சாலை தடுப்பில் மோதி தகர டப்பா போல உருக்குலைந்த மாருதி பிரெஸ்ஸா!

அதிவேகத்தில் சென்ற மாருதி பிரெஸ்ஸா கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பொறியியல் மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை காணலாம்.

By Saravana Rajan

டெல்லி அருகே நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் சாலை தடுப்பில் மோதி பயங்கரமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 சாலை தடுப்பில் மோதி தகர டப்பா போல உருக்குலைந்த மாருதி பிரெஸ்ஸா!

டெல்லி- ஹரியானா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் பகதுர்கர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. காரில் பயணித்த மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள் என தெரிய வந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் பங்கு கொண்டு விட்டு டெல்லி திரும்பிய போது விபத்தில் சிக்கி இருக்கின்றனர்.

 சாலை தடுப்பில் மோதி தகர டப்பா போல உருக்குலைந்த மாருதி பிரெஸ்ஸா!

அதி வேகத்தில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பில் பயங்கரமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் வந்த மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.

 சாலை தடுப்பில் மோதி தகர டப்பா போல உருக்குலைந்த மாருதி பிரெஸ்ஸா!

அந்த வழியாக சென்றவர்கள் அருகிலுள்ள சுங்கச் சாவடியில் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்துள்ளன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கின்றனர். அதில், இருவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 சாலை தடுப்பில் மோதி தகர டப்பா போல உருக்குலைந்த மாருதி பிரெஸ்ஸா!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக் விரிவடைந்துள்ளது. ஆனால், இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணம், கார் மோதி வேகத்தில் இரும்பு தடுப்பு முறிந்து காரின் பின்பக்கம் வரை வந்து சொருகிவிட்டது.

 சாலை தடுப்பில் மோதி தகர டப்பா போல உருக்குலைந்த மாருதி பிரெஸ்ஸா!

இதுவே இருவர் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், காரை ஓட்டியவர் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில், அதிகாலை 4 மணிக்கு திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து நடந்ததாகவும் கூறப்படுகிறது.

 சாலை தடுப்பில் மோதி தகர டப்பா போல உருக்குலைந்த மாருதி பிரெஸ்ஸா!

இந்த விபத்து சில விஷயங்களை கற்றுத் தருவதாகவே எடுத்துக்கொள்ளலாம். அதிகாலை நேரத்தில் காலியாக இருக்கும் சாலையில் எப்போதும் அதிவேகத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது. எந்த நேரத்திலும் கால்நடைகள், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் குறுக்கே கடக்கும் வாய்ப்புள்ளது.

 சாலை தடுப்பில் மோதி தகர டப்பா போல உருக்குலைந்த மாருதி பிரெஸ்ஸா!

அதிகாலை நேரத்தில், அதாவது 3 மணி அல்லது 4 மணிக்கு பயணம் கட்டுவதை தவிர்ப்பது நலம். போதிய தூக்கமின்மையால் அசதி ஏற்பட்டு விபத்துக்கு வழிகோலிவிடுகிறது. நெடுஞ்சாலைகளில் உரிய தடதத்தில் காரை இயக்குவது அவசியம்.

 சாலை தடுப்பில் மோதி தகர டப்பா போல உருக்குலைந்த மாருதி பிரெஸ்ஸா!

சாலை சந்திப்புகளை கடக்கும்போதும், வளைவுகளில் திரும்பும்போது வேகத்தை குறைத்து நிதானமாக செல்லவும். சில வளைவுகளில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதும் அபாயம் அதிகம் இருக்கிறது.

 சாலை தடுப்பில் மோதி தகர டப்பா போல உருக்குலைந்த மாருதி பிரெஸ்ஸா!

காலை நேரத்தில் கார் ஓட்டும்போது அசதியாக இருந்தால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடர்வது நல்லது. சமீப காலமாக கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. குறிப்பாக, அவர்களுக்கு கன்ட்ரோல் இல்லாமல் அதிவேகத்தில் சென்று இதுபோன்ற விபத்துக்களில் சிக்கி உயிரை இழக்கின்றனர்.

 சாலை தடுப்பில் மோதி தகர டப்பா போல உருக்குலைந்த மாருதி பிரெஸ்ஸா!

கல்லூரி பயிலும் பிள்ளைகளுக்கு கார், பைக் வாங்கி கொடுக்கும்போது அவர்கள் அதனை சரியாக பயன்படுத்துகின்றனரா என்பதை கண்காணிப்பதும் அவசியம். நிதானத்தை கடைபிடித்து வாகனங்களை இயக்குவதற்கு பயிற்சிகளும், அறிவுரைகளும் அவசியமான தருணமாகவே இருக்கிறது.

 சாலை தடுப்பில் மோதி தகர டப்பா போல உருக்குலைந்த மாருதி பிரெஸ்ஸா!

இவை எல்லாவற்றையும் விட எவ்வளவு பாதுகாப்பு வசதிகள் மிகுந்த காராக இருந்தாலும், அதிவேகத்தில் செலுத்துவது உயிருக்கு உலை வைக்கும் விஷயமாகவே இருக்கும். இதற்கு இதுபோன்ற பல விபத்துக்கள் சாட்சிகளாகி வருகின்றன.

Source: Bhaskar

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Maruti Vitara Brezza killing 2 students.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X