சிறந்த ஏடிவி., டிரக் விருதை 11வது முறையாக வென்ற பென்ஸ் யூனிமாக்!

2015ம் ஆண்டுக்கான சிறந்த ஏடிவி., ரக டிரக் விருதை மெர்சிடிஸ் பென்ஸ் யூனிமாக் வென்றிருக்கிறது. இந்த விருதை 11வது முறையாக பென்ஸ் யூனிமாக் பெற்றிருக்கிறது.

விசேஷ ரக வாகனங்களுக்கான இந்த விருதை தொடர்ந்து பெற்று வரும் யூனிமாக் டிரக்கின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பெயர் காரணம்

பெயர் காரணம்

Universal Motor Gerat என்பதன் சுருக்கம்தான் யூனிமாக். இதில், Gerat என்பது ஜெர்மானிய மொழியில் எந்திரம் அல்லது சாதனம் என்று பொருள்படுகிறது.

வேகம்

வேகம்

மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லும் அம்சங்Kளை கொண்டிருக்கிறது. இது அனைத்து சாலை நிலைகளுக்கும் ஏற்றதாகவும், கடுமையான ஆஃப்ரோடு சாகச பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய வாகனமாகவும் சிறப்பு தகவமைப்புகளை பெற்றிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

அதிக முறுக்குவிசையை வெளிப்படுத்தக்கூடிய எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளதால், எந்தவொரு சாலை நிலையையும் எளிதாக கையாளும்.

அப்படியா...

அப்படியா...

இந்த வாகனத்தை நீர் நிலைகளில் 800மிமீ ஆழம் வரை செலுத்த முடியும். அதற்கு ஏற்ற வகையில், டிரைவ் சிஸ்டம் மற்றும் தண்ணீர் புகாத வசதியுடன் பாகங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இது ஒன்றரை அடி தரை இடைவெளி கொண்டது. மேலும், 20 இன்ச் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதுடன், சரிவான சாலைகளில் எளிதாக ஏறும் வகையிலான விசேஷமான டிசைனிலான டயர்கள் உள்ளன. இதன் மொத்த எடை 12 டன் வரை அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

மோட்டார் ஸ்போர்ட்ஸ்

மோட்டார் ஸ்போர்ட்ஸ்

1980கள் வரை டக்கார் ராலி பந்தயத்தில் பங்கெடுத்தது. ஆனால், அடிக்கடி விபத்துக்குள்ளானதால், தற்போது சப்போர்ட் வெகிக்கிள் எனப்படும் பந்தயங்களில் உதவிக்கான வாகனங்களாக பயன்படுத்தப்படுகின்றன.

 வரலாறு

வரலாறு

1940களிலிருந்து இந்த வாகனத்தின் வரலாறு தொடங்குகிறது. 1946ல் முதல் புரோட்டோடைப் மாடல் வெளியிடப்பட்டது. 1951ல் உற்பத்தி துவங்கியது. ராணுவம், மீட்புப் பணி, சாகச பயணங்கள் போன்றவற்றிற்கு ஓர் சிறந்த டிரக் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் யூனிமாக் கருதப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The 2015 Mercedes-Benz Unimog has just bagged this year's Best Cross Country Vehicle award for the eleventh time in a row, by a 30,000-participant-strong reader poll conducted by Off Road magazine. The Unimog won this honour in the Special Vehicles Category.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X