'தூண்டில்' போட்டு கார் பிடிக்கப்போகும் அமெரிக்க போலீஸ்!

அபாயகரமான கார் சேஸிங் பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில் புதிய கருவி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தை சேர்ந்த லியோனார்டு ஸ்டாக்.

Written By:

போக்குவரத்து விதிமீறுவோரையும், சட்ட விரோத செயல் புரிந்துவிட்டு காரில் தப்புவோரையும் பிடிக்க அமெரிக்காவில் போலீசார் அதிவேகத்தில் காரை சேஸ் செய்யும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.

அவ்வாறு, அதிவேகத்தில் விரட்டிச் சென்று பிடிக்க முயலும்போது, அந்த வழியாக வரும் பிற வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமங்களும், விபத்து அபாயங்களும் ஏற்படுகின்றன. மேலும், போலீசாருகு பயந்து அதிவேகத்தில் கார் ஓட்டி செல்லும் நபர்களும் விபத்தில் சிக்குகின்றனர்.

இந்த அபாயகரமான கார் சேஸிங் பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில் புதிய கருவி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தை சேர்ந்த லியோனார்டு ஸ்டாக்.

தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போல முன்னால் தப்பிச் செல்வரின் காரை பிடிப்பதுதான் இந்த கருவியின் விஷயம். ஆம், போலீஸ் காரில் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு கம்பிகளில் நைலான் கயிறு பின்னப்பட்டிருக்கின்றன.

முன்னால் செல்லும் காரின் சக்கரத்திற்கு இருபுறத்திலும், போலீஸ் காரில் இருக்கும் இரண்டு இரும்பு பட்டைகளும் நுழைக்கப்படுகின்றன. அப்போது, அதில் பின்னப்பட்டிருக்கும் நைலான் கயிறு, முன்னால் செல்லும் காரின் சக்கரத்தில் சுற்றி காரை பிடித்து நிறுத்திவிடும்.

இந்த கருவியின் முக்கிய சிறப்பு, முன்னால் செல்லும் கார் நிலைகுலையாமல் நிறுத்தப்படும் என்பதுதான். அத்துடன், காரில் இருப்பவரையும் எளிதாக பிடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

இந்த கருவியை உருவாக்க 8 ஆண்டுகளாக மெனக்கெட்டு வருவதாக லியனார்டோ கூறியிருக்கிறார். இந்த கருவியை அமெரிக்க போலீசாரும் வெகுவாக பாராட்டி இருக்கின்றனர்.

 

1979ம் ஆண்டிலிருந்து புள்ளிவிபரங்களை வைத்து பார்க்கும்போது போலீசாரின் சேஸிங் நடவடிக்கைகளால் 5,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த புதிய கருவியின் மூலமாக, உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

 

 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
A man from Phoenix, Arizona, who was tired of hearing stories of innocent people dying high-speed police chases has invented a device which could bring an end to it.'
Please Wait while comments are loading...

Latest Photos