லம்போர்கினி சூப்பர் கார் வாங்கிய இந்தியாவின் முதல் பெண்!

By Saravana

இந்தியாவில் லம்போர்கினி சூப்பர் காரை வாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை கொல்கத்தா நகரை சேர்ந்த ஷீத்தல் துகர் பெற்றிருக்கிறார்.

பெயரளவில் சூப்பர் கார் வாங்கிக் கொண்டு, அவரது கணவர் இந்த காரை ஓட்டலாம் என்று கருதுவதற்கு அவர் வாய்ப்பே கொடுக்கவில்லை. ஏனெனில், கொல்கத்தாவில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொள்ளும் நட்சத்திர பெண்மணியாகவும் வலம் வருகிறார்.

 கொல்கத்தாவாசி...

கொல்கத்தாவாசி...

கொல்கத்தாவை சேர்ந்த ஷீத்தல் இல்லத்தரசி. அவரது கணவர் வினோத் துகர் தொழிலதிபர். தற்போது 40 வயதாகும் ஷீத்தல் 19 வயதில் வினோத் துகரை காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

 கார் ஓட்ட தெரியாது...

கார் ஓட்ட தெரியாது...

திருமணமான போது ஷீத்தலுக்கு கார் ஓட்ட தெரியாதாம். திருமணத்திற்கு பின்னர்தான் கணவரின் துணையுடன் மாருதி ஸென் காரை ஓட்டி பழகியிருக்கிறார். அதன்பிறகு கணவரே வியக்கும் விதத்தில் அவரது கார் ஓட்டும் கலை மாறிப்போனது பெரும் கதை.

பிறந்தநாள் பரிசு

பிறந்தநாள் பரிசு

வீட்டில் எலியாகவும், கார் ஓட்டும்போது புலியாகவும் மாறும் ஷீத்தலுக்கு சரியான ஒரு காரை பிறந்தநாள் பரிசாக தர அவரது கணவர் வினோத் விரும்பினார். அதற்காக, அவர் தேர்வு செய்தது லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார்.

முதல் பெண்

முதல் பெண்

கணவர் வினோத் பிறந்தநாள் பரிசாக தந்த இந்த சூப்பர் கார் ஷீத்தலை திக்குமுக்காட செய்தது. மேலும், இந்தியாவில் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.

பந்தயங்களி்ல அசத்தும் ஷீத்தல்

பந்தயங்களி்ல அசத்தும் ஷீத்தல்

கொல்கத்தாவில் பிரபலமான 'கிளப் ஜிடி' என்ற சூப்பர் கார் அமைப்பு, அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை எண் - 2ல் நடத்தும் விசேஷ கார் பந்தயங்களில் ஷீத்தல் அசத்தி வருகிறார். அவரை பல அசகாய ஆண் டிரைவர்கள் கூட பிடிக்க முடிவதில்லையாம்.

பவர்ஃபுல் கார்

பவர்ஃபுல் கார்

லம்போர்கினி ஹூராகென் காரில் இருக்கும் 5.2லிட்டர் வி10 எஞ்சின் அதிகபட்சமாக 610 பிஎஸ் பவரையும், 560 என்எம் டார்க்கையும் வழங்கும்.

செயல்திறன்

செயல்திறன்

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிப் பிடிக்கும் வல்லமை கொண்டது. ஏற்கனவே பவர்ஃபுல் கார்களை ஓட்டிய அனுபவத்தில் இந்த காரை வெகு அழகாக கட்டுப்படுத்த தெரிந்து கொண்டிருக்கிறாராம் ஷீத்தல்.

அதிகபட்ச வேகம்

அதிகபட்ச வேகம்

கொல்கத்தா சாலைகளில் அடிக்கடி பறக்கும் இந்த கார் மணிக்கு 325 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

கார் விலை

கார் விலை

ரூ.3.32 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் லம்போர்கினி ஹூராகென் கார் கிடைக்கிறது. ஆன்ரோடு விலை ரூ.4 கோடிக்கு நெருக்கமாக இருக்கும்.

பிரத்யேக வண்ணம்

பிரத்யேக வண்ணம்

ஷீத்தல் வாங்கியிருக்கும் தங்க வண்ண லம்போ ஹூராகென் காரின் வண்ணம் மிகவும் பிரத்யேகமானது. இதனை ஒரா எலியோஸ் என்று லம்போர்கினி நிறுவனம் குறிப்பிடுகிறது.

Source

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Meet the India's First Woman Lamborghini Customer.
Story first published: Thursday, June 2, 2016, 10:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X