கார்களை வைத்து அமெரிக்கர்களுக்கு இதுவும் ஒரு பொழுதுபோக்குதான்!

By Saravana

கார்கள் என்பது போக்குவரத்துக்காக மட்டும் என்றில்லாமல், அவற்றை விளையாட்டு, பொழுதுபோக்கு சாதனங்களாகவும் மாற்றிவிடுகின்றனர். அதேபோன்று, அமெரிக்காவில் பிரபலமான Lowrider என்ற கார்கள் பற்றிய செய்தித்தொகுப்பாக இது அமைகிறது.

சஸ்பென்ஷனில் சில மாற்றங்களை செய்து கார்களை டான்ஸ் ஆட வைத்து மகிழ்கின்றனர் அமெரிக்கர்கள். 1960களில் துவங்கிய இந்த லோரைடர் கார்களின் வரலாறு இன்றளவும் அமெரிக்கர்களிடையே பிரபலமாக இருந்து வருகிறது. ஸ்லைடரில் படங்கள், வீடியோ ஆகியவற்றை பார்ர்த்து மகிழுங்கள்.

குட்டிகரணம்

குட்டிகரணம்

கார்களின் இரு வீல்களில் மட்டுமே இயங்குவது, அந்தர் பல்டி அடிப்படை என பல வித்தைகளை இதேபோன்று மாற்றப்பட்ட லோரைடர்கள் செய்யும். இதற்காக, சஸ்பென்ஷன் அமைப்பில் பல மாற்றங்களை செய்கின்றனர். ஸ்பிரிங்குகள், ஷாக் அப்சார்பருக்கு பதிலாக ஹைட்ராலிக் சிஸ்டத்தில் இயங்கும் சஸ்பென்ஷன் அமைப்புடன் மாற்றப்படுகின்றன.

 ஹைட்ராலிக் சிஸ்டம்

ஹைட்ராலிக் சிஸ்டம்

ஹைட்ராலிக் சிஸ்டத்தில் உள்ள பிளாடர் எனப்படும் பையை கம்ப்ரஸார் மூலம் ஆயிலை அதிவேகத்தில் செலுத்தி விரிவடைய செய்வதால், சஸ்பென்ஷனை இயங்க செய்கிறது. இதனால், கார் நடனமாடுகிறது. மேலே, கீழேயும் அசுர வேகத்தில் விழுந்து எழுகிறது.

ரிமோட் கன்ட்ரோல் வசதி

ரிமோட் கன்ட்ரோல் வசதி

இதனை காருக்குள் இருக்கும் சுவிட்சுகள் மூலமும், வெளியிலிருந்து கட்டுப்பாட்டு சாதனம் மூலமும் இயக்கலாம்.

அதிக பவர்...

அதிக பவர்...

ஹைட்ராலிக் சிஸ்டத்தை இயக்குவதற்கு அதிக மின்சாரம் தேவைப்படும். இதற்காக, காரின் பின்புறத்தில் அதிக அளவில் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், காரின் எடை மிக அதிகமாக இருக்கும்.

 பேஸ் மாடல்

பேஸ் மாடல்

பல்வேறு கார்களை இதுபோன்று லோரைடர் கார்களாக மாற்றுகின்றனர். அதில், 1960ம் ஆண்டு மாடல் செவர்லே இம்பாலா, 1970ம் ஆண்டு செவர்லே மான்டே கார்லோஸ் போன்ற கார்களும் லோரைடர்களாக மாற்றப்படுகின்றன. இதேபோன்று, புயிக் ரீகல்ஸ், ஓல்ட்ஸ்மொபைல் கட்லாஸ் சுப்ரீம்ஸ் ஆKிய மாடல்களும், செவர்லே எல் கமீனோ கார்களும் மாறுதல்கள் செய்யப்பட்டு லோரைடர்களாக மாற்றப்படுகின்றன.

லோரைடர் நடன நிகழ்ச்சி

லோரைடர் நடன நிகழ்ச்சி

லோரைடர் கார்களை வைத்து அமெரிக்காவில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்றன. தரையிலிருந்து பல அடி உயரம் எழும்பும் கார்களையும், பல்டி அடிக்கும் கார்களையும் பார்க்க அங்குள்ள மக்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது.

 சாலையிலும் சாகசம்

சாலையிலும் சாகசம்

சிலர் சாலையிலும் லோரைடர் கார்களை ஓட்டி சாகசம் செய்யும் நிகழ்வும் அவ்வப்போது அமெரிக்க சாலைகளில் நடப்பது வழக்கம்.

இது போதும்...

லோரைடர் கார்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த வீடியோ ஒன்றே போதும்.

பொழுதுபோகுமா...?

பொழுதுபோகுமா...?

இந்த லோரைடர் கார்கள் நிச்சயம் பொழுதுபோக்கை தரும் வகையில் இருக்கின்றனவா? உங்களது கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

Most Read Articles
English summary
"Lowriders" - The Complete Lowdown (With Video). Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X