ஒர்க்ஷாப்பில் தூங்கிய ஹார்லி பைக்கை தட்டி எழுப்பி கூட்டி வந்த டோணி!

By Saravana

கோல்கட்டா ஒர்க்ஷாப்பில் நிறுத்தியிருந்த ஹார்லி பைக்கை எடுத்து வந்து பல மாதங்களுக்கு பின் ஆசை தீர ஓட்டி மகிழ்ந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோணி. தொடர் தோல்வியால் துவண்டு போன டோணி தசைப் பிடிப்பை காரணமாக கூறி ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து டோணி விலகினார்.

இந்த நிலையில், தசைப்பிடிப்பு அவஸ்தையிலிருந்து குணமடைந்து வரும் அவர் கோல்கட்டாவில் ஒர்க்ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது பைக்கை தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு சில தினங்களுக்கு முன் எடுத்து வந்தார். அந்த பைக்கில் ஆசை தீர ஒரு ரவுண்டு வந்தார். ஸ்லைடரில் டோணியின் ஹார்லி பைக்கின் சிறப்பம்சங்கள், அவரிடம் இருக்கும் எண்ணற்ற பைக் மற்றும் கார்களின் லிஸ்ட் போன்ற விபரங்களை படித்து மகிழுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஆட்டோமொபைல் தளத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்பில் இருங்கள்!

ஒர்க்ஷாப்பில் தூங்கிய ஹார்லி

ஒர்க்ஷாப்பில் தூங்கிய ஹார்லி

பைக் பிரியரான டோணியிடம் ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய் மாடல் பைக் இருக்கிறது. பழுது பார்ப்பதற்காக கோல்கட்டாவிலுள்ள சர்வீஸ் மையத்தில் அந்த பைக்கை டோணி விட்டிருந்தார். பழுது பார்த்து முடிந்தும், டோணிக்கு பைக்கை எடுத்து வர கால அவகாசம் இல்லை. இதனால், அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது ஓய்வில் இருந்து வரும் டோணி, அந்த பைக்கை எடுத்து வந்துள்ளார்.

ஃபேட் பாய் சிறப்பம்சங்கள்

ஃபேட் பாய் சிறப்பம்சங்கள்

இதன் சக்கரங்களை பாருங்கள். இது மிரர் க்ரோம் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாலையில் செல்லும்போது இதன் எக்சாஸ்ட் சவுண்ட் மட்டுமல்ல, இந்த சக்கரங்களும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். இதன் சஸ்பென்ஷன் அமைப்பும் வெளியில் தெரியாதவகையில் அமைக்கப்பட்டிருப்பதும் இதன் சிறப்பு. இது 130 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 50 பிஎஸ் பவரையும், 132 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1,690சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 170 கிமீ வேகத்தில் செல்லும். லிட்டருக்கு 17.85 கிமீ மைலேஜ் தரும் என்கிறது ஹார்லி டேவிட்சன்.

ஏபிஎஸ் பிரேக்

ஏபிஎஸ் பிரேக்

இந்த பைக்கின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இருக்கிறது. முன்புறத்தில் 140மிமீ டன்லப் டயரும், பின்புறத்தில் 200மிமீ டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

எடை

எடை

இந்த பைக் 330 கிலோ எடை கொண்டது.

 விலை

விலை

இந்த பைக்கில் 18.91 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. ரூ.14.84 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டோணியின் பைக் லிஸ்ட்

டோணியின் பைக் லிஸ்ட்

ஹெல்கேட் எக்ஸ்132

ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாய்

கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்14 ஆர்

யமஹா தண்டர்கேட்

என்ஃபீல்டு மெஷிமோ

டுகாட்டி 1098

யமஹா ஆர்டி 350

டிவிஎஸ் அப்பாச்சி

ஹீரோ கரீஷ்மா இசட்எம்ஆர்

யமஹா ஆர்எக்ஸ்

யமஹா ஆர்எக்ஸ்இசட்

டோணியின் கார் லிஸ்ட்

டோணியின் கார் லிஸ்ட்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மிட்சுபிஷி அவுட்லேண்டர்

மிட்சுபிஷி பஜேரோ எஸ்எஃப்எக்ஸ்

டொயோட்டா கரொல்லா

மாருதி ஸ்விஃப்ட்

ஹம்மர் எச்2

ஜிஎம்சி சியரா

மாருதி எஸ்எக்ஸ்4

லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர்

ஆடி க்யூ7 எஸ்யூவி

Most Read Articles
Story first published: Wednesday, March 5, 2014, 12:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X