ரூ.5 கோடியில் கர்நாடக அமைச்சர்களுக்கு புதிய கார்கள்!

ரூ.5 கோடி செலவில் கர்நாடகத்தில் புதிய அமைச்சர்களுக்கு கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இதுதவிர, முதல்வர் சித்தராமையாவுக்கு ரூ.24 லட்சத்தில் டொயோட்டா பார்ச்சூனர் அதிகாரப்பூர்வ காராக வாங்கப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு சமீபத்தில் பதவியேற்றுள்ளது. இதையடுத்து, புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்காக புதிய கார்களை அம்மாநில மறுசீரமைப்பு மேலாண்மை துறை வாங்கியிருக்கிறது.

புதிய முதல்வருக்கு ஃபார்ச்சூனர்

புதிய முதல்வருக்கு ஃபார்ச்சூனர்

புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் சித்தராமையா சொந்தமாக ஆடி க்யூ-7 கார் வைத்திருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், அவருக்கு அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்துவதற்காக ரூ.24 லட்சம் மதிப்புடைய புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் வாங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கு இன்னோவா

அமைச்சர்களுக்கு இன்னோவா

20 அமைச்சர்களுக்கு டொயோட்டா இன்னோவா கார்கள் வழங்கப்பட உள்ளன. ஒரு காரின் விலை ரூ.14 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி500

மஹிந்திரா எக்ஸ்யூவி500

இதுதவிர, அமைச்சர்களுக்கு வழங்குவதற்காக மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி கார்களும் வாங்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் விருப்பத்தை அறிந்துகொண்டு அவரவர் விருப்பதுக்கு தகுந்தபடி கார்கள் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

சில அமைச்சர்களின் விருப்பதின்படி டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி வாங்கப்பட்டுள்ளதாம்.

ஹோண்டா சிஆர்வி

ஹோண்டா சிஆர்வி

சில அமைச்சர்கள் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியை தேர்வு செய்து கொடுத்துள்ளனர்.

டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ்

டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ்

ஒரு சில அமைச்சர்கள் யுட்டிலிட்டி ரக கார்கள் வேண்டாம் என்று கூறியதற்காக டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடான் கார்கள் வாங்கப்பட்டுள்ளன.

அமைச்சர்களுக்கு யூஸ்டு கார்கள்

அமைச்சர்களுக்கு யூஸ்டு கார்கள்

சில அமைச்சர்களுக்கு ஏற்கனவே இருந்த அமைச்சர்கள் பயன்படுத்தி வந்த நல்ல கார்களை தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த அதிகாரி விளக்கம்

மூத்த அதிகாரி விளக்கம்

எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது கான்டெஸ்ஸா கார்களை அமைச்சர்கள் பயன்படுத்தினர். ஆனால், இப்போது தொகுதி பணிகளை கவனிக்க யுட்டிலிட்டி ரக கார்களையே அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் விரும்புகின்றனர். எனவேதான், யுட்டிலிட்டி ரக கார்களை வாங்கியிருக்கிறோம். மேலும், அமைச்சர்களின் உதவியாளர்கள் உட்பட 6 பேர் முதல் 8 பேர் வரை எளிதாக செல்வதற்கான இடவசதி இருப்பதும் முக்கிய காரணம் என்றார்.

 முந்தைய அரசின் கார்கள்

முந்தைய அரசின் கார்கள்

முந்தைய அரசில் அங்கம் வகித்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்திய கார்கள் அனைத்தும் அதிக தூரம் ஓடிவிட்டன. எனவே, புதிய கார்களை வாங்குவது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் அவர் கூறியிருக்கிறார்.

 அதிகாரிகளுக்கும் கார்கள்

அதிகாரிகளுக்கும் கார்கள்

டைரக்டர் ஜெனரல், நகர போலீஸ் ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும், துறை செயலர்களுக்கும், முதன்மை செயலர்களுக்கும் யுட்டிலிட்டி ரக கார்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதிய கார்களுக்கு ஷெட்டர் அனுமதி

புதிய கார்களுக்கு ஷெட்டர் அனுமதி

இதில், வேடிக்கையான விஷயமே புதிய கார்களை வாங்குவதற்கு முந்தைய ஷெட்டர் தலைமையிலான அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அம்மாநில அரசின் மறுசீரமைப்பு மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Chief minister Siddaramaiah has inducted 29 Congress legislators into his cabinet on 18th May, Saturday. As per sources says, high end cars ready for new ministers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X