டோணியின் மோட்டார் உலகம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்புகளில் அசத்திய மஹேந்திர சிங் டோணியின் மோட்டார் உலகத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Saravana Rajan

இந்திய ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணித் தலைவர் பொறுப்புகளிலிருந்து மஹேந்திர சிங் டோணி விலகுவதாக அறிவித்துள்ளார். உலக அரங்கில் இந்திய அணியை பலம் வாய்ந்த அணிகளுள் ஒன்றாக மாற்றியதில் டோணியின் பங்கு முக்கியமானதும், மகத்தானதும் கூட. இந்த நிலையில், இந்திய அணிக்காக பல்வேறு இக்கட்டான சூழல்களிலும், மன அழுத்தம் இருந்தபோதிலும் அவருக்கு ரிலாக்ஸ் தந்தது அவரது மோட்டார் உலகம்தான். கார், பைக்குகள் மீதான அவரது காதல் உலகம் அறிந்ததே.

அவரிடம் கார், பைக்குகள் என கிட்டத்தட்ட 50க்கும் நெருக்கமான எண்ணிக்கையில் வாகனங்கள் உள்ளன. அவற்றை பராமரிப்பதிலும், ஓட்டுவதிலும்தான் ஓய்வு நேரங்களை செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இப்போது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதால் கூடுதல் ஓய்வான மனநிலையை பெற்றிருக்கிறார். இதன்மூலமாக, அணியை கட்டிக்காப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்த அவர் இனி தனது கவனத்தை தனது கராஜை கவனித்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவார். அவரிடம் ஏராளமான வாகனங்கள் இருந்தபோதிலும், அதில் தனித்துவம் வாய்ந்த பைக்குகள் மற்றும் கார்களை இந்த செய்தியில் காணலாம்.

கவாஸாகி நின்ஜா எச்2

கவாஸாகி நின்ஜா எச்2

உலகின் அதிசக்திவாய்ந்த சூப்பர் பைக் மாடல்களில் ஒன்றான கவாஸாகி நின்ஜா எச்2 பைக்கை முதல் ஆளாக பதிவு செய்து வாங்கினார். ஏனெனில், இந்தியாவில் மொத்தமே 5 பைக்குகள் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட தருணத்தில் அவர் இந்த பைக்கை வாங்கினார். இந்த பைக்கில் இருக்கும் 998சிசி எஞ்சின் அதிகபட்சமாக 200 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்த வல்லது. ரூ.33.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை மதிப்பு கொண்டது.

என்னுடைய புதிய சூப்பர் பைக் இதுதான்!

கான்ஃபடரேட் எக்ஸ்132 ஹெல்கேட்

கான்ஃபடரேட் எக்ஸ்132 ஹெல்கேட்

உலகின் அதி விலை உயர்ந்த இந்த பைக் மாடலையும் டோணி வாங்கி வைத்துள்ளார். மொத்தமே 150 ஹெல்கேட் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டன. அதில் ஒன்று டோணி வசம் உள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் குறித்து சிறப்பு செய்தியை ஏற்கனவை டிரைவ்ஸ்பார்க் தளம் வெளியிட்டு இருக்கிறது.

'தல' டோணியின் மோட்டார் உலகம்!

இந்த பைக்கில் இருக்கும் 2.2 லிட்டர் வி- ட்வின் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 132 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. இந்த பைக்கை புத் இன்டர்நேஷனல் கார் பந்தய களத்தில் டோணி ஓட்டி பார்த்து மகிழ்ந்த தருணமும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

டோணியின் புதிய ஹெல்கேட் சூப்பர் பைக் - சிறப்பு பார்வை

கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்14-ஆர்

கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்14-ஆர்

கருப்பு வண்ண கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்14 ஆர் சூப்பர் பைக்கும் டோணியிடம் உள்ளது. இந்த பைக்கில் இருக்கும் 1441சிசி எஞ்சின் அதிகபட்மாக 197 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மணிக்கு 335கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்ட சூப்பர் பைக் மாடல் இந்தியாவில் ரூ.16.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய்

ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய்

ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய் மோட்டார்சைக்கிளில் அவ்வப்போது ரவுண்ட் அடிப்பது டோணியின் வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த மோட்டார்சைக்கிளில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஒர்க்க்ஷாப்பில் விட்டார். ஆனால், திரும்ப பெறாமல் நீண்ட காலமாக அங்கேயே இருந்தது. பின்னர், திடீரென ஒருநாள் அந்த ஒர்க்ஷாப்பிற்கு சென்று, கோளாறுகளை சரிசெய்து திரும்ப எடுத்து வந்து ஆசை தீர ஓட்டி மகிழ்ந்தார். இந்த பைக்கில் இருக்கும் 1,690சிசி எஞ்சின் 65 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. ரூ.17 லட்சம் விலை மதிப்பு கொண்டது.

