இந்தியாவில் எஃப்-16 போர் விமானத்தை தயாரிக்க லாக்ஹீட் மார்ட்டின் திட்டம்!

By Saravana Rajan

உலகின் அதிநவீன போர் விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் தனது போர் விமான உற்பத்தி ஆலையை இந்தியாவில் துவங்குவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக, அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. ஒரு எளிய கண்டிஷனுக்கு இந்தியா ஒப்புக் கொண்டால் அடுத்த ஆண்டே இந்தியாவில் போர் விமான உற்பத்தியை துவங்கவும் திட்டமிட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்வம்

ஆர்வம்

அமெரிக்காவிலுள்ள ஃபோர்ட் வொர்த் என்ற இடத்தில்தான் லாக்ஹீட் மார்ட்டின் எஃப்16 போர் விமானங்கள் பன்னெடுங்காலமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், இந்தியாவின் அன்னிய முதலீட்டுக் கொள்கை மிகவும் சாதகமாக இருப்பதால், எஃப்-16 போர் விமான உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்ற ஆர்வம் காட்டி வருகிறது லாக்ஹீட் மார்ட்டின்.

ஒரு கண்டிஷன்

ஒரு கண்டிஷன்

குறிப்பிட்ட எண்ணிக்கையில் எஃப்-16 போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கிக் கொள்வதாக இருந்தால், தங்களது நிறுவனத்தின் கொள்கைகளை கூட தளர்த்திக் கொண்டு இந்தியாவில் எஃப்16 உற்பத்தியை துவங்குவதற்கும் தயார் என்று லாக்ஹீட் மார்ட்டின் அதிகாரி ஹோவர்டு கூறியிருக்கிறார். அதாவது, அடுத்த ஆண்டே இந்தியாவில் உற்பத்தியை துவங்கவும் முடிவு செய்துள்ளது.

ஏற்றுமதி...

ஏற்றுமதி...

இந்திய விமானப்படைக்கு தேவையான விமானங்களை டெலிவிரி செய்தவுடன், அதன்பின் இந்தியாவிலிருந்து பிற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டிருப்பதாக ஹோவர்டு கூறியிருக்கிறார். இதனால், லாக்ஹீட் மார்ட்டின் மிக தீவிரமாக இந்த விஷயத்தில் இறங்கியிருப்பது தெரிய வருகிறது.

சப்ளையர்கள்

சப்ளையர்கள்

முக்கிய உதிரிபாகங்களை தவிர்த்து, பெரும்பாலான உதிரிபாகங்களை இந்தியாவிலுள்ள சப்ளையர்களிடமிருந்து பெறுவதற்கு லாக்ஹீட் மார்ட்டின் திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலமாக, மிக குறைவான செலவில் உற்பத்தி செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

நான்காம் தலைமுறை

நான்காம் தலைமுறை

லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-16 பிளாக் 70 என்ற மாடல்தான் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த விமானம் நான்காம் தலைமுறையை சேர்ந்த விமானம். இலகு வகையை சேர்ந்த இந்த விமானத்தின் விலையும், பராமரிப்பும் மிக குறைவாக இருக்கும் என்று லாக்ஹீட் மார்ட்டின் இந்திய அரசுக்கு உறுதி தெரிவித்துள்ளது.

சூப்பர்சானிக் ரகம்

சூப்பர்சானிக் ரகம்

பன்முக பயன்பாட்டு வகையை சேர்ந்த இலகு ரக போர் விமானம்தான் லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-16. 1976ம் ஆண்டு ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த விமானம் மிகவும் வெற்றிகரமான மாடலாக விளங்கி வருகிறது. 1993ல் லாக்ஹீட் மார்ட்டின் ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்தின் விமான தயாரிப்பு பிரிவை லாக்ஹீட் வாங்கியது. அதன்பிறகு லாக்ஹீட் மார்ட்டின் எஃப்16 என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த விமானத்தின் காக்பிட் என்று சொல்லக்கூடிய விமானி அமர்ந்து இயக்கும் அறை நீர் குமிழி போன்ற வடிவம் உடையது. இதன்மூலமாக, பைலட் எளிதாக சுற்றுப்புறத்தை கவனித்து இயக்க முடியும். மேலும், 40 டிகிரி கோணத்தில் பக்கவாட்டின் கீழ் பகுதியை கண்காணிக்க முடியும். இதன் உடல்கூடும் மிகச்சிறப்பான கட்டமைப்பு கொண்டது. இதனால், எளிதாக வளைத்து நெளித்து இயக்க முடியும்.

