ஹோவர்போர்டு மூலம் அதிக தூரம் பறந்து புதிய கின்னஸ் சாதனை!!

விமானம், ஹெலிகாப்டர், பறக்கும் கார் என்று எது வந்தாலும் அது நடைமுறையில் தனி மனித பயன்பாட்டுக்கும், நேரத்திற்கும் ஒத்து வருவதாக இல்லை. நினைத்தவுடன் பறப்பதற்கு ஏதும் வழி இருக்கிறதா என்று ஆராய்ந்ததன் விளைவாக உருவானதுதான் ஹோவர்போர்டு என்ற பறக்கும் பலகை.

ஆனால், நடைமுறையில் ஹோவர்போர்டு வடிவமைப்பில் பல சவால்கள் உள்ளன. சினிமாவில் மட்டுமே கம்ப்யூட்டர் உதவியுடன் காட்டப்பட்ட இந்த ஹோவர்போர்டு இப்போது நிஜ உலகிற்கும் சாத்தியமானதுதான் என்பதை நிரூபித்திருக்கிறார் கனடா நாட்டை சேர்ந்த கேட்டலினா அலெக்ஸாண்டரு டுரு என்பவர்.

ஆம், அவர் சொந்தமாக வடிவமைத்த ஹோவர்போர்டு பறக்கும் பலகையில், அதிக தொலைவு பறந்து புதிய கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். எதிர்கால போக்குவரத்துக்கு புதிய வித்தை விதைத்திருக்கும் இந்த பறக்கும் பலகை பற்றிய கூடுதல் விபரங்கள், படங்கள், வீடியோவை ஸ்லைடரில் காணலாம்.

ஹோவர்போர்டு

ஹோவர்போர்டு

கால்களில் கட்டிக் கொண்டு பறந்து செல்லும் எந்திரம் பொருத்தப்பட்ட பலகை போன்ற சாதனத்தையே ஹோவர்போர்டு என்று அழைக்கின்றனர்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

இதற்கு முன்னர் ஹோவர்போர்டு மூலமாக 162 அடி தூரம் மட்டுமே பயணித்தது சாதனையாக இருந்தது. இப்போது அலெக்ஸான்டரு டுரு சுமார் 905 அடி 2 இன்ச் தூரம் வரை ஹோவர்போர்டு மூலமாக பறந்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பாதுகாப்பு...

பாதுகாப்பு...

இந்த ஹோவர்போர்டு தரை, தண்ணீர் என எந்த விதமான நில அமைப்புகளிலிருந்தும் பறக்க முடியும். ஆனால், கீழே விழுந்தால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, கனடா நாட்டின் கியூபெக் என்ற இடத்தில் உள்ள ஓரியூ ஏரியின் மீது பறந்து சாதனை படைத்திருக்கிறார் அலெக்ஸாண்டரு.

எந்திர கட்டுப்பாடு

எந்திர கட்டுப்பாடு

இந்த ஹோவர்போர்டின் கீழ் பக்கமாக 4 புரொப்பல்லர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த புரொப்பல்லர்களின் உந்துசக்தியின் மூலமாக, அந்த ஹோவர்போர்டு மேலே எழும்பி பறக்கிறது. இதனை கால்கள் மூலமாகவே கட்டுப்படுத்த வேண்டும்.

உயரம்

உயரம்

ஓரியூ ஏரியின் மீது 16 அடி உயரத்தில் தனது ஹோவர்போர்டில் அலெக்ஸாண்டரு பறந்தார். ஆனால், சோதனைகளின்போது இதைவிட அதி உயரமாக பறக்கக்கூடிய வல்லமையை இந்த பறக்கும் பலகை கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

கால்களில் றெக்கை

கால்களில் றெக்கை

அவசரமாக செல்வோரை காலில் றெக்கை கட்டி பறந்து போகிறான் பார் என்று கூறுவதுண்டு. அதுபோன்றவர்களுக்கு இந்த ஹோவர்போர்டு எனும் பறக்கும் பலகை மிகச்சிறந்த போக்குவரத்து சாதனமாக இருக்கும்.

பெருமிதம்

பெருமிதம்

"அதிக தொலைவு ஹோவர்போர்டில் பறந்து சாதனை படைத்திருப்பதன் பெரும் ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கிறது. எதிர்கால போக்குவரத்து முறையில் இந்த பறக்கும் பலகை புரட்சிகர சாதனமாகவும், ஒரு அடித்தளமிடும் சாதனையாகவும் இதனை கருதுகிறேன்," என்று அலெக்ஸாண்டரு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வீடியோ

கின்னஸ் உலக சாதனை வலைப்பூ வெளியிட்டிருக்கும் வீடியோவை காணலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Canadian man Catalin Alexandru Duru has set a Guinness World Record for farthest flight by hoverboard.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X