டீசல், நேரம், விபத்தை தவிர்க்கும் கொங்கன் ரயில்வேயின் 'ரோ ரோ' சேவை!

கடந்த 1999ம் ஆண்டு சோதனை முறையில் துவங்கப்பட்ட கொங்கன் ரயில்வேயின் ரோ ரோ சரக்கு ரயில் சேவை மிக வெற்றிகரமான முன்மாதிரி சேவையாக மாறியுள்ளது.

சரக்கு ஏற்றப்பட்ட டிரக்குகளை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்றுவிடும் 'ரோல் ஆன், ரோல் ஆஃப்' என்ற இந்த திட்டத்திற்கு தற்போது பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டம் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.


நன்மைகள்

நன்மைகள்

டீசல் சேமிப்பு, பயண நேரம் குறைவு, சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்ப்பதுடன் விபத்துக்களையும் தவிர்க்கும் மிக உன்னதமான திட்டமாக இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 டீசல் சேமிப்பு

டீசல் சேமிப்பு

சரக்கு ஏற்றப்பட்ட டிரக்குகளை ரயில் மூலம் எடுத்துச் செல்வதன் மூலம் கணிசமான அளவில் டீசல் சேமிப்பு செய்யப்படுகிறது. இதன்மூலம், லாரி உரிமையாளர்கள் சரியான கட்டணத்தை நிர்ணயிக்க முடிகிறது.

விபத்து

விபத்து

சாலை வழியாக செல்வதைவிட ரயில் மூலம் எடுத்துச் செல்லப்படுவதால் விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன.

சுற்றச்சூழல்

சுற்றச்சூழல்

எரிபொருள் சேமிப்பு மட்டுமின்றி, கார்பன் புகை வெளியேறுவதும் வெகுவாக குறைவதால் இது சுற்றுச்சூழலுக்கு உகந்த மிக உன்னதமான திட்டமாக கூறலாம்.

 வரப்பிரசாதம்

வரப்பிரசாதம்

டிரக்குகளை ரயிலில் ஏற்றிய பின் அதே டிரக்கில் டிரைவர்களும் அமர்ந்து செல்வதால் போதிய ஓய்வு கிடைக்கிறது.

 நெரிசல் தவிர்ப்பு

நெரிசல் தவிர்ப்பு

நெடுஞ்சாலைகளில் டிரக்குகளால் ஏற்படும் நெரிசல் பெருமளவு தவிர்க்க முடியும். மலைப்பாங்கான சாலைகளில் செல்வதால் பயண நேரமும், விபத்துக்களுக்கான வாய்ப்பும் மிக அதிகம். எரிபொருள் செலவீனமும் இருமடங்காகும்.

எளிது

எளிது

இந்த ரயிலில் ஒரு டிரக்கை ஏற்றி இறக்குவதற்கு 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

 மற்றொரு வசதி

மற்றொரு வசதி

ஒரு ரயிலில் 50 டிரக்குகள் வரை ஏற்றிச் செல்ல முடியும்.

சேவை

சேவை

தற்போது மும்பையிலிருந்து 145 கிமீ தூரத்தில் உள்ள கோலட் மற்றும் வெர்னா ஆகிய இடங்களுக்கு இடையிலான 417 கிமீ தூரத்துக்கான தடத்திலும், மற்றொரு தடத்தில் கோலட் மற்றும் சூரத்கல் இடையில் 721 கிமீ தூரத்துக்கும் இந்த சேவை தற்போது வழங்கப்படுகிறது.

பயண நேரம்

பயண நேரம்

கோலட் -வெர்னா இடையிலான தூரத்தை சாலை மார்க்கமாக டிரக்கில் சென்றடைய 24 மணிநேரமும், கோலட்- சூரத்கல் இடையிலான தூரத்தை கடப்பதற்கு 40 மணிநேரம் வரை ஆகும். ஆனால், இந்த சேவையின் மூலம் கோலட் -வெர்னா இடையிலான தூரத்தை ரயில் மூலம் 12 மணிநேரத்திலும், கோலட்- சூரத்கல் இடையிலான தூரத்தை 22 மணிநேரத்திலும் சரக்குகள் ஏற்றப்பட்ட டிரக்குகள் சென்றடைந்துவிடுகின்றன.

கட்டணம்

கட்டணம்

கோலட் - வெர்னா இடையில் 15 மெட்ரிக் டன் எடை ஏற்றப்பட்ட டிரக்குக்கு ரூ.4,800 வரையிலும், கோலட் - சூரத்கல் இடையில் ரூ.8,600 வரையிலும் ரயிலில் டிரக்கை கொண்டு செல்ல கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெர்னா - சூரத்கல் இடையிலான தூரத்துக்கு ரூ.3,700 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 டன்னுக்கு மேல் ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.350 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதிகபட்ச எடை

அதிகபட்ச எடை

அதிகபட்சமாக 40 டன் வரையிலான டிரக்குகளை இந்த சரக்கு ரயிலில் ஏற்றிச்செல்ல முடியும்.

முன்மாதிரி திட்டம்

முன்மாதிரி திட்டம்

இந்த முன்மாதிரி திட்டத்தை நாட்டின் பிற பகுதிகளிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் மிகச்சிறப்பானதாக இருக்கும்.

Photo credit: Konkan Railway

Most Read Articles
English summary
RORO means Roll On Roll Off, where loaded trucks are directly carried by railway wagons to their destination. Konkan Railways passes through tough terrains of India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X