ஆல் டெர்ரெய்ன் வீல்சேர்... சுதந்திரத்தை வாரி வழங்கும் ஓர் அற்புத படைப்பு!

By Saravana

மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வெளியில் செல்லும்போது பிறர் உதவி தேவைப்படுகிறது. குறிப்பாக, தினசரி அலுவல்களை கவனிப்பதற்கு செல்லும்போது பிறர் உதவியை நாடி இருக்க வேண்டியுள்ளது.

மேலும், தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் நகரும் நாற்காலிகள் வந்தாலும், அவற்றை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இந்த குறையை போக்கும் விதத்தில் இங்கிலாந்தை சேர்ந்த எஞ்சினியர் சியோன் பியர்ஸ் என்பவர் புதிய எலக்ட்ரிக் வீல் சேர் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனை அனைத்து வித சாலைநிலைகளிலும் பயன்படுத்தும் வகையில் ஏடிவி வாகனம் போன்று வடிவமைத்துள்ளார்.


 கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

 ஹெக்ஸ்ஹாக்

ஹெக்ஸ்ஹாக்

ஹெக்ஸ்ஹாக் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வீல் சேர் மின் மோட்டாரில் இயங்குகிறது. இதில், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக ஏறி அமர்ந்து கொள்ளலாம். இதன் இருக்கையையும் தங்களது வசதிக்கு ஏற்றவாறு அட்ஜெஸ்ட் செய்துகொள்ளலாம்.

 ஏடிவி

ஏடிவி

இந்த புதிய வாகனம் ஒரு பக்கத்திற்கு தலா 3 சக்கரங்கள் வீதம் 6 சக்கரங்களை கொண்டது. பாறைகளாகட்டும், பள்ளம், மேடு நிறைந்த இடங்களாட்டும், நீர்நிலைகளாகட்டும், எந்தவொரு சாலைகளிலும் மிக எளிதாகவும், பாதுகாப்பாகவும் செல்லும். மேலும், இந்த ஏடிவி வீல் சேர் சோதனைகளில் வெற்றி கண்டுள்ளது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

இதில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 13 முதல் 19 கிமீ தூரம் வரை செல்லலாம். சாலை நிலையை பொறுத்து ரேஞ்ச் மாறுபடும். ஒருமுறை சார்ஜ் செய்வதற்கு இரண்டரை மணி நேரமாகும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 13.6 கிமீ வேகம் வரை செல்லும். இதனை குறுகிய இடத்தில் கூட திருப்ப முடியும். ஷாப்பிங் செல்வதற்கும், அலுவலகம், பண்ணையை சுற்றிபார்ப்பது போன்ற பணிகளை பிறர் உதவியில்லாமல் செய்வதற்கு இந்த வாகனம் பயன்படும்.

 ஜாய்ஸ்டிக்

ஜாய்ஸ்டிக்

ஆர்ம்ரெஸ்ட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் ஜாஸ்ஸ்டிக் மூலம் மிக எளிதாக இயக்க முடியும். இருக்கையையும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

 ரிமோட் கன்ட்ரோல் வசதி

ரிமோட் கன்ட்ரோல் வசதி

காரின் டிரெய்லரில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இந்த ஏடிவி.,யை ஏற்றி, இறக்க முடியும்.

 விலை

விலை

வசதிகளை பொறுத்து 30,200 முதல் 42,000 அமெரிக்க டாலர் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
England based engineer Sion Pierce has revealed a new ATV especially for disabled people. The new HexHog, a six-wheeled, electric ATV (all terrain vehicle) to take on the most difficult terrain you can throw at it.
Story first published: Tuesday, August 12, 2014, 12:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X