பார்முலா-1 பந்தயங்களும், சிகரெட் நிறுவனங்களின் பந்தமும்...!!

உலகின் பணக்கார விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக பார்முலா-1 பந்தயங்கள் கருதப்படுகின்றன. வேகம், விவேகம், வெற்றி, கொண்டாட்டம் என விறுவிறுப்பு நிறைந்த இந்த பந்தயத்திற்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள். எனவே, பார்முலா-1 போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்வதில் தொன்றுதொட்டு நிறுவனங்களிடையே கடும் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆனால், இது மேலோட்டமான தகவல். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட துறையை சேர்ந்த நிறுவனங்கள் பார்முலா-1 பந்தயங்களுக்கும், வீரர்களுக்கும் ஸ்பான்சர் செய்யும் டிரென்ட் இருந்து வருகிறது.

1960கள் முதல் பார்முலா-1 பந்தயங்கள் வளர்ச்சியில் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன.. ஃபெராரி அணிக்கு மார்போரோ, லோட்டஸ் அணிக்கு கோல்டு லீஃப், மெக்லேரன் அணிக்கு வெஸ்ட், ஹோண்டா அணிக்கு பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ, வில்லியம்ஸ் எப்-1 அணிக்கு கேமல், ரோத்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்துள்ளன.

தங்களது பிராண்டின் பெயரும், சின்னமும் பார்முலா-1 கார்களிலும், அதேபோன்று, சூப்பர் பைக் பந்தயங்களிலும் இடம்பெறுவதற்காக நினைத்து பார்த்திரா அளவிற்கு அவை கோடிகளை கொட்டிக் கொடுத்து ஸ்பான்சர் செய்துள்ளன. பார்முலா-1 பந்தயங்கள் இன்று இந்தளவு பிரபலமாகியிருப்பதற்கு சிகரெட் நிறுவனங்களும் கூட முக்கிய காரணங்கள்தான். எனவேதான், அத்துனை தடைகளையும் மீறி ஃபெராரி அணி மறைமுகமாக மார்போரோ நிறுவனத்தின் லோகோவை தனது கார் மற்றும் வீரர்களின் உடையில் இன்று வரை இடம்பெற செய்து வருகிறது. இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுடன் இந்த வாரத்தின் முதல் ஸ்லைடர் செய்தி இதோ உங்களுக்காக..

நெடிய பந்தம்

நெடிய பந்தம்

1960களில் துவங்கிய பார்முலா-1 பந்தயங்களுடனான சிகரெட் நிறுவனங்களின் பந்தம் இந்த நூற்றாண்டின் துவக்கம் வரை நீண்டிருந்தது.

முடிவுக்கு வந்த பந்தம்

முடிவுக்கு வந்த பந்தம்

பார்முலா1 மற்றும் சூப்பர் பைக் ரேஸ்களில் சிகரெட் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு பல்வேறு நாட்டு அரசுகள் கட்டுப்பாடுகளையும், தடையும் விதித்ததால் இந்த பந்தம் முடிவுக்கு வந்தது.

மெக்லாரன்-ஹோண்டா - மார்போரோ

மெக்லாரன்-ஹோண்டா - மார்போரோ

கார் மற்றும் பைக் பந்தயங்களில் புகையிலை நிறுவனங்கள் விளம்பரம் செய்வதற்கு 1976ம் ஆண்டு மேற்கு ஜெர்மனி முதலாவதாக தடை விதித்தது. மெக்லாரன்-ஹோண்டா அணிக்கு மார்போரோ சிகரெட் நிறுவனம் ஸ்பான்சர் வழங்கி வந்தது. அந்த அணியின் வீரரான பிரேசிலை சேர்ந்த அர்டன் சென்னா தனது உடைகளில் மார்போரா சிகரெட் நிறுவனத்தின் பெயர் பொறித்த உடையை அணிந்து வந்தார். இவர் 1994ம் ஆண்டு சான் மரினோ கிரான்ட் பிரிக்ஸ் பார்முலா-1 பந்தயத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். பார்முலா-1 பந்தயங்களில் கடைசியாக உயிரிழந்த வீரரான இவர் மூன்று முறை பார்முலா-1 சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப் டீம் - 555

வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப் டீம் - 555

வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப் பந்தயங்களில் காலின் மெக்ரேவுக்கு 555 சிகரெட் நிறுவனம் ஸ்பான்சர் வழங்கியது. பிரிட்டிஷ் ராலி சாம்பியனான இவர் 55 சிகரெட் நிறுவனத்தின் பிராண்டு சின்னத்தை அணிந்து பந்தயங்களில் பங்கேற்று வந்தார். கடந்த 2007ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.