டுகாட்டி 1098

டுகாட்டி 1098

தல அஜீத் முதல் தல டோணி வரை அனைவரையும் கவர்ந்த பிராண்டு டுகாட்டி. அந்த நிறுவனத்தின் மிகவும் பிரபல சூப்பர் பைக் மாடல் டுகாட்டி 1098. 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட இந்த டுகாட்டி சூப்பர் பைக்கையும் வாங்கி வைத்திருக்கிறார். இந்த பைக்கில் இருக்கும் 1,099சிசி எஞ்சின் அதிகபட்சமாக 160 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. இந்த பைக்கிற்கு மாற்றாகத்தான் டுகாட்டி 1198 சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

முதல் பைக்

முதல் பைக்

யமஹா ஆர்டி350 மோட்டார்சைக்கிளுக்கு இன்றளவும் இந்தியாவில் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த காலத்துக்கு பெர்ஃபார்மென்ஸ் மோட்டார்சைக்கிளாக வலம் வந்த இந்த மாடலை டோணி மிகவும் விரும்பி வாங்கினார். ஏனெனில், இதுதான் அவரது முதல் பைக்காக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், புதிய மாடல்கள் வந்த பின் கவனிப்பாரற்று கிடந்த இந்த பைக்கிற்கு மீண்டும் புதுப்பொலிவு கொடுத்து பழசை மறக்காதவன் என்று தன் குணத்தை வெளிப்படுத்தினார்.

சுஸுகி ஷோகன்

சுஸுகி ஷோகன்

1990 காலக் கட்டத்தில் இளைஞர்களை மிகவும் கவர்ந்த மாடலாக வலம் வந்தது சுஸுகி ஷோகன். 2 ஸ்ட்ரோக் பைக் காலத்தின் பொன்னான மாடல்களில் ஒன்று. இந்த பைக்கையும் வெகு காலம் பயன்படுத்தி வந்துள்ளார் டோணி. அண்மையில் இந்த பைக்கையும் புதுப்பொலிவு கொடுத்து அதனை சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியிட்டார்.

 யமஹா தண்டர்கேட்

யமஹா தண்டர்கேட்

1996 முதல் 2007ம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்த மோட்டார்சைக்கிள் மாடல். மிகவும் பிரபலமான ஸ்போர்ட்ஸ் டூரர் வகையை சேர்ந்த மோட்டார்சைக்கிள். இந்த பைக்கில் இருக்கும் 599 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. தனது நின்ஜா இசட்எக்ஸ்-14ஆர் பைக்கையும், யமஹா தண்டர்கேட் பைக்கையும் ஒரே நேரத்தில் படம் பிடித்து வெளியிட்டிருந்தார் டோணி.

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார்

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார்

டோணி கராஜில் இருக்கும் பழமையான மோட்டார்சைக்கிள்களில் ஒன்று பிஎஸ்ஏ கோல்டுஸ்டார். இங்கிலாந்து நாட்டு தயாரிப்புகளில் மிகவும் புகழ்வாய்ந்தது. 500சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை பொருந்தியதாக அந்த காலத்தில் பெயர் பெற்று விளங்கியது.

நார்டன் ஜூப்ளி250

நார்டன் ஜூப்ளி250

பழமையான மோட்டார்சைக்கிள் கலெக்ஷனில் டோணி வைத்திருக்கும் மற்றொரு மோட்டார்சைக்கிள் மாடல்தான் நார்டன் ஜூப்ளி 250. இந்த மோட்டார்சைக்கிளில் 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளையும் புதுப்பொலிவு கொடுத்துள்ளார் டோணி.

ஹம்மர் எச்2

ஹம்மர் எச்2

மிக பிரம்மாண்டமான தோற்றமுடைய ஹம்மர் எச்2 எஸ்யூவி மாடலும் டோணியிடம் உண்டு. அதில், அவ்வப்போது வலம் வருவது அவருக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்று. அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும். இந்த எஸ்யூவியில் 393 பிஎச்பி பவரை அளிக்கும் 6.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. எடை மூன்று டன் என்பதையும் கவனிக்க வேண்டும்.

 ஃபெராரி ஜிடிஓ599

ஃபெராரி ஜிடிஓ599

கார் பிரியர்களின் கனவு பிராண்டு ஃபெராரி. அவ்வாறே கார் பிரியரான டோணியிடம் ஃபெராரி ஜிடிஓ599 ஸ்போர்ட்ஸ் காரும் உள்ளது. இந்த காரில் 661 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வழங்கும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் உள்ளது. இந்த அதிசக்திவாய்ந்த காரை ஓய்வுநேரங்களில் பயன்படுத்துகிறார்.

மாருதி சுஸுகி எஸ்எக்ஸ் 4

மாருதி சுஸுகி எஸ்எக்ஸ் 4

எஸ்யூவி கார்களுக்கு இணையாக 190மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட செடான் ரக கார் மாருதி எஸ்எஎக்ஸ்4. ஆளுமையான தோற்றம் கொண்ட மாருதி எஸ்எக்ஸ்4 காரும் டோணியிடம் இருக்கிறது. மாருதி பிராண்டு மகிமையை பார்ப்பதற்காக மஹி வாங்கிய மாடல் இது என்று பெருமை கூறுகின்றனர்.

