'தோதான' விலையில் வரும் டாப் - 5 காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள்!

டஸ்ட்டர் மூலம் பிரபலமடைந்த காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட் படு ஹாட்டாக மாறி வருகிறது. டிசைன், இந்திய சாலைகளுக்கு ஏற்ற அம்சங்கள் மற்றும் சரியான விலை போன்றவை இந்த செக்மென்ட்டை படு ஹாட்டாக மாற்றியுள்ளது. டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட் ஆகிய இரண்டு கார்களின் விற்பனை பல நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்ததன் விளைவு இந்த ஆண்டு தெரியப் போகிறது.

ஆம், பெரும்பாலான கார் நிறுவனங்கள் இந்த செக்மென்ட்டில் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கு கங்கணம் கட்டி வேலை பார்த்து வருகின்றன. காலத்தை கடத்துவதை விரும்பாத கார் நிறுவனங்கள் இந்த செக்மென்ட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால், இந்த ஆண்டில் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களின் எண்ணிக்கை சர்ரென்று ஏறும் வாய்ப்பு இருக்கிறது.


காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள்

காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள்

இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகும் என உறுதி செய்யப்பட்டிருக்கின்ற மாடல்கள் மற்றும் உறுதியாக எதிர்பார்க்கப்படும் மாடல்களை டாப் - 5 பட்டியலில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

1.ஹோண்டா காம்பேக்ட் எஸ்யூவி

1.ஹோண்டா காம்பேக்ட் எஸ்யூவி

டீசல் எஞ்சின் மூலம் பெரும் விற்பனை வளர்ச்சியை பெற்றிருக்கும் ஹோண்டா கார் நிறுவனம், புதிய உற்சாகத்துடன் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மொபிலியோ எம்பிவியைத் தொடர்ந்து பிரியோவின் அடிப்படையில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்தியாவுக்காக ஹோண்டா கார் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

ஹோண்டா காம்பேக்ட் எஸ்யூவி முக்கிய அம்சங்கள்

ஹோண்டா காம்பேக்ட் எஸ்யூவி முக்கிய அம்சங்கள்

4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன், போட்டியாளர்களுக்கு சவால் தரும் விலையில் இந்த புதிய மாடலை அறிமுகம் செய்ய ஹோண்டா முனைப்பு காட்டி வருகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இந்த ஆண்டில் அதிக எதிர்பார்ப்புக்கு இலக்கான மாடல்களில் இதுவும் ஒன்று. ரூ.6.50 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.

குறிப்பு:மாதிரிக்காக பிரியோ கார் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

2.ஃபோக்ஸ்வேகன் மினி எஸ்யூவி

2.ஃபோக்ஸ்வேகன் மினி எஸ்யூவி

விற்பனையில் பெரும் பின்னடவை சந்தித்து வரும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்திய மார்க்கெட்டில் ஸ்திரமான வர்த்தக்கை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. அதற்கு ஏதுவான மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்யவும் முடிவு செய்திருக்கும் அந்த நிறுவனம், புதிய மினி எஸ்யூவி மூலம் அந்த இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் மினி எஸ்யூவி முக்கிய அம்சங்கள்

ஃபோக்ஸ்வேகன் மினி எஸ்யூவி முக்கிய அம்சங்கள்

ஃபோக்ஸ்வேகன் டைகன் அடிப்படையிலான மினி எஸ்யூவி மாடலாக இருக்கும். இதுவும் 4 மீட்டருக்கும் குறைவான மாடலாகவே இருக்கும். இந்த மாடலில் ஃபோக்ஸ்வேகனின் பவர்ஃபுல் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் என்ற தகவல் கார் பிரியர்கள் மத்தியில் பேராவலை கிளப்பியிருக்கிறது. இந்த 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 105 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக இருக்கும். ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய மாடல் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 3.மஹிந்திரா காம்பேக்ட் எஸ்யூவி

3.மஹிந்திரா காம்பேக்ட் எஸ்யூவி

எஸ்யூவி தயாரிப்பில் இந்தியாவின் ஸ்பெஷலிஸ்ட் என்று பெருமையை பெற்றிருக்கும் மஹிந்திரா நிறுவனம், எஸ்101 என்ற குறியீட்டுப்பெயரில் புதிய மினி எஸ்யூவி மாடலை வடிவமைத்திருக்கிறது. தற்போது தீவிர டெஸ்ட்டிங்கில் இருந்து வரும் இந்த புதிய மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image Credit: Autocarindia

மஹிந்திரா மினி எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்

மஹிந்திரா மினி எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள்

6 சீட்டர் எஸ்யூவியாக வர இருக்கும் இந்த புதிய மஹிந்திரா மாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரூ.5 லட்சம் விலையில் வரும் என்பதும் ஆவலைத் தூண்டும் விஷயம். இந்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய மினி எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. குவான்ட்டோ காம்பேக்ட் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் சாங்யாங் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு வரும் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என கருதப்படுகிறது.

Image Credit: Praveen Bala

4.மாருதி எக்ஸ்ஏ ஆல்ஃபா

4.மாருதி எக்ஸ்ஏ ஆல்ஃபா

மாருதியிடமிருந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாடல் இது. குறைவான விலை, மாருதி பிராண்டு போன்றவை இந்த எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தரும் வாய்ப்புள்ளது. கடந்த 2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் கான்செப்ட் விரைவில் தயாரிப்பு நிலைக்கு செல்லும் என்று தகவல்கள் கூறுகின்றன.

 மாருதி ஆல்ஃபா முக்கிய அம்சங்கள்

மாருதி ஆல்ஃபா முக்கிய அம்சங்கள்

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த மினி எஸ்யூவி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு நேரடியாக களமிறங்க உள்ளது. மேலும், வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் போட்டியாளர்களைவிட குறைவான விலையில் வரும் என்பதும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. ரூ.6. லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5.ஹூண்டாய் ஐஎக்ஸ்25

5.ஹூண்டாய் ஐஎக்ஸ்25

டாப் -5 பட்டியலில் இந்த ஆண்டு விற்பனைக்கு வருவதில் உறுதி செய்யப்பட்டிருக்கும் மாடல் ஹூண்டாய் ஐஎக்ஸ்25. சீனாவில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய எஸ்யூவி மாடல் டிசைனில் கலக்க இருப்பதுடன், எண்ணற்ற வசதிகளை தாங்கி வரும் என்பதால் ஹூண்டாய் கார் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலை கிளப்பியிருக்கிறது. இந்தியாவில் தற்போது தீவிரமாக சாலை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஹூண்டாய் ஐஎக்ஸ்25 முக்கிய அம்சங்கள்

ஹூண்டாய் ஐஎக்ஸ்25 முக்கிய அம்சங்கள்

இது 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட மாடலாக இருக்கும் என்பதால் ரெனோ டஸ்ட்டர் மார்க்கெட்டை நேரடியாக உடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த புதிய எஸ்யூவியில் வெர்னாவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

Most Read Articles
English summary

 Here we list out the affordable top 5 Compact SUVs Coming to India By this year. 
Story first published: Tuesday, January 13, 2015, 14:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X