மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!

வாகனப் பெருக்கத்தால் திக்கித் திணறும் நகரச் சாலைகளில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களால் கால் கடுத்தவர்கள் தற்போது ஆட்டோமேட்டிக் கார்களின் பக்கம் சாய்ந்து வருகின்றனர். இருப்பினும், கார் விரும்பிகளின் கருத்தை கேட்டால், மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்களே சிறந்ததே என்று அடித்து கூறுவர்.

ஆட்டோமேட்டிக், செமி ஆட்டோமேட்டிக், ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் போன்ற கியர்பாக்ஸ் வகைகளால் மேனுவல் கியர்பாக்ஸ் கார்களின் எண்ணிக்கை அருகத் துவங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்களை ஸ்லைடரில் காணலாம்.


அனுகூலங்கள்

அனுகூலங்கள்

மேனுவல் டிரான்ஸ்மிஷனில் இருக்கும் அனுகூலங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் சிக்கனம்

ஆட்டோமேட்டிக் கார்கள் எடை அதிகம் என்பதுடன், அதன் ஹைட்ராலிக் சிஸ்டத்துக்கு எஞ்சின் பவர் உறிஞ்சப்படுவதால், எரிபொருள் சிக்கனம் குறைவாக இருக்கும். ஆனால், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்கள் எடை குறைவு என்பதுடன், ஹைட்ராலிக் சிஸ்டம் கிடையாது என்பதால் அதிக எரிபொருள் சிக்கனம் பெற முடிகிறது. ஆட்டோமேட்டிக் கார்களில் கியர் மாற்றத்தைவிட, மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்களில் சரியான கியரை மாற்றுவது எளிது என்பதுடன் சீக்கிரமாகவே கியர் ஷிப்ட் நடக்கும். இதன் காரணமாக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்களின் மைலேஜ் 20 சதவீதம் வரை அதிகம் இருக்கிறது. தற்போது ஆட்டோமேட்டிக் கார்களின் தொழில்நுட்பம் மேம்பட்டிருப்பதுடன், மேனுவல் கியர்பாக்ஸ் கார்களுக்கு இணையான மைலேஜை சில மாடல்கள் வழங்குகின்றன. அதிலும், ஒன்றிரண்டு கிலோமீட்டர் வித்தியாசம் இல்லாமல் இருக்காது.

கூடுதல் விலை

கூடுதல் விலை

ஆட்டோமேட்டிக் கார்களைவிட மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களின் விலை குறைவாக இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் தினசரி சென்று கிளட்ச்சை மிதித்து கால் கடுத்து அலுத்தவர்களுக்கு வேண்டுமெனில் ஆட்டோமேட்டிக் கார்களை தேர்வு செய்யலாம். ஆனால், நகர்ப்புறம், நெடுஞ்சாலை என இரண்டிலும் சமமாக பயன்பாடு கொண்டவர்களும், நீண்ட தூர பயணத்திற்கு மட்டும் கார் வாங்குவோர்க்கும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிறந்ததே.

3. குதூகலம்

3. குதூகலம்

கார் பிரியர்களுக்கு குதூகலத்தை தருவது மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களே ஆகும். சாலை நிலை, மனநிலைக்கு தக்கவாறு சரியான கியரை மாற்றி நம் விருப்பத்திற்கு செல்லும்போது கிடைக்கும் சுகமே அலாதியாக இருக்கும். பேடில் ஷிப்ட்டர்கள் இந்த வசதியை கொடுத்தாலும், அதனை எலக்ட்ரானிக் யூனிட் கன்ட்ரோல் செய்வதால் சரியான கியரை மட்டுமே தேர்ந்தெடுத்து ஓட்ட முடியும். நம் இஷ்டத்திற்கு கியர் மாற்றும் அனுபவத்தை மேனுவல் கியர்பாக்ஸில் மட்டுமே பெற முடியும்.

4. பராமரிப்பு

4. பராமரிப்பு

எளிய தொழில்நுட்பம் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களின் பராமரிப்பு செலவும் குறைவாக இருப்பதுடன், எந்த இடத்திலும் எளிதாக பழுது நீக்கவும் முடியும். பெரும்பாலான கார்களில் அதிக பராமரிப்பு தேவைப்படாது. அப்படி பராமரிப்பு தேவைப்பட்டாலும், ஸ்பேர் பார்ட்ஸ், பழுது நீக்கும் நேரம், லேபர் சார்ஜ் போன்றவை குறைவு. ஆனால், ஆட்டோமேட்டிக் கார்களின் தொழில்நுட்பம் சற்று சிக்கலானது. மேலும், பழைய ஆட்டோமேட்டிக் கார்களில் பலவற்றில் ஆயில் கசிவு பிரச்னை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பராமரிப்பு செலவு கூடுதலானது.