 மிட்சுபிஷி அவுட்லேண்டர்

மிட்சுபிஷி அவுட்லேண்டர்

டோணி ஒரு எஸ்யூவி பிரியர் என்பது இந்த செய்தியை படிக்கும்போதே உணரலாம். அவரது கராஜில் எஸ்யூவி வகை மாடல்களின் ஆக்கிரமிப்பு அதிகம். அந்த வகையில், மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி ஒன்றும் டோணியிடம் உள்ளது. இந்த எஸ்யூவியில் 170 பிஎச்பி பவரையும், 226 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. சிறப்பான ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 மிட்சுபிஷி பஜெரோ எஸ்எஃப்எக்ஸ்

மிட்சுபிஷி பஜெரோ எஸ்எஃப்எக்ஸ்

எஸ்யூவி வகை வாகனங்களுக்கான சாமுத்ரிகா லட்சணம் பொருத்திய மாடல். இன்றளவும் இந்த எஸ்யூவிக்கு ரசிகர்கள் உண்டு. இந்த எஸ்யூவியில் 120 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு மாற்றாக தற்போது பஜெரோ ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைக்கும் பழைய கார் மார்க்கெட்டில் பஜெரோ எஸ்யூவிக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

 ஆடி க்யூ7

ஆடி க்யூ7

சினிமா நட்சத்திரங்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி வாங்கி தினசரி பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் கார் ஆடி க்யூ7. அந்த வகையில் இந்த கார் டோணியிடம் ஒன்று இருப்பதில் ஆச்சரியமில்லை. வாடிக்கையாளர்கள் விரும்பும் சொகுசு அம்சங்களை கச்சிதமாக நிறைவேற்றும் இந்த சொகுசு எஸ்யூவியை அடிக்கடி பயன்படுத்துவதில் ஆனந்தப்படுகிறார் டோணி.

 ஜிஎம்சி சியாரா பிக்கப் டிரக்

ஜிஎம்சி சியாரா பிக்கப் டிரக்

அமெரிக்காவின் பிரபலமான ஜிஎம்சி சியாரா பிக்கப் டிரக் ஒன்றையும் இறக்குமதி செய்து வாங்கி வைத்திருக்கிறார் டோணி. இந்த எஸ்யூவியில் இருக்கும் டீசல் எஞ்சின் 1,036 என்எம் டார்க்கையும் வழங்கும். ஜிஎம்சி சியாராவில் இருக்கும் 6.6 லிட்டர் வி8 எஞ்சின் 397 பிஎச்பி பவரை அளிக்கும்.

 லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர் 2

லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர் 2

ஒவ்வொரு பிராண்டிலும் எஸ்யூவியை தேர்வு செய்து வாங்கி வைத்திருக்கும் டோணியிடம், உலக அளவில் சொகுசு எஸ்யூவி தயாரிப்பில் புகழ்பெற்ற லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவியும் உள்ளது. இந்த எஸ்யூவியில் 148 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

கஸ்டமைஸ் ஸ்கார்ப்பியோ

கஸ்டமைஸ் ஸ்கார்ப்பியோ

இந்தியாவின் மிகவும் பிரபலமான எஸ்யூவி மாடலான மஹிந்திரா ஸ்கார்ப்பியோவும் டோணி கார் கராஜை அலங்கரிக்கிறது. அலங்கரிக்கிறது என்று கூறுவதற்கு காரணம், டோணி தனது ஸ்கார்ப்பியோவை விசேஷமாக அலங்கரித்து வாங்கி வைத்திருக்கிறார். சமீபத்தில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு இந்த காரில் கலக்கலாக வந்து மீடியாவின் கவனத்தை ஈர்த்தார்.

யமஹா எஃப்இசட்1

யமஹா எஃப்இசட்1

சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது கையோடு சென்னைக்கு இந்த பைக்கை கொண்டு வந்துவிடுவார். மேலும், அவ்வப்போது இந்த பைக்கில் சென்னையை வலம் வருவதும் அவருக்கு ரிலாக்ஸ் தரும் விஷயமாக இருந்தது. இந்த பைக்கில் இருக்கும் 1.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரை அளிக்க வல்லது.

சைக்கிள்

சைக்கிள்

கார், மோட்டார்சைக்கிள் தவிர்த்து சைக்கிளில் செல்வதும் டோணிக்கு பிடித்தமான விஷயம். உடற்பயிற்சிக்காகவும், மைதானங்களுக்கு செல்லும்போதும் சைக்கிளையும் அவ்வப்போது பயன்படுத்துவது டோணியின் வழக்கம்.

Most Read Articles
English summary
Check Out MS Dhoni’s Bike and Car Collections!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X