மாருதி பெலினோ ஆர்எஸ் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து- படங்கள்!

Written By:

மார்க்கெட்டில் சிறந்த வரவேற்பை பெற்றிருக்கும் பிரிமியம் ஹேட்ச்பேக் ரக கார் மாருதி பெலினோ. கடந்த மாதம் மாருதி பெலினோ காரின் சக்திவாய்ந்த மாடலாக பெலினோ ஆர்எஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிகச் சரியான விலையில் வந்திருப்பதால் இந்த மாடலுக்கும் வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், கேரளாவில் மாருதி பெலினோ ஆர்எஸ் கார் ஒன்று வாங்கிய சில நாட்களிலேயே விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வார இறுதியில் நடந்த இந்த விபத்து படங்களை ரஷ்லேன் தளத்தின் வாசகர் ஒருவர் படம் பிடித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் தெரிவித்த தகவலின்படி, சாலையில் குறுக்கே வந்த நாய் ஒன்றை காப்பாற்றுவதற்காக, மாருதி பெலினோ ஆர்எஸ் காரை ஓட்டி வந்தவர், அவசரமாக காரை திருப்பி இருக்கிறார். அப்போது அந்த கார் சாலை தடுப்பில் மோதி கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

அத்துடன், சாலையில் பல்டி அடித்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டி வந்தவர் லேசான காயங்களுடன் தப்பி விட்டார். அதேநேரத்தில், கார் அதிக சேதமடைந்தது.

இருப்பினும், காருக்குள் இருந்தவர்களுக்கு அதிக பாதுகாப்பு இருந்தது இந்த விபத்தின் மூலமாக தெரிய வந்துள்ளது. அதாவது, கார் கடுமையாக சேதமடைந்த போதிலும், காருக்குள் இருந்தவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்ததாத வகையில் அந்த காரின் உடற்கூடு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

விபத்தில் சிக்கிய மாருதி பெலினோ ஆர்எஸ் காரில் முன்புற பம்பர் மற்றும் ஆக்சில் போன்றவை கடுமையாக சேதமடைந்தது. பின்புற விண்ட்ஸ்கிரீன், பின்புற கதவு, பம்பரும் நசுங்கியுள்ளன. இதனால், அதிக சேதத்தை அந்த கார் சந்தித்துள்ளது. அதேநேரத்தில், பயணிகள் பாதுகாப்பில் சிறந்ததாக அறிய வாய்ப்பு கிட்டி இருப்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது.

மாருதி பெலினோ ஆர்எஸ் கார் சாதாரண மாடலைவிட 60 கிலோ கூடுதல் எடை கொண்டது. பல கூடுதல் ஆக்சஸெரீகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் சக்திவாய்ந்த 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

Via- Rushlane

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Maruti Baleno RS First Crash Reported In Kerala.
Please Wait while comments are loading...

Latest Photos