5 பாதுகாப்பு

5 பாதுகாப்பு

அவசர சமயங்களில் கியரை குறைத்து எஞ்சின் பிரேக்கிங் செய்ய முடியும். பிரேக் மற்றும் கியரை வேகமாக குறைத்து காரை சீக்கிரமாக நிறுத்த முடியும். குறிப்பாக, சரிவான பாதைகளில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களை குறைவான கியரில் வைத்து பாதுகாப்பாக இறக்க முடியும். ஆனால், ஆட்டோமேட்டிக் கார்களில் பிரேக்கை நம்பியே ஓட்ட முடியும்.

6 பெர்ஃபார்மென்ஸ்

6 பெர்ஃபார்மென்ஸ்

விரைவான ஆக்சிலரேஷனை மேனுவல் கியர்பாக்ஸ் கார்கள் சிறப்பாக வழங்கும். இதற்கு இணையான அனுபவத்தை டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கினாலும், அதன் விலை தடைக்கல்லாக அமைந்துவிடுகிறது. தொழில்நுட்பம் படுவேகமாக முன்னேறிய நிலையிலும், பெரும்பான்மையான கார் பந்தய வீரர்கள் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார் மாடல்களையே அதிகம் விரும்புகின்றனர். விரைவான ஆக்சிலரேஷன் மற்றும் காரை கட்டுப்படுத்துவதற்கும் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்கள் சிறந்ததாக இருப்பதே காரணம்.

7. ஸ்டார்ட் ஆகலே...

7. ஸ்டார்ட் ஆகலே...

சில சமயங்களில் கார் செல்ஃப் ஸ்டார்ட் எடுக்கவில்லையெனில், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட காரை நகர்த்தி ஸ்டார்ட் செய்ய முடியும். ஆனால், ஆட்டோமேட்டிக் கார்களில் இது ஆகாது.

பாதகங்கள்

பாதகங்கள்

புதிதாக கார் கற்றுக்கொள்பவர்களுக்கு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களை ஓட்டுவதற்கு சிரமங்கள் இருக்கும். சகஜமாக ஓட்டிச் செல்வதற்கு கூடுதல் காலம் பிடிக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் காரில் மலைச்சாலைகளில் ஏறும்போது காரை நிறுத்தி, மீண்டும் எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து சிலருக்கு கார் பின்னால் உருளும் நிலை ஏற்படும். மலைச்சாலைகளில் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பும்போது, கியர் மாற்றத்தில் சிலருக்கு தடுமாற்றம் எழலாம். கிளட்ச் கட்டுப்படுத்தும் நோக்கில் சிலருக்கு கவனச்சிதறல் ஏற்படலாம். சிலருக்கு கிளட்ச்சை கட்டுப்படுத்துவதால் கால் உபாதை ஏற்படும்.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்களையும், அதன் ஒரு சில பாதகங்களையும் பார்த்தோம். இனி ஆட்டோமெட்டிக் கார்கள் பற்றிய முக்கியமான விஷயங்களை பார்க்கலாம். மிகவும் அவசியமான இந்த விஷயங்களை உங்களுக்கு யாரும் கண்டிப்பா சொல்ல மாட்டாங்க.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

நம் நாட்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களுக்கான வரவேற்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஆட்டோமேட்டிக் கார்கள் வாங்கும்போது சில விஷயங்களை தெரிந்து கொண்டு காரை ஓட்ட துவங்கினால், பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

இத செய்யாதீங்க

அதிக மைலேஜ் கிடைக்கும் என்று கருதி, மலைச் சாலைகள் மற்றும் சரிவான பகுதிகளில் இறங்கும்போது நியூட்ரல் மோடில் வைத்து சிலர் இறக்குகின்றனர். சில வேளைகளில் காரை கட்டுப்படுத்துவதற்கு சிரமமாகிவிடும்.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

இப்போது வரும் ஆட்டோமேட்டிக் கார்கள் இதுபோன்ற சமயங்களில் எரிபொருள் சப்ளையை முற்றிலுமாக தவிர்க்கும் நுட்பத்தை பெற்றிருக்கின்றன. எனவே, எரிபொருள் விரயமாகும் என்ற கூற்றை மனதிலிருந்து எடுத்துவிடுங்கள். மேலும், டிரைவிங் மோடில் வைத்தே ஓட்டுவது பாதுகாப்பானது.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

நியூட்ரல் மோடு

கார் வேகம் குறைந்து நிறுத்துவதற்கு முன்பாகவே சிலர் டிரைவிங் மோடிலிருந்து நியூட்ரல் மோடிற்கு கியரை மாற்றிவிடுகின்றனர். ஆனால், இது மிகவும் தவறான செயல்.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