 கெவின் ஸ்வான்ட்ஸ்

கெவின் ஸ்வான்ட்ஸ்

உலக சூப்பர் பைக் ரேஸ் முன்னாள் சாம்பியனான கெவின் ஸ்வான்ட்சுக்கு லக்கி ஸ்ட்ரைக் நிறுவனம் ஸ்பான்சர் வழங்கியது.

ஃபெராரி மற்றும் யமஹா ரேஸிங் டீம் - மார்போரோ

ஃபெராரி மற்றும் யமஹா ரேஸிங் டீம் - மார்போரோ

ஃபெராரி மற்றும் யமஹா ரேஸிங் அணிகளுக்கு மார்போரோ சிகரெட் நிறுவனம் ஸ்பான்சர் வழங்கியது. சிகரெட் நிறுவனங்கள் சின்னங்களை கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டபோதிலும் இன்று வரை மார்போரோ சின்னத்தை ஃபெராரி வேறு விதமாக மாற்றி பயன்படுத்தி வருகிறது.

 வேனே மைக்கேல் கார்னர் - ரோத்மேன்ஸ்

வேனே மைக்கேல் கார்னர் - ரோத்மேன்ஸ்

முன்னாள் கிரான்ட் பிரிக்ஸ் மோட்டார்சைக்கிள் ரோடு ரேஸர் மற்றும் டூரிங் கார் ரேஸரான மைக்கேல் கார்னருக்கு ரோத்மேன்ஸ் சிகரெட் நிறுவனம் ஸ்பான்சர் வழங்கி வந்தது.

 டோமி மேகினென்

டோமி மேகினென்

உலக ராலி சாம்பியன்ஷிப் பந்தய வீரரான டோமி மேகினெனுக்ககு மார்போரோ ஸ்பான்சர் வழங்கி வந்தது.

அடுத்த டிரென்ட்

அடுத்த டிரென்ட்

சிகரெட் நிறுவனங்களின் ஸ்பான்சர் ஆதிக்கம் முடிவுக்கு வந்த நிலையில், கார் மற்றும் பைக் பந்தயங்களில் விளம்பரம் செய்ய கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களிடையே பெரும் போட்டி ஏற்பட்டது. டொயோட்டா எஃப்1 அணிக்கு பானசோனிக் நிறுவனமும், வில்லியம்ஸ் எஃப்1 அணிக்கு காம்பக் மற்றும் எச்பி நிறுவனங்களும், மெக்லேரன் அணிக்கு வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கிய ஸ்பான்சர்களாக மாறின.

அப்புறம்...?

அப்புறம்...?

சிகரெட் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை தொடர்ந்து ரெட்புல் மற்றும் மான்ஸ்ட்டர் பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது ஸ்பான்சர் வழங்கி வருகின்றன.

கென் பிளாக்

கென் பிளாக்

உலகின் மிகப் பிரபலமான ராலி டிரைவர் கென் பிளாக் பயன்படுத்தும் கார்கள் மற்றும் உடைகளில் மான்ஸ்ட்டர் பான தயாரிப்பு நிறுவனம் ஸ்பான்சர் வழங்கி வருகிறது.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் வளர்ச்சி

மோட்டார் ஸ்போர்ட்ஸ் வளர்ச்சி

புகையிலை நிறுவனங்கள் விளம்பரத்துக்கு தடை வந்தபோதிலும் பார்முலா-1 போட்டிகள் இந்தளவு பிரம்மாண்டத்தை எட்டியிருப்பதில் சிகரெட் நிறுவனங்களின் பங்கு முக்கியமானதாகவே இருந்துள்ளது. அடுத்த சுவாரஸ்ய செய்தியை படிக்க டிரைவ்ஸ்பார்க் தளத்தை தொடர்ந்து பாருங்கள்.

Most Read Articles
English summary
Anyone involved in motorsports will know that it is an expensive affair and, passion alone cannot help one survive the rigours of the sport. It is not only enthusiasts but sponsors who have kept the wheels of motorsports running without a hitch since several years.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X