவே விளங்கிவருகிறார். நமது கலாச்சாரம், மொழி, பண்பாடு உள்ளிட்டவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறும் ஜாண்டி ரோட்ஸ், மும்பையில் பிறந்த தன்னுடைய பெண் குழந்தைக்கு ‘இந்தியா' என்றே பெயரிட்டுள்ளார். இது நம் நாட்டின் மீது அவர் கொண்டிருக்கும் அன்பை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

இந்தியாவின் தொன்மையான மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு பைக்குகளால் ஜாண்டி ரோட்ஸ் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளார். தன்னுடைய அணியினருக்கு பயிற்சியளிக்க மைதானத்திற்கு போல அவர் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 புல்லட்டை பயன்படுத்தி வருகிறார்.

தற்போது மும்பையின் கொலாபா பகுதியில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஷோரூம் ஒன்றிற்கு தன் மனைவியுடன் சென்ற ரோட்ஸ், அங்கு ராயல் என்ஃபீல்டு கிளாசிக் டெசர்ட் ஸ்டார்ம் மோட்டார் சைக்கிளை மகிழ்வுடன் ஓட்டிப் பார்த்துள்ளார்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ரைடர்களுக்காக பிரத்யேக ஆக்ஸஸரிகளையும் விற்பனை செய்து வருகிறது. மேலும் ரைடர்கள் அணிந்துகொள்ளும் ஜாக்கெட், கையுறை, ஹெல்மெட் உள்ளிட்டவற்றையும் ஜாண்டி ரோட்ஸ் ஆவலுடன் பார்த்துள்ளார்.

இந்தியர்களால் பெரிதும் விரும்பப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றுவதாகவும் உள்ளதாக அவர் பெருமையுடன் கூறிச் சென்றார்.

English summary
Read in Tamil about Cricketer Jonty Rhodes fell in love with royal enfield bike. jonty visits mumbai royal enfield showroom with his wife.
Please Wait while comments are loading...

Latest Photos