கார் ஓடிக் கொண்டிருக்கும்போது நியூட்ரலுக்கு மாற்றும்போது கியர்பாக்ஸ் உதிரிபாகங்களில் அதிக உராய்வு ஏற்பட்டு சீக்கிரமாகவே தேய்மானம் அடையும். கார் முற்றிலும் நின்றவுடன்தான் டிரைவிங் மோடிலிருந்து நியூட்ரல் கியருக்கு மாற்ற வேண்டும்.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

ஹேண்ட்பிரேக்

பலரும் பார்க்கிங் மோடில் வைத்து காரை நிறுத்திவிட்டு செல்கின்றனர். பார்க்கிங் மோடில் வைத்தவுடன், கார் நகராது என்று கருதி இவ்வாறு செய்கின்றனர்.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

பார்க்கிங் கியர் மோடில் வைத்திருந்தாலும், கூடவே ஹேண்ட் பிரேக்கையும் போட்டு வைப்பதுதான் பாதுகாப்பான வழி. பார்க்கிங் கியர் மோடு வழங்குவதை விட அதிக பிடிப்பை ஹேண்ட்பிரேக் வழங்கும்.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

வகைகள்

ஏஎம்டி, சிவிடி, டிஎஸ்ஜி என இப்போது பல வகைகளில் ஆட்டோமேட்டிக் கார்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு காருக்கும் ஓட்டும்போது சில வித்தியாசங்கள் இருக்கும். ஏஎம்டி கார்களில் ஹைட்ராலிக் முறையில் கியர் மாற்றம் நடப்பதால், சிறிய அதிர்வு தெரியும்.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

எனவே, ஆட்டோமேட்டிக் கார்களின் இயக்கத்தன்மையை புரிந்து கொண்டு, அது பிடிபடும் வரை கவனமாக ஓட்டுவது சிறந்தது.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

ஓவர்டேக்

மேனுவல் கார்களில் ஓவர்டேக் செய்யும்போது சற்று எளிதாக இருக்கும். ஆனால், புதிதாக ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டும்போது ஓவர்டேக் செய்வதில் மிகுந்த கவனம் தேவை.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

மேனுவல் கார்களை விட சில ஆட்டோமேட்டிக் கார்கள் பிக்கப் சற்று மந்தமாக இருக்கும். எனவே, அதனை கணித்து ஓவர்டேக் செய்வது நல்லது. இல்லையெனில், விபரீதத்தில் முடியும் அபாயம் இருக்கிறது.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

அடிப்படை விஷயம்

மேனுவல் கார்களை ஓட்டியிருந்தாலும் கூட புதிதாக ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டுபவர்கள் பொதுவான தவறு ஒன்றை செய்கின்றனர். அதாவது, ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டும்போது பிரேக் பெடலுக்கு இடது காலையும், ஆக்சிலரேட்டர் பெடலுக்கு வலது காலையும் பயன்படுத்துகின்றனர் இது தவறு.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

ஆட்டோமேட்டிக் கார்களில் பிரேக் பெடல் மற்றும் ஆக்சிலரேட்டர் பெடலுக்கு வலது காலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இடதுகாலுக்கு இங்கு வேலையில்லை. ஆக்சிலரேட்டர் பெடலில் கால் இருக்கும்போது பிரேக் பெடலில் மற்றொரு கால் இருக்கக்கூடாது. இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம்கூட.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

எஞ்சின் ரேவ்

மேனுவல் கியர்பாக்ஸ் போன்று நியூட்ரலில் வைத்து ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார் ஆக்சிலரேட்டரை அதிகம் கொடுத்து ரேவ் செய்ய வேண்டாம். இது நிச்சயம் கியர்பாக்ஸ் மற்றும் எஞ்சினில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

சிக்னலில்...

சிக்னலில் நிற்கும்போது கார் நியூட்ரல் மோடிற்கு மாற்றலாம். இது எல்லா ஆட்டோமேட்டிக் கார்களுக்கும் பொருந்தாது. ஆனால், சிக்னலில் நிற்கும்போது பார்க்கிங் மோடில் மட்டுமே வைக்க வேண்டாம். இது கியர்பாக்ஸ் பாகங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

டிராஃபிக்கில்...

ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டும்போது டிராஃபிக்கில் ஆக்சிலரேட்டரை அதிகம் கொடுக்க தேவையில்லை. பிரேக் பெடலை லேசாக விட்டாலே கார் தானாக நகரும். இதற்கு தக்கவாறே ஐட்லிங் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும்.

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!

நிதானம்...

ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டும்போது அவசரப்படாமல் நிதானமாக இயக்கினால் மிகச் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை தரும். எந்த காராக இருந்தாலும், புதிதாக ஓட்டும்போது சில வாரங்கள் வரை அதன் இயக்கத்தன்மை பிடிபடும் வரை நிதானமாக ஓட்டுவது நல்லது.

Most Read Articles
English summary
Manual transmissions still have a number of important advantages over their increasingly popular automatic counterparts, that everyone should know about. Let's take a look at the reasons why we should continue to er, read the manual.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X