மஹிந்திரா தாரில் மைக் செட் கட்டி கிளம்பிய ஆதார் அட்டை நந்தன் நிலேகனி!

By Saravana

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், ஆதார் அட்டை ஆணைய இயக்குனருமான நந்தன் நிலேகனி தற்போது தீவிர அரசியலில் குதித்துள்ளார். பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் நந்தன் நிலேகனி தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தையும் துவங்கியிருக்கிறார்.

இதே தொகுதியில் 6 முறை வெற்றி பெற்றிருக்கும் பாஜக வேட்பாளர் அனந்த் குமாரை வீழ்த்தி வெற்றி வாகை சூடுவதற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தையும் நிலேகனி மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் ஸ்டார் வேட்பாளர்களில் ஒருவராகியிருக்கும் இவர் தேர்தல் பிரச்சாரத்தை சிறப்பாக செய்வதற்கு ஏதுவாக புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை சமீபத்தில் வாங்கியுள்ளார். இதனை ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார். அவர் வாங்கியிருக்கும் மஹிந்திரா தார் எஸ்யூவியின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

சிறந்த ஆஃப் ரோடர்

சிறந்த ஆஃப் ரோடர்

நம் நாட்டு மார்க்கெட்டின் 4 வீல் டிரைவ் கொண்ட ஓர் முழுமையான ஆஃப் ரோடர் எஸ்யூவியாக மஹிந்திரா தார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், தேர்தல் சமயங்களில் பிரச்சாரத்துக்கு ஏதுவாக திறந்த கூரை கொண்டதாக மாற்றும் வசதி கொண்ட இதுபோன்ற எஸ்யூவி மாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எஞ்சின்

எஞ்சின்

இது மூன்றுவிதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. பாரத் ஸ்டேஜ் -4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட மஹிந்திரா தார் எஸ்யூவியில் 105 பிஎச்பி பவரையும், 247 என்எம் டார்க்கையும் அளிக்கும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

பிரச்சாரத்திற்கு வசதி

பிரச்சாரத்திற்கு வசதி

இது ஒரு 7 சீட்டர் மாடல். ஆனால், விருப்பத்திற்கும், வசதிக்கும் ஏற்ப இருக்கை அமைப்பை மாற்றிக் கொள்ளலாம். தேர்தல் பிரச்சாரத்தின்போது நின்று பேசுவதற்கு ஏதுவான வசதிகள் செய்து கொள்ள முடியும் என்பதால் இந்த எஸ்யூவியை அதிக அளவில் அரசியல்வாதிகள் வாங்குகி்ன்றனர்.

வலுவான ஆக்சில்

வலுவான ஆக்சில்

இதன் முன்புற ஆக்சில் 1,100 கிலோ எடையையும், பின்புற ஆக்சில் 1,700 கிலோ எடையையும் தாங்கும் வலிமை கொண்டது.

பிரேக்குகள்

பிரேக்குகள்

முன்புறத்தில் டிஸ்க் பிரேக் அமைப்பும், பின்புறத்தில் டிரம் பிரேக் அமைப்பும் கொண்டது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

இது 200மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாக இருப்பதால், எந்தவொரு சாலைகளிலும் எளிதாக செல்லும் அமைப்பு கொண்டது.

கோட் சூட்டா, துண்டா?

கோட் சூட்டா, துண்டா?

கோட் சூட்டை தூக்கி போட்டு விட்டு துண்டை தூக்கி தோலில் போட்டுள்ளார் நந்தன் நிலேகனி. அவரது எதிர்காலத்துக்கு கோட் சூட் துணை நிற்குமா, துண்டு தோல் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
Story first published: Thursday, March 27, 2014, 11:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X