100 கிமீ வேகத்தில் பஸ்சில் மோதிய ஃபெராரி கார்... ஓட்டியவர் உயிர் தப்பிய அதிசயம்

ஐக்கிய அரபு நாட்டில் முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சின் பின்புறம் ஃபெராரி கார் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஃபெராரி காரை ஓட்டி வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விரைந்து வந்த போலீசார் ஃபெராரி காரில் சிக்கியிருந்த 20வயது மதிக்கத்தக்க இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் காயமடைந்த மற்றொருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அதிவேகம்

அதிவேகம்

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் அஜ்மான் என்ற இடத்திலுள்ள ஷேக் சயீத் என்ற சாலையில் 100 கிமீ.,க்கும் தாண்டிய வேகத்தில் ஃபெராரி கலிஃபோர்னியா கார் ஒன்று பறந்து வந்தது.

விபத்து

விபத்து

அதிவேகத்தில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த ஃபெராரி கலிஃபோர்னியா கார் சாலையில் சென்று கொண்டிருந்த 4 வாகனங்கள் மீது அடுத்தடுத்த மோதியுள்ளது. அத்தோடு நில்லாமல், சென்ற வேகத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சின் பின்பகுதிக்குள் சொருகிக் கொண்டது.

 சேதம்

சேதம்

பஸ்சின் பின்பகுதியில் சொருகிய ஃபெராரி கார் சுக்குநூறானது. தகவலறிந்து வந்த போலீசார் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது அந்த காரை ஓட்டி வந்த இளைஞர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடுவதை கண்டு, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த ஃபெராரி கார் மோதியதில் மற்றொரு கார் டிரைவரும் காயமடைந்தார். அவரும் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

Source: 7daysindubai

Most Read Articles
English summary
A speeding Ferrari driver has escaped serious injury in a horrific car crash in UAE.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X