பார்முலா-1 போட்டியில் கார் சக்கரம் மோதி கேமராமேன் காயம்

By Saravana

பார்முலா-1 கார் பந்தய போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பார்முலா-1 போட்டிகள் 19 சுற்றுகளாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில், 9வது சுற்று பார்முலா-1 கார் பந்தயம் நேற்று ஜெர்மனியில் நடந்தது.

புகழ்பெற்ற நர்பர்க்ரிங் ரேஸ் டிராக்கில் இந்த போட்டிகள் நடந்தன. பந்தய தூரம் 308.623 கிமீ ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கம்போல் வீரர்கள் ஒருவரையொருவர் சளைக்காமல் தங்களது கார்களை மின்னல் வேகத்தில் செலுத்தினர்.

Formul;a 1 car tyre flies off

ரெட்புல் அணியை சேர்ந்த ஆஸ்திரேலிய வீரர் மார்க் வெப்பர் தனது காரை பிட் ஸ்டாப் பகுதிக்குள் நிறுத்துவதற்காக செல்ல முயன்றார். அப்போது திடீரென அவரது காரின் வலது பக்க பின்புற டயர் திடீரென தனியாக கழன்று அந்தரத்தில் பறந்து சென்றது.

இரண்டு முறை தரையில் பட்டு எழும்பி சென்ற அந்த டயர் ரேஸ் டிராக் அருகில் நின்றிருந்த கேமராமேன் ஒருவர் மீது மோதியது. அதில், அந்த கேமராமேனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், மார்க் வெப்பரின் கார் விபத்தில்லாமல் தப்பியது.

இதுதொடர்பாக, பாதுகாப்பு குறைவாக காரை சரிவர சோதனை செய்யாமல் அனுப்பியதற்காக ரெட்புல் அணிக்கு 30,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது.

விறுவிறுப்பாக நடந்து முடிந்த இந்த போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த ரெட்புல் அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதலிடத்தை பிடித்தார். இதுவரை நடந்த அனைத்து சுற்றுக்களையும் சேர்ந்து அவர் 157 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

லோட்டஸ்- ரினால்ட் அணி வீரர் கிமி ரெய்க்கோனன் இரண்டாவது இடத்தையும், பிரான்ஸ் வீரர் ரோமைன் குரோஜியன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

Most Read Articles
English summary
A tire flies from the Red Bull driver Mark Webber car as he backs to pits during the German Formula One Grand Prix at the Nuerburgring racetrack, in Nuerburg, Germany, Sunday, July 7, 2013. Red Bull driver Mark Webber of Australia lost a wheel when he left his first pit stop too soon and finished seventh after dropping to the back of the field. The flying wheel struck British cameraman Paul 
Story first published: Monday, July 8, 2013, 12:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X