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

வானிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தரை தாக்குதலுக்கான ஏவுகணைகள், எந்திர துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்களை பொருத்தி இயக்க முடியும். இந்த விமானத்தில் நவீன வகை ரேடார் சாதனங்கள் இருக்கின்றன. எதிரி தாக்குதல்களிலிருந்து எளிதாக தப்பிப்பதற்கான தற்காப்பு ஆயுதங்களும் நிரம்பப்பெற்றிருக்கிறது.

 உற்பத்தி நிலை

உற்பத்தி நிலை

உலகிலேயே அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட போர் விமானங்களில் ஒன்று லாக்ஹீட் மார்ட்டின் எஃப்16 போர் விமானம். இதுவரை 4,588 எஃப்16 போர் விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் உள்பட உலகின் 26 நாடுகளின் விமானப்படைகளில் இந்த விமானம் பயன்பாட்டில் உள்ளது. கார்கில் போரின்போது இந்த விமானத்தை இந்திய எல்லையோரக் கண்காணிப்புக்கு பாகிஸ்தான் விமானப் படை பயன்படுத்தியது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அமெரிக்க விமானப்படை எஃப்-16 போர் விமானத்திற்கு புதிய ஆர்டரை தரவில்லை. மேலும், அடுத்த ஆண்டு வரை மட்டுமே உற்பத்திக்கான ஆர்டர் இருக்கிறது. அதற்கடுத்து, இந்த விமானத்திற்கான ஆர்டரை அதிகரிக்கும் பொருட்டு, இந்தியாவிற்கு உற்பத்தியை அவசர கதியில் மாற்ற துடிக்கிறது லாக்ஹீட மார்ட்டின். வரும் 2021ம் ஆண்டு வரை ஆர்டரை பெறுவதுதான் அந்த நிறுவனத்தின் திட்டம்.

அமைச்சரின் தகவல்

அமைச்சரின் தகவல்

உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானத்தை தவிர்த்து, மற்றொரு விமானத்தையும் விமானப்படையில் சேர்ப்பது அவசியமாகியிருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சமீபத்தில் தெரிவித்தார். எனவே, அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு லாக்ஹீட் மார்ட்டின் அதீத பிரயேதனங்களை மேற்கொண்டிருக்கிறது.

போட்டா போட்டி

போட்டா போட்டி

லாக்ஹீட் மார்ட்டின் மட்டுமில்லை, ஸ்வீடனை சேர்ந்த சாப் நிறுவனம், பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் மற்றும் யூரோஃபைட்டர் தைபூன் கன்சோர்ட்டியம், போயிங் ஆகிய பல நிறுவனங்கள் இந்தியாவில் போர் விமானங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான விமானங்களை தயாரிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.

அரசியல் பார்வை

அரசியல் பார்வை

இதுவரை ரஷ்யாவின் போர் விமானங்களையே இந்தியா பெருமளவு பயன்படுத்தி வருவதுடன், நீண்ட கால ராணுவ உறவை அந்நாட்டுடன் பேணி வருகிறது. இந்தநிலையில், ரஷ்யாவுக்கு நேர் எதிரியாக கருதப்படும் அமெரிக்காவுடன் இந்தியா புதிய உறவை வளர்க்க முயற்சிப்பது ரஷ்யாவின் நீண்ட கால உறவில் விரிசல் ஏற்பட வழிவகுக்கும். அதேபோன்று, சீனாவும் இந்த விஷயத்தை உற்று நோக்கி வருகிறது. மறுபுறத்தில் அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்குமான உறவிலும் இடைவெளி விழும் என்று கருதப்படுகிறது. ஏனெனில், எஃப்16 போர் விமானத்தை பாகிஸ்தானுக்கு வழங்க இயலாது என்று சமீபத்தில் அமெரிக்கா அறிவித்தது நினைவிருக்கலாம்.

பாகிஸ்தானின் ஜேஎஃப்-17 போர் விமானம் Vs இந்தியாவின் தேஜஸ் போர் விமானம்: ஒப்பீடு

பாகிஸ்தானின் ஜேஎஃப்-17 போர் விமானம் Vs இந்தியாவின் தேஜஸ் போர் விமானம்: ஒப்பீடு

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
Lockheed Martin offers to build F-16s in India.
Story first published: Tuesday, August 9, 2016, 12:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X