பாதுகாப்புக்கு வரும் போலீசாருக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் வாங்கி கொடுத்த முகேஷ் அம்பானி!

Written By:

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி இசட் ப்ளஸ் பாதுகாப்பு வளையத்தில் உள்ளார். அதாவது, நம் நாட்டு பிரதமர், ஜனாதிபதிக்கு இணையான பாதுகாப்பு முகேஷ் அம்பானிக்கு வழங்கப்படுகிறது.

உயிருக்கு அச்சுறுத்தல் அதிகம் இருப்பதாக கிடைத்த தகவல்களையடுத்து, கடந்த ஆண்டு குண்டு துளைக்காத அம்சத்துடன் கூடிய உயர் தர பாதுகாப்பு வசதிகள் கொண்ட காரை வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்த காரின் விலை ரூ.10 கோடி.

இந்த நிலையில், தனக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளித்து வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 என்ற சொகுசு எஸ்யூவி ரக காரை வாங்கி கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி. இன்றையே தேதியில் இந்தியாவில் போலீசார் பயன்படுத்தும் விலை உயர்ந்த கார் இதுவாகத்தான் இருக்கும்.

Photo Credit: Team BHP

இந்த கார் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், அந்த வெள்ளை நிற காரில் போலீஸ் என்ற வாசகங்கள் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

Photo Credit: Team BHP

காரில் பிஎம்டபிள்யூ லோகோக்கள் அனைத்து நீக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை, அந்த பிஎம்டபிள்யூ லோகோ வில்லைகள் திருடிச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் எடுத்துக் கொள்ள முடியும். ஏனெனில், விலை உயர்ந்த கார்களில் இந்த பிராண்டு சின்னம் பொறிக்கப்பட்ட வில்லைகளை திருடுவது ஒரு பெரிய தொழிலாகவே நடந்து வருகிறது.

Photo Credit: Team BHP

காரில் பிஎம்டபிள்யூ லோகோக்கள் அனைத்து நீக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை, அந்த பிஎம்டபிள்யூ லோகோ வில்லைகள் திருடிச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் எடுத்துக் கொள்ள முடியும். ஏனெனில், விலை உயர்ந்த கார்களில் இந்த பிராண்டு சின்னம் பொறிக்கப்பட்ட வில்லைகளை திருடுவது ஒரு பெரிய தொழிலாகவே நடந்து வருகிறது.

இந்த எஸ்யூவியில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 258 பிஎச்பி பவரையும், 560 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 6.9 வினாடிகளில் எட்டிவிடும். இதுபோன்ற சக்திவாய்ந்த எஸ்யூவி அவசர சமயங்களில் உதவும் என்ற கோணத்தில்தான் இந்த விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இந்த எஸ்யூவியில் 7 பேர் வரை செல்ல முடியும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி தவிர்த்து, முகேஷ் அம்பானியின் பாதுகாப்புக்கு புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மாடல்களுடன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதுதொடர்பான படங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

பாதுகாப்புக்கு வருபவர்களுக்கே கிட்டத்தட்ட ரூ.75 லட்சம் மதிப்புடைய காரை வாங்கி கொடுத்திருக்கிறார் முகேஷ் அம்பானி. இந்த நிலையில், அவர் பயன்படுத்தும் ரூ.10 கோடி மதிப்புடைய பிஎம்டபிள்யூ கார் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் பிறப்பது இயல்புதானே. தொடர்ந்து அதனை பார்க்கலாம்.

முகேஷ் அம்பானி பயன்படுத்தும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹை செக்யூரிட்டி கார் 2009 பிஆர்வி பாதுகாப்புச் சான்று பெற்ற மாடல் இது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் மிகவும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் கட்டமைத்து கொடுக்கிறது.

வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிக் குண்டு தாக்குதல்களில் சேதமடையாத சேஸி, அடிப்பாகம் மற்றும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் பாடியும் அதேபோன்று குண்டு துளைக்காத விசேஷ ஸ்டீலில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், ரன் ஃப்ளாட் டயர்கள் ஆகியவையும் இந்த காரின் கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கின்றது.

செயல்திறன் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹை செக்யூரிட்டி எடிசன் காரின் எஞ்சின் அதிகபட்சமாக 439 எச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டது. 0- 100 கிமீ வேகத்தை 7.5 வினாடிகளில் எட்டிவிடும். 6 ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

காரை கட்டமைத்து கொடுப்பதும் மட்டுமின்றி, இந்த காரை ஓட்டுவதற்காக ஓட்டுனர்களுக்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் சிறப்பு பயிற்சியை வழங்குகிறது. அவசர சமயங்களில் காரை எவ்வாறு செலுத்தி, பயணிகளை பாதுகாப்பது குறித்த பிஎம்டபிள்யூவின் நிபுணர் குழு சிறப்பு பயிற்சியை அளிக்கும். தவிர்த்து, காரை பின்னோக்கி செலுத்துவது குறித்தும் சிறப்பு பயிற்சிகள் அந்த ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் மட்டுமே அந்த காரை திறமையாக செலுத்த முடியும்.

வெடிகுண்டுகளை கண்டறியும் வெப்ப சென்சார்கள், செயற்கைகோள் தொடர்பு சாதனம் போன்ற பல வசதிகள் உள்ளன. ஏவுகணை மற்றும் ரசாயனத் தாக்குதலிலிருந்து கூட பாதுகாப்பு தரும்.

இந்தியாவில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் ரூ.1.9 கோடி ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் மாறுதல்கள் செய்யப்பட்ட இந்த காருக்கு கூடுதலாக 300 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதி வரி உள்பட ரூ.8.5 கோடி அடக்க விலையாகிறது. இதைவிட, இதன் பதிவு கட்டணமும் கோடியில்தான்...

இந்த காருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காரின் விலையில் 20 சதவீதம் பதிவுக் கட்டணமாக செலுத்தப்பட்டிருக்கிறது. ரூ.1.6 கோடியை பதிவு கட்டணமாக செலுத்தியுள்ளார் முகேஷ் அம்பானி. அதாவது, இதுவரை மும்பை ஆர்டிஓ அலுவலகத்தில், அதிக பதிவுக் கட்டணம் செலுத்தப்பட்ட கார் இதுதான் என்று தெரிவிக்கப்படுகிறது.

முகேஷ் அம்பானி வாங்கியிருக்கும் மாடல் பிஎம்டபிள்யூ 760ஐ ஹை செக்யூரிட்டி. இதே மாடலைத்தான் பிரதமர் நரேந்திர மோடியும் தனது அதிகாரப்பூர்வ கார் மாடலாக பயன்படுத்தி வருகிறார். இதுதவிர, சில பாலிவுட் நட்சத்திரங்கள் பாதுகாப்பு கருதி இந்த மாடலை பயன்படுத்தி வருகின்றனர்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Mukesh Ambani’s security Cops Gets BMW X5 SUV.
Please Wait while comments are loading...

Latest Photos