கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஆடி க்யூ-7 எஸ்யூவி: சிறப்பு பார்வை

கூட்டணி அமைப்பதற்காக 'குழாயடி' சண்டையில்லாமல் பெரும்பான்மை பலத்துடன் கர்நாடக சட்டமன்றத்தில் கெத்தாக நுழைந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக, கர்நாடக மக்களிடம் எளிமையான அரசியல்வாதி என்ற பெயரை பெற்ற சித்தராமையா அரியணை ஏறியிருக்கிறார்.

பின்தங்கிய சமுதாயத்திலிருந்து வந்துள்ள சித்தராமையா பல தடைகளை கடந்து இன்று மாபெரும் பதவியை தனது தொடர் முயற்சிகளாலும், திறமையாலும் பெற்றுள்ளார். அனைத்திலும் தெளிவான முடிவு எடுக்கும் வல்லமை கொண்டவராக வர்ணிக்கப்படும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது காரை தேர்வு செய்வதிலும் அப்படியே இருந்துள்ளார்.

ஆம், அவர் ஆடி க்யூ-7 சொகுசு காரைத்தான் தேர்வு செய்து வாங்கி வைத்துள்ளார். விற்பனையில் முன்னிலை வகிக்கும் சொகுசு எஸ்யூவியான க்யூ-7 ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் ஆஸ்தான வாகனமாக இருந்து வருகிறது. அந்த வகையிலேயே, கர்நாடகாவின் புதிய முதல்வர் சித்தராமையா வைத்திருக்கும் ஆடி க்யூ-7 காரில் இருக்கும் சில சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆடி க்யூ-7

ஆடி க்யூ-7

இந்தியாவில் 2006ம் ஆண்டு க்யூ7 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. 2007ம் ஆண்டுதான் ஆடி இந்தியாவில் முறைப்படி நுழைந்தாலும், ஆடி தலைமையகத்தின் நேரடி பார்வையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தோற்றம்

தோற்றம்

இதன் அகலமான முன்பக்க கிரில்கள், நயமாகவும் அதேநேரத்தில் கம்பீரமாகவும் இருக்கும் இதன் தோற்றம் பல பிரபலங்களை கவர்ந்துள்ளது. சன்ரூஃப், அலாய் வீல் என ஆகியவை கூடுதல் கவர்ச்சி. எனவேதான், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் முதல் தேர்வாக இருக்கிறது.

அதிகம் விற்பனை

அதிகம் விற்பனை

நாட்டின் அதிகம் விற்பனையாகும் சொகுசு எஸ்யூவிகளில் ஒன்றாக க்யூ-7 திகழ்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இதன் சிஆர்டிஐ 3.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் 233 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். பெட்ரோல் வேரியண்ட்டில் 3.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 280 பிஎஸ் பவரையும், 4.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் 350 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும்.

இன்டிரியர்

இன்டிரியர்

இதன் பிரிமியமான இன்டிரியர் மிகவும் ரம்மியாக உள்ளது. லெதர் இருக்கைகளும் சொகுசான பயணத்துக்கு வழிவகுக்கும். 7 பேர் தாராளமாக பயணம் செய்யும் தாராள இடவசதியை கொண்டிருக்கிறது.

எஸ்யூவிதான் ஆனா இல்லை

எஸ்யூவிதான் ஆனா இல்லை

எஸ்யூவி கார்கள் பொதுவாக ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், இந்த எஸ்யூவி சாலையில் சிறப்பாக ஓட்டுவதற்கான தகவமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

டீசல் மாடல் மணிக்கு 210 கிமீ வேகத்திலும், பெட்ரோல் மாடல் மணிக்கு 225 கிமீ வேகத்திலும் செல்லும் திறன் கொண்டது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது. டிராக்ஷன் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் ஆகியவையும் உண்டு. காற்றுப் பைகளும் பொருத்தப்பட்டுள்ளன. பின்புற இருக்கைகளுக்கு 'டார்சோ' ஏர்பேக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்கிறது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

மொத்தம் 11 வகையான வண்ணங்களில் க்யூ-7 எஸ்யூவி கிடைக்கிறது. சித்தராமையா வைத்திருப்பது கருப்பு நிற க்யூ-7.

விலை

விலை

3.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் மாடல் ரூ.52 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், 3.6 லிட்டர் பெட்ரோல் மாடல் ரூ.55 லட்சத்திலும், 4.2 லிட்டர் பெட்ரோல் மாடல் ரூ.66 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

 காவிரி பக்கம் திரும்புமா?

காவிரி பக்கம் திரும்புமா?

சித்தராமையாவின் கார் காவிரி பக்கம் திரும்பாமல் இருந்தால் நல்லது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X