டாடா நிறுவனர் ரத்தன் டாடாவின் கவனத்தை ஈர்க்குமா இந்த ‘நானோ’ ஆட்டோ?

Written By:

ஒரு வாகனத்தை அப்படியே உபயோகிக்காமல் அதில் கூடுதலாக தோற்றத்திலும், அம்சங்களிலும் கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தி தங்கள் இஷ்டம் போல மாடிஃபை அல்லது கஸ்டமைஸ் செய்வதை சிலர் விருப்பமாக கொண்டிருக்கின்றனர்.

கஸ்டமைஸ் செய்வதில் ஆர்வம் கொண்ட சிலர் வாகனத்தின் விலையைக் காட்டிலும் கூடுதலாக செலவிட்டு தங்கள் வாகனத்தை தங்களின் எண்ணம் போல மாற்றியமைத்துக்கொள்கின்றனர்.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் கூட நம் டிரைவ் ஸ்பார்க் தளத்தில் ஒரு ஆட்டோ டிரைவர் தன்னுடைய ஆட்டோவின் பின்பகுதியை மஹிந்திரா ஸ்கார்பியோ கார் போல மாற்றியமைத்ததை கண்டோம்.

ஸ்கார்பியோ காரின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாகவே, தன்னுடைய சொற்ப வருமானத்திலும் ஸ்கார்பியோ கார் போலவே தன் ஆட்டோவையும் மாற்றியமைத்திருந்தார் அந்த ஆட்டோ ஓட்டுநர்.

ஸ்கார்பியோ போல மாற்றியமைக்கப்பட்ட அந்த ஆட்டோ சமூகவலைத்தளவாசிகளை மிகவும் ஈர்த்தது. அதன் ஃபோட்டோக்கள் பலராலும் ஷேர் செய்யப்பட்டன.

ஸ்கார்பியோ தோற்றம் கொண்ட ஆட்டோவால் ஈர்க்கப்பட்ட வலைவாசி ஒருவர், இந்த புகைப்படங்களை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவிற்கு டேக் செய்து ட்வீட் செய்தார்.

ஸ்கார்பியோ டிசைன் எந்த அளவுக்கு இந்தியர்களை கவர்ந்துள்ளது என்று இந்த படங்கள் உணர்த்தும் என்று ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து அதில் ட்வீட் செய்திருந்தார் அந்த வலைவாசி.

மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா, அந்த ஸ்கார்பியோ ஆட்டோவால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

அந்த ஆட்டோ ஓட்டுநரை கண்டறிந்து, அவரிடமிருந்து அந்த ஆட்டோவை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக புதிய சுப்ரோ வாகனத்தை பரிசாக அளித்தார் ஆனந்த் மஹிந்திரா.

இந்த நெகிழ்ச்சியான சம்வவம் நடக்க காரணமாக இருந்த ஸ்கார்பியோ ஆட்டோவை வடிவமைத்து ஓட்டிய ஆட்டோ ஓட்டுநர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.

கேரள ஆட்டோக்காரர்கள் கஸ்டமைஸ் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள் போலும். தற்போது கேரளாவில் ஸ்கார்பியோ ஆட்டோவை மிஞ்சும் கஸ்டமைஸ் ஆட்டோ ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆட்டோ டிரைவர் டாடா நிறுவனத்தின் நானோ கார் ரசிகராக இருப்பார் என்பது தெளிவாகிறது. தனது ஆட்டோவை அப்படியே நானோ கார் போலவே மாற்றியமைத்துள்ளார்.

இன்னும் சொல்லப்போனால், நானோ காரைக் காட்டிலும் மிகவும் கச்சிதமாகவும், கவர்ச்சிகரமாகவும் இவரின் ‘நானோ ஆட்டோ' காட்சியளிக்கிறது.

இந்த நானோ ஆட்டோவின் முன்புறமும், பின்புறமும் நானோ கார் போலவே மாற்றப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பாக இந்த ஆட்டோவுக்கு நீலம் மற்றும் கருப்பு கலந்த டூயல் டோனில் பெயிண்டிங் செய்துள்ளனர்.

மேட் ஃபினிஷிங்கில் ஆட்டோ பளபளக்கிறது, இதனை மேலும் மெருகேற்றும் வகையில் முன்புற பகுதியின் கிரில், ஹெட்லைட் உள்ளிட்டவை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கவர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு கிரோம் வேலைபாடுகள் இந்த நானோ ஆட்டோவின் முகப்பு மற்றும் பின்புற பகுதிகளிலும் செய்யப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த நானோ ஆட்டோவின் பின்புறத்தை மட்டும் பார்ப்பவர்கள் இது ஆட்டோ என்பதனை நம்புவது மிகவும் கடினம். ஏனெனில் இந்த ஆட்டோவில் நானோ காரின் ஆக்ஸஸரிகள் அப்படியே இடம்பெற்றுள்ளது.

மேலும் இண்டிகேட்டர் விளக்குகள், சைடு லைனிங்குகள், ரூஃப் ரெயில்கள், பி & சி பில்லர்கள், ரியர் ஸ்பாய்லர் உள்ளிட்டவையும் வெளிச்சந்தையிலிருந்து பெறப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நானோ ஆட்டோவின்டிரைவர் சீட்டை இந்த ஆட்டோ ஓட்டுநர் பிரத்யேகமாக பக்கெட் சீட் போல அமைத்துள்ளார். இதுவும் காரின் நிறத்தை ஒத்த நீல கலரில் சீட் கவர் கொடுக்கப்பட்டுள்ளது. (நானோ போன்று வடிவமைத்துவிட்டு ஆடி நிறுவனத்தின் லோகோவை முகப்பில் பொருத்திவிட்டார் இவர்)

இந்த நானோ ஆட்டோவை வடிவமைக்க நிச்சயம் மிகவும் சிரத்தை எடுத்து அதிக பொருட் செலவில் உருவாக்கியுள்ளார் என்பது தெள்ளத்தெளிவாக காண முடிகிறது.

ஏற்கெனவே ஸ்கார்பியோ ஆட்டோவால் கவரப்பட்ட ஆனந்த் மஹிந்திரா , அந்த ஆட்டோவை மஹிந்திராவின் மியூசியத்தில் வைப்பதற்காக வாங்கினார் என்பது தெரிந்ததே.

இதைப் போன்று இந்த நானோ ஆட்டோவையும், நானோ கார் பிரியரான அந்நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா வாங்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எது எப்படியோ மக்கள் தங்களால் வாங்க இயலாத விலை கொண்ட மாடல் வாகனங்களை, தங்களிடம் இருக்கும் வாகனங்களைக் கொண்டு தங்கள் ரசனைக்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்துகொள்ளும் பழக்கம், தற்போது அதிகரித்து வருவது மட்டும் இதன் மூலம் புலப்படுகிறது.

Story first published: Tuesday, May 9, 2017, 7:25 [IST]
English summary
Read in Tamil about kerala auto driver modifies his auto into tata nano var with more features.
Please Wait while comments are loading...

Latest Photos