நாசாவின் விண்வெளி 'கார்கள்' - சுவாரஸ்யமான தகவல்கள்

By Saravana

மங்கள்யான் விண்கலம் மூலம் செவ்வாய் கிரக ஆராய்ச்சி பட்டியலில் இந்தியாவும் இணைந்து கொண்டுள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் செவ்வாய் கிரக ஆராச்சியில் மங்கள்யான் திட்டம் வெற்றியடைந்தால் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை இந்தியா பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், விண்வெளி ஆராய்ச்சியில் பல படிகள் முன்னே நிற்கும் அமெரிக்க விண்வெளி மையமான நாசா இந்த ஆராய்ச்சியில் படு தீவிரமாக இருந்து வருகிறது. மேலும், கார் போன்ற அமைப்பு கொண்ட வாகனங்களை அந்த நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் நாசாவின் ஆராய்ச்சிக்கு இந்த வாகனங்கள் பெரும் உதவி புரிந்து வருகின்றன. அந்த வகையில், நாசா அமைப்பு இதுவரை தயாரித்து அனுப்பிய மற்றும் வடிவமைப்பில் உள்ள விண்வெளி வாகனங்கள் பற்றிய சிறப்பு தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

லூனார் ரோவர்

லூனார் ரோவர்

கடந்த 1971ம் ஆண்டு நிலவில் முதன்முறையாக மனிதன் இயக்கும் வகையிலான முதல் வாகனத்தை இறக்கி உலக விண்வெளி வரலாற்றில் புதிய சாதனையை அமெரிக்கா படைத்தது. இந்த நிலவு வாகனத்தில் சக்கரங்களில் ஸிங்க் பேட்டரிகள் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 460 பவுண்ட் எடை கொண்டது. ஒரு முறை சார்ஜில் 30 கிமீ தூரம் மட்டுமே பயணம் செய்யும் வசதி கொண்டிருந்தது. 1970ல் 38 மில்லியன் டாலர் மதிப்பில் 4 வாகனங்கள் தயாரிக்கப்பட்டன. இன்றைய மதிப்பில் 200 மில்லியன் டாலர்களாக குறிப்பிடப்படுகிறது.

லூனார் ரோவர்

லூனார் ரோவர்

லூனார் ரோவர் 460 பவுண்ட் எடை கொண்டது. ஒரு முறை சார்ஜில் 30 கிமீ தூரம் மட்டுமே பயணம் செய்யும் வசதி கொண்டிருந்தது. 1970ல் 38 மில்லியன் டாலர் மதிப்பில் 4 வாகனங்கள் தயாரிக்கப்பட்டன. இன்றைய மதிப்பில் 200 மில்லியன் டாலர்களாக குறிப்பிடப்படுகிறது.

பாத்ஃபைன்டர்

பாத்ஃபைன்டர்

மிக குறைவான பட்ஜெட்டில் மிகச்சிறந்த வாகனமாக பாத்ஃபைன்டர் உருவாக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட முதல் ரோபோ வாகனமும் இதுதான். 1997ல் பாராசூட் மூலம் இது தரையிறக்கப்பட்டது. 6 சக்கரங்களுடன் கூடிய இந்த வாகனம் செவ்வாய் கிரகத்தில் மூன்று மாதங்களில் 10 ஆயிரம் புகைப்படங்களை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் சீதோஷ்ண நிலை, மண் உள்ளிட்டவற்றை பற்றிய ஆராய்ச்சிக்கு இந்த படங்கள் மிகவும் உதவின. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை பாத்ஃபைன்டர் மூலம்தான் நாசா உணர்ந்து கொண்டது. 250 மில்லியன் டாலர் மதிப்பில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டது.

