சோகத்தை மறக்க லியோனல் மெஸ்ஸி கார் கலெக்ஷனை பார்க்கலாம்!

By Saravana

உலகின் தலைசிறந்த புதிய தலைமுறை கால்பந்து வீரர்களில் ஒருவராக அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி பார்க்கப்படுகிறார். அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டியில் மண்ணைக் கவ்விய நிலையில், உலகக் கோப்பை போட்டி தொடரின் சிறந்த வீரருக்கான தங்க பந்து விருதை பெற்று முத்திரை பதித்தார். இருப்பினும், அதனை முழுமையாக கொண்டாட முடியாமல் தவித்து வருகிறார். அவரது ரசிகர்களும் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

அதிக வருவாய் பெறும் கால்பந்து வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவுக்கு அடுத்த இடத்தில் மெஸ்ஸி இருக்கிறார். பார்சிலோனா அணியில் சேர்ந்தது முதல் அவருக்கு வருமானம் கூரை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது. இதனால், தனது வாழ்க்கையை ஆடம்பரமாக மாற்றுவதற்காக விலையுயர்ந்த கார்களை வாங்கி குவித்துள்ளார்.

அந்த கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

கார் கலெக்ஷன்

கார் கலெக்ஷன்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் தங்க பந்து விருதை பெற்றாலும், அதனை முழுமையாக கொண்டாட முடியாமல் லியோனல் மெஸ்ஸி தவிக்கிறார். அவருக்கு இந்த கார்கள்தான் ஆறுதல் தரும் இடமாக இருக்கலாம். அவரது கார் கராஜில் ஒரு ரவுண்ட் அப்.

 மஸராட்டி கிரான் டூரிஷ்மோ

மஸராட்டி கிரான் டூரிஷ்மோ

சூப்பர் கார் பிரியர்களின் கனவு மாடல்களில் ஒன்றாக வலம் வரும் மஸராட்டி கிரான் டூரிஷ்மோவில் 4.6 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது அதிகபட்சமாக மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. மெஸ்ஸியின் ஒரு வார வருமானமும், இந்த காரின் விலையும் சமம்.

டொயோட்டா பிரையஸ்

டொயோட்டா பிரையஸ்

2011ல் ஜப்பானில் நடந்த கிளப் வேர்ல்டு கப் கால்பந்தாட்டப் போட்டியில் சிறந்த மதிப்புமிக்க வீரருக்கான விருதுக்காக டொயோட்டா பிரையஸ் காரை பரிசாக வென்றார். 2011 மாடல் டொயோட்டா பிரையஸ் காரில் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் 2 எலக்ட்ரிக் மோட்டார் துணையுடன் இயங்குகிறது. சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட கார். இந்த கார் 30,000 டாலர் விலை மதிப்புமிக்கது.

லெக்சஸ்

லெக்சஸ்

லியோனல் மெஸ்ஸியிடம் லெக்சஸ் ஆர்எக்ஸ் 450 ஹைபிரிட் கார் ஒன்றும் உள்ளது. பல நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் அதிக இடவசதி கொண்டது. இது குறிப்பிட்ட தூரம் எலக்ட்ரிக் மோட்டாரில் மட்டும் செல்லும் திறன் கொண்டது.

 ஆடி ஆர்8 ஸ்பைடர்

ஆடி ஆர்8 ஸ்பைடர்

பிரபல கால் பந்து வீரர்களின் விருப்பமான மாடல்களில் இதுவும் ஒன்று. இந்த கார் 2 சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார். சிறந்த செயல்திறன் கொண்ட இந்த ஆடி ஆர்8 ஸ்பைடர் கார் ஒரு லட்சம் பவுண்ட் விலை கொண்டது.

ஆடி க்யூ7

ஆடி க்யூ7

மெஸ்ஸியிடம் ஆடி க்யூ7 எஸ்யூவி ஒன்றும் உள்ளது. கடந்த 2007ல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடி க்யூ7 கார் உலக அளவில் வாடிக்கையாளர்களின் மனங்கவர்ந்த எஸ்யூவி மாடலாக திகழ்கிறது. இந்த காரில்தான் முதல்முறையாக சைடு அசிஸ்ட் என்ற காரை சுற்றிய நிலவரத்தை எச்சரிக்கும் வசதி முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

டாட்ஜ் சார்ஜர் எஸ்ஆர்டி8

டாட்ஜ் சார்ஜர் எஸ்ஆர்டி8

டாட்ஜ் சார்ஜர் எஸ்ஆர்டி கார் 2005ம் ஆண்டு நியூயார்க் ஆட்டோ ஷோவில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் 425 எச்பி ஆற்றலை அளிக்கும் 6.1 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதான் கிறைஸ்லர் நிறுவனத்தின் அதிக சக்திவாய்ந்த வி8 எஞ்சின் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ஃபெராரி எஃப்430

ஃபெராரி எஃப்430

மெஸ்ஸியின் விருப்பமான மாடல்களில் ஒன்றாக ஃபெராரி எஃப் 430 காரும் அவரது கராஜை அலங்கரித்து வருகிறது. கன்வெர்ட்டிபிள் மாடலான இந்த கார் இத்தாலியின் புகழ்பெற்ற பினின்ஃபெரா டிசைன் நிறுவனத்தின் கைவண்ணத்தில் உருவானது.

Most Read Articles
English summary
Argentine Soccer, Lionel Messi, is widely considered as one of the best player in the world. Here is the list of Lionel Messi’s Amazing Car Collection. Have a look at this.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X