காணாமல் போன எம்.எச்.370 மலேசிய விமானம் பற்றி விஞ்ஞானிகள் புதிய தகவல்!

2014ம் ஆண்டு மர்மமான முறையில் காணாமல் போன எம்.எச்.370 விமானம் எங்கு விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் குழு கணித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர்.

By Azhagar

காணாமல் போன மலேசிய நாட்டின் எம்.எச்.370 விம்மானத்தின் உடைந்த பாகங்கள் தேடப்பட்ட வந்த இடத்திற்கு அப்பால் உள்ள வடக்கு பகுதியில் விமானம் விழுந்திருக்கலாமென, அதற்குரிய சான்றுகளுடன் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன எம்.எச்.370 விமானம் குறித்து புதிய ஆய்வு

2014ம் ஆண்டில் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 239 பயணிகளுடம் சென்ற எம்ஹெச்370 விமானம் நடுவானில் பறந்துகொண்டுயிருந்தபோது காணாமல் போய்விட்டது.

காணாமல் போன எம்.எச்.370 விமானம் குறித்து புதிய ஆய்வு

மிக மர்மமான முறையில் காணாமல் போன இந்த விமானம் எங்கு மறைந்தது, கடலில் விழுந்துவிட்டதா, அதில் பயணம் செய்த 239 பயணிகளின் நிலை என்ன, விமானத்தில் ஏற்பட்ட கோளாறு தான் என்ன? என்பன போன்ற எந்த தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை.

காணாமல் போன எம்.எச்.370 விமானம் குறித்து புதிய ஆய்வு

உலகளவில் பரபரப்பு செய்தியான காணாமல் போன இந்த விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டன. மூன்று நாடுகளாலும் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

காணாமல் போன எம்.எச்.370 விமானம் குறித்து புதிய ஆய்வு

இந்நிலையில் அஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், கடந்த ஜனவரி மாதம், எம்ஹெச்370 விமானத்தின் தேடும் பணிகளை நிறுத்திக்கொள்வதாக ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா நாடுகள் அறிவித்தன.

காணாமல் போன எம்.எச்.370 விமானம் குறித்து புதிய ஆய்வு

போயிங் 777 ரக எம்.ஹெச்.370 விமானத்தை தேடும் பணியில் இதுவரை மூன்று நாடுகளும் 160 மில்லியன் டாலர்கள் வரை செலவு செய்துள்ளது. ஆனால் தேடுதல் பணியில் துரும்பளவு கூட முன்னேற்றம் ஏற்படவில்லை.

காணாமல் போன எம்.எச்.370 விமானம் குறித்து புதிய ஆய்வு

இந்நிலையில் தேடுதல் பணி நிறுத்திக்கொள்ளப்படுவதற்கு முன்னதாக, அதுவரை நடைபெற்று வந்த தேடுதல் பணிகளை குறித்த அறிக்கையை மூன்று நாடுகளும் சேர்ந்த கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது.

காணாமல் போன எம்.எச்.370 விமானம் குறித்து புதிய ஆய்வு

இதற்கு பிறகு ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் குழுவினர், தேடுதல் பணியின் போது கிடைத்த எம்.எச். 370 விமானத்தின் பாகங்களை வைத்து மாதிரி பாகங்கள் உருவாக்கப்பட்டு, அவை நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டால் விமானத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற ஆய்வை மேற்கொண்டனர்.

காணாமல் போன எம்.எச்.370 விமானம் குறித்து புதிய ஆய்வு

இந்த ஆய்வு முடிவில் காணாமல் போன எம்.ஹெச்.370 விமானம் தேடுதல் பணிகள் நடைபெற்ற இந்திய பெருங்கடலின் தென் பகுதிக்கு அப்பால், வடக்கில் 25 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கடற்பரப்பில் காணப்படலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

காணாமல் போன எம்.எச்.370 விமானம் குறித்து புதிய ஆய்வு

விமானத்தின் மாதிரியை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வை விட, தேடுதல் பணியின் போது ரீயுனியன் தீவில் கிடைத்த எம்.ஹெச்.370 விமானத்தின் இறகு பாகங்களைக் கொண்டு சோதனை நடத்தப்பட்ட போது இந்த முடிவை துல்லியமாக கணிக்க வைத்திருப்பதாக ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் டாக்டர் டேவிட் கிரிப்ஃபின் தெரிவித்திருக்கிறார்

காணாமல் போன எம்.எச்.370 விமானம் குறித்து புதிய ஆய்வு

மேலும் அவர், விமானத்தின் உண்மையான இறகுப்பகுதி, மாதிரியை விட 20 டிகிரி இடதுப்புறத்தில் வேகமாக செல்வதை தாங்கள் நினைத்தது போலவே கண்டறிந்ததாக டாக்டர் கிரிப்ஃபின் கூறியுள்ளார்.

காணாமல் போன எம்.எச்.370 விமானம் குறித்து புதிய ஆய்வு

விஞ்ஞானி கிரிப்ஃப் இவ்வாறு உறுதியாக கூறுவதற்கு ஒரு சான்றுள்ளது, காணாமல் போன எம்.எச். 370 விமானத்தின் இறகுப்பகுதி அவர் குறிப்பிடக்கூடிய இடத்திலிருந்து தான் கிடைத்தது, அந்த இடம் தான் ரியூனியன் தீவு.

காணாமல் போன எம்.எச்.370 விமானம் குறித்து புதிய ஆய்வு

இதுகுறித்து ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா போன்ற நாடுகள் கூட்டாக பேசி மீண்டும் போயிங் 377 ரக எம்.எச். 370 விமானத்தின் தேடும் பணிகளை துவங்கும் என பல உலகுநாடுகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Missing malayasia mh370 new analysis of suggests that flight is most likely located to the north of a main search zone.
Story first published: Saturday, April 22, 2017, 9:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X