மார்ஸ் ரோவர்

மார்ஸ் ரோவர்

கடந்த 2004ம் ஆண்டு ஜனவரியில் அடுத்து 2 ரோபோ வாகனங்களை செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பியது. ஸ்பிரிட் மற்றும் ஆப்போர்ச்சினிட்டி என்ற அந்த 2 வாகனங்களும் எதிரெதிர் திசையில் இறக்கப்பட்டன. இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மற்றும் கருவிகள் மூலம் பனரோமிக் புகைப்படங்களையும், செவ்வாய் கிரக மண் மாதிரிகளும் பெறப்பட்டன. ஆனால், ஸ்பிரிட் ரோவர் மணலில் சிக்கியதால் தொடர்ந்து செயல்படாமல் நின்றது.

மார்ஸ் ரோவர்

மார்ஸ் ரோவர்

முந்தைய மாடல்களைவிட சற்று பெரிதான இந்த வாகனங்கள் 365 பவுண்ட் எடை கொண்டது. 6 சக்கரங்களுடன், சக்திவாய்ந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் துல்லியமான படங்களை தரும் சக்திவாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 90 நாட்கள் ஆராய்ச்சி திட்டத்துடன் களமிறக்கப்பட்ட இந்த வாகனங்களுக்கு 820 மில்லியன் டாலர் செலவிடப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டது.

கியூரியாசிட்டி ரோவர்

கியூரியாசிட்டி ரோவர்

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டு வரும் இந்த வாகனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் களமிறக்கப்பட்டது. 23 மாதங்கள் கால அளவுடன் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் இந்த வாகனம் மூலம் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

 கியூரியாசிட்டி சிறப்பு

கியூரியாசிட்டி சிறப்பு

10 அடி நீளம், 9 அடி அகலம், 7 அடி உயரத்துடன் டிசைன் செய்யப்பட்ட இந்த வாகனத்தை மினி எஸ்யூவி என்று நாசா குறிப்பிடுவதுண்டு. அணுசக்தியில் இயங்கும் இந்த வாகனம் 6 சக்கரங்களுடன் ஒரு டன் எடைக்கு சோதனை கருவிகளை தாங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. சக்திவாய்ந்த துளையிடும் கருவி மற்றும் லேசர் கருவிகளும் இதில் அடங்கும். நமது கைகளில் இந்த ஒளியை பீய்ச்சினால் கை துண்டாகிவிடும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக நாசா தெரிவிக்கிறது. இந்த வாகனத்தின் டிசைன் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு 2.5 பில்லியன் மதிப்பீட்டில் நாசா செயல்படுத்தி வருகிறது.

பிரம்மாண்ட வாகனம்

பிரம்மாண்ட வாகனம்

லூனார் ரோவர் என்று குறிப்பிடப்பட்ட முந்தைய ஸ்லைடில் பார்த்த வாகனம் நிலவில் அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டும் இயங்கும். எனவே, அதிக நேரம் இயங்கக்கூடிய வாகனத்தை தற்போது நாசா வடிவமைத்து கடந்த 4 ஆண்டுகளாக சோதனைகளை நடத்தி வருகிறது. எஸ்இவி குறிக்கப்படும் இந்த வாகனம் பராமரிப்பே தேவையில்லாத வகையில், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. பாறைகள் மற்றும் 40 டிகிரி சரிவான பாதையில் கூட எளிதாக செல்லும்.

 சிறப்பு வசதி

சிறப்பு வசதி

எஸ்இவி வாகனத்தின் மிகப்பெரிய வசதி, இதன் கேபினில் விண்வெளி ஆய்வாளர்கள் பிரத்யே உடை அணியாமலேயே அமர்ந்து செல்ல முடியும். இந்த வாகனத்தின் சக்கரங்கள் பக்கவாட்டிலும் திரும்பி செல்லும் வகையில் சிறப்பு வசதி கொண்டது. ரீசார்ஜ் செய்யும் வசதி கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 800 கிமீ வரை செல்லும் என நாசா தெரிவிக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு இந்த வாகனத் திட்டத்துக்கு 153 மில்லியன் டாலர் பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.

Most Read Articles
English summary
India has launched its first interplanetary probe,Mars Orbiter Spacecraft onboard PSLV-C25. Have you ever wondered about space cars. Here is some space cars from Nasa which are used in various space missions.
Story first published: Wednesday, November 6, 2013, 13:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X