கப்பலிலிருந்து கடலுக்குள் விழுந்த 4 கோடி ரூபாய் பென்ஸ் கார் கசாப்புக்கு சென்றது!

By Saravana

வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுப்பதற்காக சரக்குக் கப்பலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி மதிப்புடைய புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் கடலில் விழுந்தது. 5 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட அந்த கார் மிகவும் மோசமடைந்ததால் அதனை உடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் இருந்து அர்ஜெண்டினாவை சேர்ந்த வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுப்பதற்காக அந்த கார் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, ரியோ டி லா பிளாட்டா என்ற இடத்தில் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது கார் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் சரிந்து கடலில் விழுந்துவிட்டது.


மீட்கப்பட்ட கார்

மீட்கப்பட்ட கார்

கடலுக்குள் விழுந்த கன்டெய்னரை 5 நாட்கள் கழித்து மீட்டுள்ளனர்.

சேதம்

சேதம்

ஆனால், கன்டெய்னருக்குள் கடல் நீர் புகுந்ததால் கார் அதிக சேதமடைந்துவிட்டது.

ஆய்வு

ஆய்வு

காரை ஆய்வு செய்த இன்ஸ்யூரன்ஸ் நிறுவன எஞ்சினியர்கள் கடல் நீரால் கார் முழுவதும் சேதமடைந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்.

எலக்ட்ரிக்கல் அவுட்

எலக்ட்ரிக்கல் அவுட்

தவிர, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் அனைத்தும் முழுவதுமாக சேதமைடந்துவிட்டது.

உடைக்க முடிவு

உடைக்க முடிவு

கார் முழுவதுமாக சேதமடைந்துவிட்டதால் அந்த புத்தம் புதிய காரை உடைக்க முடிவு செய்துள்ளனர்.

வாடிக்கையாளர் ஏமாற்றம்

வாடிக்கையாளர் ஏமாற்றம்

அந்த காருக்கு 4ல் ஒரு பங்கு தொகையை செலுத்தி முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர் தகவலறிந்து ஏமாற்றம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் எப்போது?

சம்பவம் எப்போது?

கடந்த ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால், தற்போதுதான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உலர்த்தியும் பலனில்லை

உலர்த்தியும் பலனில்லை

கார் மீட்கப்பட்டு 5 நாட்கள் வெயிலில் நிறுத்தி உலர்த்தியுள்ளனர். இருப்பினும் பலனில்லாமல்தான் காரை உடைக்க முடிவு செய்துள்ளனர்.

Source: Autoblog

Most Read Articles
Story first published: Friday, June 27, 2014, 12:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X