கூகுள் உப நிறுவனம் கண்டுபிடித்த புதிய வகை பறக்கும் கார்!

Written By:

ஹாரி பார்ட்டர் படத்தில் ஒரு காட்சி வரும், குதிரை வடிவிலான கழுகு முகம் மற்றும் இறகை கொண்ட அனிமேடட் உயிரினத்தின் மீது ஹாரி பார்ட்டர் ஏறியவுடன் அது பறக்க ஆரம்பித்து விடும்.

நிலத்தை தாண்டி உயர பறந்த பிறகு, அந்த உயிரினம் இறுதியாக ஒரு ஏரியின் மீது பறக்கத் தொடங்கும். அதன் மீது அமரிந்திருக்கும் ஹாரி பார்ட்டர் ஒரு இன்பமான சூழலை உணர்வான். கைகளை விரித்து கண்களை மூடி அந்த பயணத்தை ஹாரி ஆசுவாசமாக அனுபவிப்பான்.

இந்த காட்சியை பார்க்கும் போது, நமக்கும் ஹாரிக்கு வரக்கூடிய அதே உணர்வு ஏற்படும். ஆனால் அது படம் என்பதால், நிஜத்தில் நடக்க வாய்ப்பில்லை என்று நினைத்து அடுத்த வேலையை பார்க்க நாம் போய்விடுவோம்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகணத்தின் "பறக்கும் கார்களை" வடிவமைக்கும் நிறுவனத்தினர் இந்த காட்சிகளை பார்த்தார்களோ என்று தெரியவில்லை.

நீரின் மேல் பறக்கும் திறன் கொண்ட வாகனத்தை அவர்கள் தயாரித்து சோதனையில் வெற்றிபெற்றுள்ளனர்.

 

கூகுள் தேடல் இயந்திரத்தின் நிறுவனரான லாரி பேஜின் நிதிக்கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் தான் கிட்டி ஹாக். இந்நிறுவனம் உருவாக்கியுள்ள பறக்கும் கார் குறித்த வீடியோ நேற்று வெளியாகி இணையத்தில் ஹிட்டடித்துள்ளது.

முற்றிலுமாக மின்சாரத்தால் இயங்கும் வான் ஊர்தியாக இதை கிட்டி ஹாக் குறிப்பிடுகிறது. மேலும் இதை தண்ணீர் மேல் மட்டும் தான் இயக்க முடியும் நிலத்தில் இயங்க முடியாது என கிட்டி ஹாக் தெரிவித்துள்ளது.

தண்ணீர் மேற்பரப்பின் இயக்கப்படுவதாக் இதை பயன்படுத்த நமக்கு உரிமம் தேவையில்லை. 100 கிலோ கிராம் எடை கொண்ட இது ஒரு மணி நேரத்தில் அதிகப்பட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்தை அடையும்.

சோதனை முயற்சியில் கிட்டி ஹாக் உருவாக்கியுள்ள இந்த வான் ஊர்தி தண்ணீரின் மேற்பரப்பிலிருந்து 15 அடி தூரத்தில் மட்டுமே பறக்க முடியும். அதனால் தற்போது வரை நிலத்தில் இந்த சிறிய வான் ஊர்தியை சோதித்து பார்க்கவில்லை.

இருந்தாலும் மின்சாரத்தால் இயங்கும் இந்த பறக்கும் காரை, ஏன் நிலத்தில் இயக்க முடியாது என்ற கேள்விக்கு பதில் கூற மறுத்து விட்டது கிட்டி ஹாக் நிறுவனம்.

கிட்டி ஹாக்கின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் விண்வெளி பொறியியலாளரான கேம்ரான் ராபர்ட்சன், இந்த புதிய வான் ஊர்திக்கான செயல்பாடுகளை பறந்துகொண்டே விளக்கிக் காட்டுகிறார்.

ஒருவர் மட்டுமே அமர்ந்து இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கிட்டி ஹாக் மின்சார பறக்கும் கார் முற்றிலும் ப்ரோப்பலர்கள் கொண்டு இயங்கும் திறனில் உருவக்காப்பட்டுள்ளது.

பார்க்க பரவசம் ஏற்படுத்தும் இந்தபறக்கும் காரை பயன்படுத்துவதற்கு முதற்கட்டமாக மூன்று ஆண்டு சந்தாவுடன் கூடிய உறுப்பினர் சேவையௌம் கிட்டி ஹாக் வழங்குகிறது. அதற்கு 100 அமெரிக்க டாலர்களை செலுத்தவேண்டும்.

குறிப்பிட தரத்தில் இயங்கும் தொழிலுட்பம், நிறுவனத்தின் சொந்த கியர் போன்ற துனை பொருட்களை இந்த உறுப்பினருக்கான தேவையில் சிட்டி ஹாக் வழங்கும். ஆனால் இதில் காத்திருப்போர் பட்டியலும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

மேலும் 100 டாலர்கள் அடிப்படையில் கிட்டி ஹாக் பறக்கும் மின்சார காரை இயக்க அனுமதி பெறும் விமான ஓட்நர்களுக்கு விற்பனை செய்யப்படும் தருணத்தில் 2000 டாலர்கள் வரை தள்ளுபடி செய்து தரப்படும் என கிட்டி ஹாக் கூறியுள்ளது.

அமெரிக்காவின் வான் ஊர்திகளுக்கான சட்டத்தை கட்டமைக்கும் மத்திய விமான நிர்வாகம் (FAA) அல்ட்ரலைட் கனம் கொண்ட விமானம் என குறிப்பிட்டுள்ளதால் இதற்கு உரிமம் பெறுவது கட்டாயமில்லை.

முற்றிலும் தண்ணீர் மேற்பரப்பில் இயக்கப்பட்டாலும், அவசர காலத்தில் சில நிமிடங்களுக்கு நிலத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என இதை வடிவமைத்துள்ள பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முற்றிலும் அமெரிக்காவில் தயாராகிப்பட்டு அந்த நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுத்த கிட்டி ஹாக் மின்சார இயக்கம் கொண்ட விமானம் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதுவரை அந்நிறுவனத்திற்கு இதை ஏற்றுமதி செய்யும் எண்ணமில்லை.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The Kitty Hawk flying car is an electrical aircraft resembling jet ski and weighs 100kg with a top speed of 40km/h. The flying car funded by Larry Page will go on sale later this year
Please Wait while comments are loading...

Latest Photos