இந்தியாவின் டாப்-10 நீண்ட தேசிய நெடுஞ்சாலைகள் பற்றிய ஸ்பெஷல் தகவல்கள்..!

இந்தியாவில் உள்ள டாப்-10 நீண்ட நெடுஞ்சாலைகள் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

Written By:

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் நடுவண் அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகின்றன. இந்தச் சாலைகளில் பெரும்பாலானவை இரு வழிப்பாதைகள்.

இந்தியாவில் மொத்தம் 92,851 கிமீ தொலைவுக்குக்கு நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களையும் இணைப்பதில் நெடுஞ்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மொத்தச் சாலைக் கட்டமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 2 சதவீதமாகும். ஆனால் அவை 40 சதவீத போக்குவரத்தை கையாளுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் 200க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதன் ஒட்டுமொத்த நீளம் 92,851 கிலோமீட்டர்கள். அதேபோன்று, 1,31,899 கிமீ தூரத்திற்கான மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பை பெற்றிருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணிகளையும், பராமரிப்பையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் கவனித்துக் கொள்கிறது.

நம் நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகள் ஒவ்வொன்றும் பிரத்யேக எண் கொண்டு குறியிடப்படுகிறது.

இதில் ‘NH' என்றால் தேசிய நெடுஞ்சாலை என்பதாகும். அனைத்து தேசிய நெடுஞ்சாலைக்கும் 28 ஏப்ரல் 2010 முதல் புதிய எண் கொடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிக நீளமான 10 தேசிய நெடுஞ்சாலைகள் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

1. என்ஹச் - 44

ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து தொடங்கி தமிழகத்தின் கடைக்கோடி நகரான கன்னியாகுமரியை இணைக்கிறது NH-7 என்ற எண்ணில் குறிப்பிடப்படும் நெடுஞ்சாலை.

1. என்ஹச் - 44

இதுவே இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை. இது 2,369 கிமீ நீளம் கொண்டது. முன்னதாக இது என்ஹச்-7 என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. என்ஹச் - 27

தேசப்பிதா என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி பிறந்த புதிய மண்ணாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தரில் இருந்து அசாம் மாநிலம் சில்ச்சார் வரை நீள்கிறது இந்த சாலை.

2. என்ஹச் - 27

நாட்டின் கிழக்கு மேற்கு துருவங்களை இணைக்கும் இந்த நெடுஞ்சாலை இந்தியாவின் இரண்டாவது பெரிய நெடுஞ்சாலை ஆகும். இதன் நீளம் 3,507 கிமீ ஆகும்.

3. என்ஹச் - 48

தலைநகர் டெல்லியை தமிழக தலைநகரமான சென்னையுடன் இணைக்கிறது இந்த நெடுஞ்சாலை. இதன் நீளம் 2,807 கிமீ ஆக உள்ளது.

3. என்ஹச் - 48

டெல்லி-குர்கான் எக்ஸ்பிரஸ்வே, ஜெய்ப்பூர்-கிஷன்கார்ஹ் எக்ஸ்பிரஸ்வே மற்றும் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே ஆகிய மூன்றும் இணைத்து என்ஹச் - 48 உருவாகியது. இதன் முந்தைய பெயர் என்ஹச் - 8 என்பதாகும்.

4. என்ஹச் - 52

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் மற்றொரு மிக நீண்ட நெடுஞ்சாலை இது. இது பஞ்சாப் மாநிலம் சங்க்ரூரில் தொடங்கி, கர்நாடக மாநிலம் அங்கோலாவில் முடிகிறது. இதன் நீளம் 2,317 கிமீ ஆகும்.

5. என்ஹச் - 30

உத்தரகண்ட் மாநிலம் சித்தர்கன்ஞ்ல் தொடங்கி ஆந்திர மாநிலம் இப்ராஹிம்பட்டிணத்தில் முடியும் இந்த நெடுஞ்சாலை நாட்டின் முக்கிய 6 மாநிலங்கள் வழியே பயணிக்கிறது.

5. என்ஹச் - 30

லக்னோ, அலஹாபாத், ஜபல்பூர், ராய்ப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இது இணைக்கிறது. இதன் முந்தைய பெயர் என்ஹச் - 221 என்பதாகும். இதன் மொத்த நீளம் 2,010 கிமீ.

6. என்ஹச் - 6

மேகாலய மாநிலம் ஜோராபாத்தில் தொடங்கி மிசோரம் மாநிலம் செல்லிங்கில் முடிகிறது இந்த சாலை. இது மேகாலயா, அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களை இணைக்கிறது.

7. என்ஹச் - 53

குஜராத்தின் ஹஜிரா நகரையும், ஒடிசாவின் பிரதீப் துறைமுகத்தையும் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை குஜராத், மகராஷ்டிரா, சட்டீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களை இணைக்கிறது. இதன் நீளம் 1,781 கிமீ.

8. என்ஹச் - 16

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவையும், சென்னையையும் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை தங்க நாற்கர சலாஇயின் ஒரு அங்கமாகும்.

8. என்ஹச் - 16

மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திரா மற்றும் தமிழகம் என நான்கு மாநிலங்களை இந்த சாலை இணைக்கிறது. இதன் மொத்த நீளம் 1,659 கிமீ. இதன் முந்தைய பெயர் என்ஹச் - 5 என்பதாகும்.

9. என்ஹச் - 66

மகராஷ்டிர மாநிலம் பன்வல் நகரில் தொடங்கி கன்னியாகுமரி வரை நீள்கிறது இந்த என்ஹச் - 66 நெடுஞ்சாலை. இது இயற்கை அழகை உள்ளடக்கிய நெடுஞ்சாலை ஆகும்.

9. என்ஹச் - 66

மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை இந்த சாலையில் பயணித்தால் காணமுடியும். கோவா, ஆழப்புழா உள்ளிட்ட நகரங்கள் இந்த சாலையின் முக்கிய நகரங்களாகும். இதன் நீளம் 1,593 கிமீ ஆகும்.

10. என்ஹச் -19

வடக்கில் உள்ள டெல்லியையும், கிழக்கில் உள்ள கொல்கத்தாவையும் இந்த சாலை இணைக்கிறது. இதன் மொத்த நீளம் 1,426 கிமீ. இதன் முந்தைய பெயர் என்ஹச் -2 என்பதாகும்.

10. என்ஹச் -19

இவையே நாட்டில் உள்ள அதிக தூரம் கொண்ட டாப்-10 நெடுஞ்சாலைகள் ஆகும். நாட்டின் குறைந்த நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எது தெரியுமா?

எர்ணாகுளத்திலிருந்து கொச்சி துறைமுகத்தை இணைக்கும் நெடுஞ்சாலைதான். இது வெறும் 6 கிமீ மட்டுமே நீளம் கொண்டது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Saturday, May 13, 2017, 12:33 [IST]
English summary
Read in Tamil about India's longest national highways and their facts.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK