மாருதி-800 வைத்திருந்த லீனாவிடம் இப்போது ரூ.20 கோடிக்கு கார்கள்!

பெரும் மோசடி புகாரில் சிக்கி கைதாகியிருக்கும் நடிகை லீனா மரியா பால் தற்போது மற்றொரு பெரும் மோசடியில் சிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாருதி-800 கார் வைத்திருந்த லீனாவிடம் தற்போது 9 ஆடம்பர கார்கள் இருந்துள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.20 கோடியாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க அந்த கார்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாநில பதிவு எண்ணைக் கொண்டிருக்கின்றன. எனவே, அவை அனைத்தும் திருட்டு கார்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வங்கியில் ரூ.19 கோடி மோசடி செய்த புகார் சம்பந்தமாக தீவிர விசாரணை போய் கொண்டிருக்கும் நிலையில், லீனாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் ஆடம்பர கார்கள்தான் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆடம்பர கார்களின் விபரம் ஸ்லைடரில் காணலாம்.

 ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் 9 கார்களில் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆடம்பர காரும் ஒன்று. இந்த காரின் பதிவு எண்ணை ஆய்வு செய்ததில் அது போலி என தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் ரூ.4.5 கோடி விலை கொண்டது.

நிசான் ஜிடிஆர்

நிசான் ஜிடிஆர்

லீனா கைது செய்யப்பட்ட பண்ணை வீட்டிலிருந்து நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் தெற்கு டெல்லியை சேர்ந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.4 கோடி விலை கொண்டது.

ஹம்மர்

ஹம்மர்

ஹம்மர் எஸ்யூவி ஒன்றையும் லீனா பயன்படுத்தி வந்துள்ளார். ஹம்மர் என்றாலே சர்ச்சை எனும் அளவுக்கு இப்போது நிலைமை மாறியிருக்கிறது. இதுவும் ரூ.1.5 கோடி மதிப்பு கொண்டது.

அஸ்டன் மார்ட்டின் வேண்டேஜ்

அஸ்டன் மார்ட்டின் வேண்டேஜ்

அஸ்டன் மார்ட்டின் வி8 வேண்டேஜ் காரும் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் மேற்கு வங்க பதிவு எண்ணைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ரூ.1.5 கோடி விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

டொயோட்டா லேண்ட்க்ரூஸர்

டொயோட்டா லேண்ட்க்ரூஸர்

சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த டொயோட்டா லேண்ட்க்ரூஸர் ஒன்றையும் லீனாவிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த எஸ்யூவி ஒரு கோடி நெருக்கமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் ஒன்றையும் லீனாவிடம் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த கார் ரூ.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

மிட்சுபிஷி லான்சர் எவொலியூஷன் எக்ஸ்

மிட்சுபிஷி லான்சர் எவொலியூஷன் எக்ஸ்

இந்த கார் எவொலியூஷன் எக்ஸ் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த கார் ரூ.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

லேண்ட்ரோவர் எஸ்யூவி

லேண்ட்ரோவர் எஸ்யூவி

லேண்ட்ரோவரின் எஸ்யூவி உள்பட பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X