விபத்தில் சிக்கிய லாஃபெராரி கார்: முன்பக்கம் கடும் சேதமடைந்தது

By Saravana

ஃபெராரி நிறுவனத்தின் பிரபலமான புதிய லாஃபெராரி கார் ஒன்று விபத்தில் சிக்கி கடுமையாக சேதமடைந்துள்ளது. சூப்பர் கார்களின் தலைநகரமாக கருதப்படும் மொனாக்கோ நாட்டின் மான்டி கார்லோ பகுதியில் இந்த விபத்து நடந்தது.

எதிர்திசையில் வந்த ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் காருடன் மோதி லாஃபெராரி விபத்தில் சிக்கியுள்ளது. ஆனால், காரில் வந்தவர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், யார் மீது தவறு என்பது குறித்த தகவலும் இல்லை.

விபத்து படங்கள், கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் காணலாம்.

முதல் விபத்து

முதல் விபத்து

விபத்தில் சிக்கியிருக்கும் லாஃபெராரியின் சேஸீ நம்பர் 199508 என்பதாகும். இதுவரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்ட கார்களில் விபத்தில் சிக்கிய முதலாவது கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை

விலை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த கார் மொனாக்கோ வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 1.4 மில்லியன் டாலர் கொடுத்து இந்த காரை உரிமையாளர் டெலிவிரி பெற்றுள்ளார்.

ரிப்பேர் செலவு

ரிப்பேர் செலவு

காரின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது. இந்த காரை முழுமையாக சரிசெய்ய பெரும் தொகையை செலவிட வேண்டியிருக்கும் என்பதும் அங்கிருந்து வரும் தகவலாக உள்ளது. அதாவது, லாஃபெராரியுடன் மோதிய கோல்ஃப் காரின் விலைக்கு இணையாக ரிப்பேர் செலவு பிடிக்கும் என்பது தகவல்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

மொத்தம் 499 லாஃபெராரி கார்களை மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளன. அதில் லாஃபெராரி கார் விபத்தில் சிக்கிய முதல் சம்பவம் என்பதால் ஃபெராரி ரசிகர்களையும், வாடிக்கையாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Most Read Articles
Story first published: Tuesday, July 1, 2014, 17:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X