குறைந்த கட்டணம், நிறைந்த சேவை: சென்னையை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் பைக் டாக்ஸி சேவை

இந்தியாவில் முதல்முயற்சியாக மாற்றுத்திறனாளிகளால் தொடங்கப்பட்ட பைக் டாக்ஸி சேவை சென்னை மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.

By Azhagar

வாடகை பயணங்களை (டாக்ஸி) வழங்கும் சேவைகளில் தனித்த அடையாளத்தை பெற்றிருக்கும் நிறுவனம் தான் மா உலா.

சென்னையில் இயங்கும் மா உலா, இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளிக்களால் இயக்கப்படும் முதல் பைக் டாக்ஸி சேவையாக உள்ளது.

பைக் டாக்ஸி சேவையில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகள்

கல்லூரி படிப்பை முடித்த பிறகு, பாலாஜி பல்வேறு நிறுவனங்களில் வேலைக்காக விண்ணப்பித்து காத்திருந்தார். அப்போது அவரது நண்பரான முகமது கடாஃபி கூறிய ஐடியாதான் தான் மா-உலா டாக்ஸி சேவை.

மாற்றுத் திறனாளிகள் என்ற வார்த்தையில் இருந்து 'மா' என்பதையும், பயணம் என்ற அர்த்தம் தரக்கூடிய 'உலா' என்பதையும் இணைத்து தனது டாக்ஸி நிறுவனத்திற்கு 'மா உலா' என்பதை பெயராக்கியுள்ளனர் பாலாஜி மற்றும் முகமது கடாஃபி.

பைக் டாக்ஸி சேவையில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகள்

இருசக்கர வாகனங்களில் இயங்கும் இந்த டாக்ஸி சேவை, இன்று சென்னையில் பலருக்கும் முதல் தேர்வாக இருந்து வருகிறது.

முதலில் இரண்டு பேரால் தொடங்கப்பட்ட மா-உலா இன்று 11பேர் கொண்ட நிறுவனமாக விரிவடைந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் இயங்கும் இந்த டாக்ஸி சேவையை மக்களிடம் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் பாலாஜி.

பைக் டாக்ஸி சேவையில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளியான இவர், தனது வாகனத்தில் பயணித்து, நோட்டீஸ்கள், துண்டு பிரசுரங்களை சென்னையில் பல்வேறு இடங்களில் விநியோகித்து, சென்னை வாழ் மக்களிடம் மா-உலா குறித்த தேர்வை பாலாஜி ஏற்படுத்தியுள்ளார்.

பைக் டாக்ஸி சேவையில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகள்

முதலில் பாலாஜியால் இயக்கப்பட்டு வந்த மா-உலாவில் பிறகு அவரது நண்பர் முகமது கடாஃபியும் இணைந்துக்கொண்டார். இவர்களது கூட்டணி இன்று பரபரப்பான சென்னையில் பலரது போக்குவரத்து தேர்வாக மாறியுள்ளது.

பைக் டாக்ஸி சேவையில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகள்

மா-உலா பயன்பாட்டிற்கு வந்த முதல் மாதத்தில் ரூ.12,000 சம்பாதித்தார் பாலாஜி. ஆனால் இதுவே 11பேர் கொண்ட நிறுவனமாக மாறிய பிறகு, ஒவ்வொருத்தரும் தேவை போக மாதம் ரூ.15,000 வரை லாபம் பார்க்கின்றனர்.

பைக் டாக்ஸி சேவையில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகள்

மா-உலா சென்னை மக்கள் மத்தியில் பிரபலமடைய வேறொரு காரணுமும் உள்ளது. அது கட்டணம்.

ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10/- எனவும், இரவு நேர பயணங்கள் என்றால் ரூ.13/- என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பைக் டாக்ஸி சேவையில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகள்

2015ம் ஆண்டில் தொடங்கப்பட்டு இருந்தாலும், 2 ஆண்டுகளிலேயே மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை மா-உலா டாக்ஸி சேவை பெற்றுள்ளது.

பைக் டாக்ஸி சேவையில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகள்

ஆட்டோ ரிக்‌ஷாக்கள், கால் டாக்ஸி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு மா-உலாவின் வளர்ச்சி சென்னை மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பைக் டாக்ஸி சேவையில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகள்

தற்போதையை காலகட்டத்திற்கு ஏற்ப இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் இன்னும் வாடிக்கையாளர்கள் வட்டத்தை விரிவுப்படுத்தும் முயற்சியில் மா-உலா ஈடுபட்டு வருகிறது.

சென்னையை தாண்டி தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் மா-உலா டாக்ஸி சேவையை உருவாக்க திட்டுமிட்டு வருகிறார் நிறுவனர் பாலாஜி.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
A Chennai-based bike taxi service has started the first-ever bike taxi service run by differently-abled people.
Story first published: Monday, May 15, 2017, 17:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X