நெல்சன் மண்டேலாவும், நிறவெறி மன(ண)ம் இல்லாத பென்ஸ் காரும்..!!

உலகின் ஒப்பற்ற போராளியாகவும், தியாகியுமாக புகழப்பெறும் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவு உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் காந்திய வழியிலும், பின்னர் நேதாஜி வழியையும் கையாண்டு தென் ஆப்ரிக்காவில் மக்களாட்சி மலர காரணமாக இருந்த நெல்சன் மண்டேலாதான் உலக அளவில் அதிக சிறைவாசம் அனுபவித்த தலைவராக கருதப்படுகிறார்.

27 ஆண்டுகலாம் சிறைவாசம் அனுபவித்து தனது 71-வது வயதில் அவர் வெளியே வந்த அன்றைய தினம் மிகவும் உணர்ச்சிகரமானது. அந்த தருணத்தில் அவருக்கு பென்ஸ் தொழிலாளர்கள் வழங்கிய பிரத்யேக பென்ஸ் கார் பற்றிய தகவல்களை இந்த நேரத்தில் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

உணர்ச்சியின் வெளிப்பாடு

உணர்ச்சியின் வெளிப்பாடு

தென் ஆப்ரிக்காவின் தந்தையாக அழைக்கப்படும் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகளாக சிறைவாசத்தை விட்டு வெளியில் வந்த தருணம் அந்நாட்டு கருப்பின மக்களிடையே மிக உணர்ச்சி மிக்கதாக இருந்தது. அந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக தென் ஆப்ரிக்க பென்ஸ் தொழிலாளர்கள் மண்டேலாவுக்கு கார் ஒன்றை பரிசளிக்க விரும்பினர்.

கார் மாடல்

கார் மாடல்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அப்போதைய உயர் ரக மாடலாக இருந்த எஸ் கிளாஸ் 500 காரின் டபிள்யூ126 என்ற டாப் வேரியண்ட் அவருக்கு பரிசாக கொடுக்க தீர்மானித்தனர். இதுதொடர்பாக, கருப்பின தொழிற்சங்கத் தலைவர்கள் மூலமாக மெர்சிடிஸ் பென்ஸ் தலைமையகத்துக்கு கோரிக்கை அனுப்பினர்.

பச்சைக் கொடி

பச்சைக் கொடி

நிறவெறி கொள்கை இல்லாமல் செயல்பட்டு வந்த ஒரு சில கார் நிறுவனங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் ஒன்று. தென் ஆப்ரிக்க தொழிலாளர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்றதுடன் அந்த காருக்கான பாகங்களை உடனே அனுப்பி வைத்தது.

பிரத்யேக மாடல்

பிரத்யேக மாடல்

தென் ஆப்ரிக்க பென்ஸ் ஆலை தொழிலாளர்கள் பிலிப் க்ரூம் என்பவர் தலைமையில் இந்த காரை இரவு பகல் பாராமல் மிக கவனமாகவும், ஆர்வமுடனும் மண்டேலாவுக்காக வடிவமைத்தனர். 4 நாட்களில் இந்த காரை அசெம்பிள் செய்தனர்.

 பரிசு

பரிசு

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த காரை 1990ம் ஆண்டு ஜூலை 22ந் தேதி சிசா துகாசே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிலிப் க்ரூம் என்ற தொழிலாளி நெல்சன் மண்டேலாவுக்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காரை பரிசாக வழங்கினார்.

செல்லப் பெயர்

செல்லப் பெயர்

மடிபா என்ற நெல்சன் மண்டேலாவின் செல்லப் பெயரில் இந்த காரை மடிபா மெர்க் என்று அழைத்தனர்.

பிரத்யேக எண்

பிரத்யேக எண்

நெல்சன் ரோபிசலா மண்டேலா என்ற அவரது முழுப்பெயரின் சுருக்கத்துடன் நம்பர் பிளேட்டில் '999 NRM GP' என்ற பதிவு எண் கொண்டதாக இந்த கார் அவருக்கு வழங்கப்பட்டது.

மியூசியத்தில்...

மியூசியத்தில்...

ஜோகனஸ்பர்க் நகரிலுள்ள அபார்தீட் அருங்காட்சியகத்தில் இந்த கார் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நிறவெறியை தகர்த்த மண்டேலாவின் தியாகத்துக்கு கிடைத்த பரிசாக தன்னை பரைசாற்றி நிற்கும் இந்த கார் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது என்றால் மிகையில்லை.

Most Read Articles
English summary
Nelson Mandela, the last living icon from the pre colonial era, turned 95 on July 18th. Did you know that the legendary revolutionary, also considered the father of the nation within South Africa has a strong relation with the German auto giant Mercedes Benz.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X