200 கிமீ வேகத்தில் தடுப்பு சுவரில் மோதி சுக்குநூறான கவாஸாகி சூப்பர் பைக்... ஓசூரில் பயங்கரம்!

Written By:

அதிவேக கார் மற்றும் பைக் விபத்துக்கள் எண்ணிக்கை தினசரி செய்தியாகிவிட்டது. அவ்வாறு கவாஸாகி எச்2 சூப்பர் பைக் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியது. ஓசூரில் நடந்த இந்த கோர விபத்து குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஓசூரில் அமைந்துள்ள தனேஜா ஏரோஸ்பேஸ் வளாகத்தில் உள்ள ஓடுபாதையில் விரைவில் டிராக் ரேஸ் ஒன்று நடக்க இருக்கிறது. இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் படப்பிடிப்பு ஒன்று நடந்ததாக தெரிகிறது. அப்போது, சூப்பர் பைக் ஓட்டுவதில் கைதேர்ந்த ஒருவர் கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக்கை அதிவேகத்தில் ஓட்டி சோதனை செய்துள்ளார்.

அதாவது, அந்த பைக்கின் டாப் ஸ்பீடான மணிக்கு 300 கிமீ வேகத்தை தொட்டு பார்க்கும் நோக்கில் அந்த ஓடுபாதையில் கவாஸாகி எச்2 சூப்பர் பைக்கை அதிவேகத்தில் செலுத்தியுள்ளார். அப்போது ஓடுபாதை முடிந்ததை அவர் தவறாக கணக்கிட்டதால், ஓடுபாதை முடிவில் இருந்த தடுப்பு சுவரில் அந்த சூப்பர் பைக் பயங்கரமாக மோதியது.

மணிக்கு 200 கிமீ வேகத்தில் அந்த சூப்பர் பைக் தடுப்பு சுவரில் மோதியதாக கூறப்படுகிறது. இதில், பைக்கை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்தார். கழுத்து, இடுப்பு எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தில், கவாஸாகி நின்ஜா எச்2 சூப்பர் பைக் உடைந்து நொறுங்கியது. பைக்கின் உரிமையாளர் வேறு ஒருவர் என்றும், அந்த எச்2 சூப்பர் பைக்கின் வேகத்தை சோதிப்பதற்காக அவர் முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தின்போது தனேஜா ஏரோஸ்பேஸ் வளாகத்தில் பார்த்துக் கொாண்டிருந்த ஒருவர் இந்த படங்களையும், தகவல்களையும் வாட்சப் மூலமாக பகிர்ந்து கொண்டுள்ளார். எச்2 சூப்பர் பைக்கை ஓட்டியவரிடம் கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக் உள்ளதாம்.

சூப்பர் பைக் ஓட்டுவதில் கில்லாடியான அவர், கவாஸாகி சூப்பர் பைக் குழுவில் இருந்த மற்றொருவரின் எச்2 பைக்கை வாங்கி, அதன் டாப் ஸ்பீடை சோதிக்க முயன்றபோதுதான் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் சிக்கிய கவாஸாகி எச்2 சூப்பர் பைக் ரூ.35 லட்சம் மதிப்புடையது. இந்த பைக்கில் 200 பிஎஸ் பவரையும,் 113.5 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் டிராக் பந்தயத்திற்கான களத்தில் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இன்ஸ்யூரன்ஸ் க்ளெய்ம் செய்ய முடியாதாம்.

இது ஒருபுறம் இருக்க, சூப்பர் பைக்குகளை இரவல் கொடுப்பதும் தவறாக இருக்கிறது. பல சமயங்களில் இதுபோன்ற சூப்பர் பைக்குகளை நண்பர்களிடமிருந்தோ அல்லது தெரிந்தவர்ளிடம் இருந்தோ வாங்கி அதிவேகத்தில் ஓட்டுவதால், அதன் கன்ட்ரோல் தெரியாமல் கட்டுப்பாட்டை இழந்து மோசமான விபத்துக்களில் சிக்கி விடுகின்றனர்.

எனவே, நட்பில் விரிசல் ஏற்பட்டாலும் இதுபோன்று இரவல் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்கலாம். இல்லையெனில், பொருட் இழப்பும், உயிர் இழப்புகளும் தொடர்கதையாகவே இருக்கும்.

Via- Rushlane

புதிய கவாஸாகி நின்ஜா எச்2 கார்பன் எடிசன் சூப்பர் பைக் படங்கள்!

புதிய கவாஸாகி நின்ஜா எச்2 கார்பன் எடிசன் சூப்பர் பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Story first published: Tuesday, February 14, 2017, 12:11 [IST]
English summary
Kawasaki Ninja H2 Accident in Bangalore.
Please Wait while comments are loading...

Latest Photos