லம்போர்கினி ஸ்டைலில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட டொயோட்டா ஹை- ஏஸ் வேன்!

By Saravana

பழைய கார்களை லம்போர்கினி அல்லது ஃபெராரி போன்று மாற்றுவதை பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால், ஜப்பானை சேர்ந்த கஸ்டமைஸ் நிறுவனம் சற்று வித்தியாசமான எண்ணத்துடன் ஒரு கஸ்டமைஸ் மாடலை வெளியிட்டுள்ளது.

வெற்றிகரமான மாடலாக வலம் வரும் டொயோட்டா ஹை- ஏஸ் பயணிகள் வேனை லம்போர்கினி ஸ்டைலில், மாற்றி அசத்தியிருக்கிறது எஸ்.ஏ.டி கஸ்டம் என்ற அந்த நிறுவனம். அது எப்படி சாத்தியப்படுத்தியிருக்கின்றனர் என்பதை ஸ்லைடரில் உள்ள படங்களை பார்த்தால் அசந்து போவீர்கள்.

ஸ்திரமான விற்பனை

ஸ்திரமான விற்பனை

டொயோட்டோ ஹை- ஏஸ் பயணிகள் வேன் விற்பனையில் மிக முக்கிய இடத்தை வகித்து வருகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டு 11 ஆண்டுகள் ஆனாலும், இடவசதி, ஸ்டைல் போன்றவற்றால் தொடர்ந்து சாதித்து வருகிறது.

லம்போ கிட்

லம்போ கிட்

குறிப்பாக, ஹை- ஏஸ் வேனின் பம்பரை அச்சு அசலாக லம்போ கார் ஸ்டைலில் வெகு நேர்த்தியாக மாற்றியிருக்கின்றனர். அத்துடன் சக்கரங்கள், பின்புற பம்பர் ஆகியவையும் லம்போ கார் ஸ்டைலில் அசத்தலாக மாற்றியுள்ளனர்.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

வெள்ளை- கருப்பு வண்ண பெயிண்ட்டிங், எல்இடி பகல் நேர விளக்குகள், ரூஃப் ஸ்பாய்லர், ஃபோர்ஜ்டு வீல்கள், லோ புரோஃபைல் டயர்கள், க்வாட் எக்ஸ்சாஸ்ட் புகைப்போக்கி குழாய்கள் என அனைத்தும் அசத்துகின்றன.

கஸ்டம் கிட் விலை

கஸ்டம் கிட் விலை

டொயோட்டா ஹை ஏஸ் வேனிற்கான கஸ்டமைஸ் கிட் 4,000 டாலர் விலையில் செய்துள்ளனர். இது மிக மிக குறைந்த விலையாக ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

எஞ்சின்

எஞ்சின்

டொயோட்டா ஹை- ஏஸ் பயணிகள் வேனில் 143 எச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும் எஞ்சின் இருக்கிறது. ஆனால், இதற்கான 2.0 லிட்டர் அல்லது 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று ஜப்பானிய ஆட்டோமொபைல் பிரியர்கள் கருதுகின்றனர்.

 இந்தியா வரும் மாடல்

இந்தியா வரும் மாடல்

டொயோட்டா ஹை- ஏஸ் பயணிகள் வேன் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Lamborghini-styled Toyota Hi Ace Minivan.
Story first published: Friday, August 21, 2015, 10:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X