இந்தியாவின் முதல் புல்லட் இரயில் கட்டுமானம் செப்டம்பரில் தொடங்குகிறது: மோடி அடிக்கல் நாட்டுகிறார்..!

Written By:

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் நாட்டி பிரதமர் ஷின்ஜோ அபே இணைந்து செப்டம்பரில் இந்தியாவின் முதல் புல்லட் இரயில் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டுகின்றனர்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே முன்னிலையில் 2015 டிசம்பர் 12ம் தேதி கையெழுத்தானது.

ஒரு லட்சம் கோடியில், மும்பை முதல் அகமதாபாத் இடையே 505 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் இந்தியாவின் முதல் புல்லட் இரயில் சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

மும்பை முதல் அகமதாபாத் வரை தற்போது 7 மணிநேரமாக இருக்கும் பயணம், புல்லட் இரயில் சேவை தொடங்கப்பட்ட பின் 2 மணிநேரமாக மாறிவிடும்.

இந்தாண்டின் செப்டம்பரில் தொடங்கப்படும் இதற்கான கட்டமைப்பு பணிகள் சுமார் ஐந்து ஆண்டு காலம் நீடிக்கும் என ரயில்வே வாரியத்தில் உறுப்பினரான மொஹத் ஜம்ஷெத் தெரிவித்தார்.

அனைத்து பணிகளும் 2022ம் ஆண்டில் முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டங்களும் அதே ஆண்டில் நடைபெறவுள்ளது.

பிறகு 2023ல் இந்தியாவில் முதல் புல்லட் இரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகமாகவுள்ளது.

வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள புல்லட் இரயில்கள் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய திறன் பெற்றவை.

இதே ஆற்றலைக் கொண்டே நாட்டின் முதல் புல்லட் இரயில் சேவையும் உருவாக்கப்படவுள்ளது.

இந்தியாவில் புல்லட் இரயில் சேவை நடைமுறைக்கும் வந்தால், அது இந்தியப் போக்குவரத்திற்கான புதிய புரட்சியை தோற்றுவிக்கும்.

மேலும், இந்திய சுற்றுல்லாத்துறைக்கும் வலுசேர்க்கும் என ரயில்வே வாரிய உறுப்பினர் மொஹத் ஜம்ஷெத் கூறினார்.

508 கி.மீ அமையும் இந்த புல்லட் இரயில் சேவை உயர்மட்ட நிலையில் இயக்கப்படுகிறது. இதற்காக இரயிலின் வேகத்தை ஈடுசெய்யும் திறன் கொண்ட வலுகொண்ட தூண்கள் கட்டமைக்கப்படும்.

இரயில்களை இயக்குவதை விட அதற்கு தூண்களை கட்டமைப்பது தான் மிகவும் சவாலான காரியம் என்கிறார் மொஹத் ஜம்ஷெத் .

மேலும் இதற்கான கட்டமைப்புகளில் சுற்றுச்சூழலை பொறுத்தும் சில சவால்களும் இருப்பதாக அவர் கூறுகிறார்.

புல்லட் இரயில்கள் அறிமுகமாகும் அதே சமயத்தில் டெல்லி - மும்பை மற்றும் டெல்லி -ஹவுரா பகுதிகளுக்கு இடையே ஓடும் ரயில்களில் வேக அளவுகோல் இனி அதிகரிக்கப்படும்.

இந்த பாதைகளில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் இரயில்களின் வேகம் இனி 200 கி.மீ வேகம் வரை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 லட்சம் பேர் இரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இதில் உள்ளூர் சுற்றுலா வாசிகளின் எண்ணிக்கை 2 கோடியே 40 லட்சம்.

2006க்கு பிறகு இந்திய சுற்றுல்லாத்துறைக்காக கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக மொஹத் ஜம்ஷெத் கூறுகிறார்.

இதனால் போக்குவரத்து, உணவு வழங்கல் போன்ற பயணிகளுக்கான அடிப்படை தேவைகள் இன்னும் மேம்ப்படுத்தப்படும் என அவர் கூறுகிறார்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Narendra Modi Lay Foundation Stone of Bullet Train Project in September. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos