சுகோய் போர் விமானத்துக்கு டயர்களை சப்ளை செய்யும் எம்ஆர்எஃப் டயர்ஸ்!

By Saravana

இந்திய விமானப் படையின் சுகோய் போர் விமானத்துக்கு எம்ஆர்எஃப் நிறுவனம் டயர்களை சப்ளை செய்கிறது. இதன்மூலம், இந்திய விமானப் படைக்கு டயர்களை சப்ளை செய்யும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமை எம்ஆர்எஃப் டயர் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.

சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானங்களுக்கான பின்புற சக்கரங்களுக்கான டயர்களை எம்ஆர்எஃப் சப்ளை செய்கிறது. இது இரு தரப்புக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.


ஏர்மஸில்

ஏர்மஸில்

சுகோய் போர் விமானங்களுக்கு சப்ளை செய்யப்படும் டயர்களுக்கு ஏர்மஸில் என்று எம்ஆர்எஃப் நிறுவனம் பெயரிட்டுள்ளது. இது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாகும்.

Picture Credit: Wikipedia

விலை குறைவு

விலை குறைவு

இதுவரை சுகோய் விமானங்களுக்கு வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட டயர்களை விட எம்ஆர்எஃப் நிறுவனத்தின் டயர்கள் 30 சதவீதம் விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Picture Credit: Wikipedia

தட்டுப்பாடு நீங்கும்

தட்டுப்பாடு நீங்கும்

மேலும், வெளிநாடுகளில் இருந்து டயர்களை இறக்குமதி செய்யும்போது பல சமயங்களில் தட்டுப்பாடு நிலவி வந்தது. அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், விமான பராமரிப்புப் பணிகளில் இருந்து வந்த காலதாமதங்கள் தவிர்க்கப்படும்.

Picture Credit: Wikipedia

உற்பத்தி

உற்பத்தி

ஹைதராபாத்திலுள்ள மேடக் ஆலையில்தான் இந்த புதிய டயர்களை எம்ஆர்எஃப் உற்பத்தி செய்கிறது. சுகோய் ரக விமானங்கள் 420 கிமீ வேகத்தில் வந்து தரையிறங்கும்போதும் சிறப்பான செயல்திறனை இந்த டயர்கள் வழங்கும் என எம்ஆர்எஃப் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு மோசமான நிலைகளில் வைத்து இந்த டயர்கள் சோதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Picture Credit: Wikipedia

சோதனை செலவீனம்

சோதனை செலவீனம்

இந்த ஏர்மஸில் டயர்களின் டிசைன், தயாரிப்பு, தரச் சோதனைகளை தனது சொந்த செலவில் எம்ஆர்எஃப் செய்துள்ளது. மேலும், சென்னையில் வைத்து டைனாமீட்டர் சோதனைகள் மூன்று முறை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10 கோடி வரை எம்ஆர்எஃப் செலவிட்டுள்ளது. டைனாமீட்டர் சோதனையில் தரையில் ஓடும்போது, மேலே எழும்பும்போது, தரையிறங்கும்போது, சுமையுடன் பிரேக் பிடிக்கும்போது டயர்களின் செயல்திறன் எவ்வாறு இருக்கிறது என்பதை துல்லியமாக கண்டறியலாம்.

Picture Credit: Wikipedia

அனுமதி

அனுமதி

பெய்ரேலி, ஜோத்பூர் மற்றும் லே ஆகிய இடங்களில் உள்ள இந்திய விமானப்படை தளங்களுக்கு இந்த டயர்கள் அனுப்பி வைக்கப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டன. இதையடுத்து, 2012ம் ஆண்டு டயர்களை சப்ளை செய்வதற்கான அனுமதி எம்ஆர்எஃப் டயர் நிறுவனத்துக்கு கிடைத்தது. இந்த டயர்கள் மேடக் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Picture Credit: Wikipedia

அடுத்த ஆர்டர்

அடுத்த ஆர்டர்

சுகோய் போர் விமானங்களுக்கான பின்புற சக்கரங்களுக்கான டயர்களை சப்ளை செய்யும் ஆர்டர் கிடைத்த கையுடன், சுகோய் விமானத்துக்கான முன்புற சக்கரத்துக்கான டயரை தயாரித்து வழங்குமாறு இந்திய விமானப் படை எம்ஆர்எஃப் நிறுவனத்தை அணுகியது. இதையடுத்து, சுகோய் போர் விமானத்துக்கான முன்புற சக்கரத்துக்கான டயரை எம்ஆர்எஃப் தயாரித்து வருகிறது. இந்த டயர் டைனமோமீட்டர் சோதனைக்காக விரைவில் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு, பெங்களூரில் உள்ள ராணுவ மையத்திலிருந்து சான்றிதழ் பெற வேண்டும் என்று எம்ஆர்எஃப் தெரிவித்துள்ளது.

Picture Credit: Wikipedia

சுகோய் போர் விமானம்

சுகோய் போர் விமானம்

ரஷ்ய தயாரிப்பான சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ விமானங்கள் நவீன ரக போர் விமானங்கள். ரஷ்யாவிடமிருந்து லைசென்ஸ் பெற்று இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. ஒவ்வொன்றும் ரூ.430 கோடி விலை மதிப்புமிக்கது. மணிக்கு 2,120 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது இந்த வகை விமானங்கள்.

Picture Credit: Wikipedia

Most Read Articles
English summary
MRF Makes Tyres for IAF Sukhoi Su 30MKI Indian tyre manufacturers, MRF Tyres, are the first Indian company to supply tyres to the Indian Air Force.
Story first published: Tuesday, May 6, 2014, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X