கொல்கத்தா காவல்துறை பணியில் இனி ஹார்லி டேவிட்சன் பைக் படை..!

Written By:

கொல்கத்தா மாநகர காவல்துறைக்காக விலையுயர்ந்த ஹார்லி டேவிட்சன் 750 மாடல் பைக்குகளை கொள்முதல் செய்துள்ளது மேற்குவங்க அரசு.

இதன் மூலம் நாட்டிலேயே ஹார்லி டேவிட்சன் பைக்குகளை காவல்துறைக்காக பயண்படுத்தவிருக்கும் இரண்டாவது மாநிலம் என்ற பெறுமையை மேற்குவங்கம் பெற்றுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் பல சொகுசு மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனை செய்துவருகிறது.

இதில் ஸ்போர்ட்ஸ்டெர், டைனா, டூரிங், சிவிஓ, ஸ்டீரீட் ராட், 750 ஆகிய மாடல்கள் அடங்கும்.

கொல்கத்தா காவல்துறைக்காக தற்போது 12 ஹார்லி டேவிட்சன் 750 ரக பைக்குகளை மேற்குவங்க அரசு கொள்முதல் செய்துள்ளது.

இதுவே ஹார்லிடேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் மாடல்களில் ஆரம்ப விலை கொண்ட மாடல் ஆகும்.

புதிதாக வாங்கப்பட்டுள்ள ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விஐபிக்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட விஷேச பணிகளுக்காக உபயோகப்படுத்தப்பட உள்ளன.

இதற்காகவே விஷேசமான முறையில் இந்த பைக்குகள் கஸ்டமைஸ் செய்யப்பட உள்ளன.

கொல்கத்தா காவல்துறையை குறிக்கும் விஷேச பெயிண்டிங், அவரசகால விளக்குகள், சைரன், இரண்டு பக்கமும் லக்கேஜ் வைக்கும் பைகள் உள்ளிட்டவை இவற்றில் பொருத்தப்பட உள்ளது.

ஹார்லி டேவிட்சன் 750 பைக்கில் இரட்டை சிலிண்டர்கள் கொண்ட 749சிசி இஞ்சின் உள்ளது.

இது அதிகபட்சமாக 58 பிஹச்பி ஆற்றலையும், 59 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

இந்த பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.98 லட்சம் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

மம்தா பானர்ஜி பிளான்

மேற்குவங்க மாநில முதல்வரான மம்தா பானர்ஜி, அரசுமுறைப்பயணமாக ஜெர்மனிக்கு சென்றபோது அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு அணிவகுப்பில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் இடம்பெற்றிருந்தன.

இது மம்தாவை வெகுவாக கவர்ந்துவிட்டதாம். இதனாலேயே கொல்கத்தா காவல்துறைக்காக ஹார்லி பைக்குகளை அவர்வாங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

முன்னதாக காவல்துறையில் விஐபிக்களுக்கான கான்வாயில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 புல்லட்டுகளே இடம்பெற்றிருந்தன.

போக்குவரத்து காவல்துறையினருக்கும் இந்த வகை மோட்டார்சைக்கிள்களையே மாநில அரசுகள் கொள்முதல் செய்தது.

எனினும் இந்த மோட்டார்சைக்கிள்களின் இயங்கும் செலவு (Running Cost) அதிகமாக இருந்ததால் இவற்றிற்கு பதிலாக டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

இனி ஹார்லி டேவிட்சன் பைக்குகளுடன் கொல்கத்தா காவல்துறையினர் மிடுக்காக வலம்வர உள்ளனர்.

இது குஜராத்தை தவிர மற்ற மாநில காவல்துறையினருக்கு பொறாமையை ஏற்படுத்தலாம்.

ஏனெனில் கடந்த 2015ஆம் ஆண்டே குஜராத் மாநில காவல்துறைக்காக ஹார்லி டேவிட்சன் பைக்குகள் வாங்கப்பட்டுவிட்டன.

நாட்டிலேயே ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களை காவல்துறைக்காக பயன்படுத்திய முதல் மாநிலம் என்ற அந்தஸ்தை குஜராத் பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநில காவல்துறையில் 9 ஹார்லி டேவிட்சன் பைக்குகள் உள்ளன. இவை அனைத்தும் விஷேசமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையெல்லாம் பார்த்துவிட்டு தமிழ்நாடு காவல்துறைக்கும் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் வாங்க வேண்டும் என்று நம்மவர்கள் நினைத்தால் அது நடக்குமா? (தமிழ்நாடு அரசு தான் கடனில் தத்தளிக்கின்றதாமே..!)

நம்ம இப்போது தான் வைகை அணையை தெர்மாகோல் கொண்டு மூடும் முயற்சியில் இறங்கியுள்ளோம் என்பது தனிக்கதை.!

English summary
Read in Tamil about Harley davidson 750 model bikes purchased for kolkata police dept by westbengal govt as per mamata banerjees agenda.
Please Wait while comments are loading...

Latest Photos