ஆஃப்ரோடு அம்சங்களுடன் ஓர் ஆடம்பர மோட்டார் இல்லம்...!!

By Saravana

சமீபத்தில் உலகின் விலையுயர்ந்த மோட்டார் இல்லம் துபாயில் விற்பனை செய்யப்பட்டது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், அதனை விஞ்சும் வகையில் தற்போது ஓர் புதிய உல்லாச பயண வாகனம் பற்றிய செய்தி இணையங்களில் அனல் பரப்பி வருகிறது. வால்ட் டிஸ்னியில் ஆராய்ச்சி பிரிவின் முன்னாள் தலைவரான பிரான் பெரன் புதிய உல்லாச வாகனத்தை வடிவமைத்து அசத்தியிருக்கிறார்.

தனது அனுபவத்தை கொண்டு இதுவரை காணாத வசதிகள் மற்றும் அம்சங்களுடன் இந்த புதிய உல்லாச பயணத்துக்கான வாகனத்தை வடிவமைத்துள்ளார். தனது இளைய மகள் கிரா பெயரிலேயே கிராவேன் என்று இதற்கு பெயர் சூட்டியுள்ளார். இறுதிக்கட்ட கட்டமைப்பில் இருக்கும் இந்த வாகனத்தில் விரைவில் தனது இளைய மகள் கிராவுடன் சுற்றுலா செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார்.


கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

பேஸ் மாடல்

பேஸ் மாடல்

மெர்சிடிஸ் பென்ஸ் யூனிமாக் வாகனத்தின் அடிப்படையில் இந்த உல்லாச பயண வாகனத்தை ஃபெரன் வடிவமைத்துள்ளார்.

ஆஃப் ரோடு அம்சங்கள்

ஆஃப் ரோடு அம்சங்கள்

ஆஃப்ரோடு எனப்படும் கரடு முரடான சாலைகளிலும் எளிதாக செல்லும் அம்சங்களை கொண்டது. குறிப்பாக, 46 இஞ்ச் மிச்செலின் ஆஃப்ரோடு டயர்கள், 6 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. நைட்ரஜன் ஹைட்ராலிக் சிஸ்டம் கொண்டது. இது 45 டிகிரி சரிவான சாலையிலும் செல்லும் வல்லமை கொண்டது. கிராவ்லர் கியர் வசதியும் உண்டு.

காக்பிட்

காக்பிட்

போயிங் 747 விமானத்தின் காக்பிட்டின் மாதிரியில் இதன் டிராக்டரின் காக்பிட்டை மாற்றியுள்ளார் ஃபெரன். இன்டிபென்டன்ட் ஜிபிஸ் நேவிகேஷன் சிஸ்டம், பேட்டரியில் இயங்கும் ஏசி, வாகனத்தை முழுவதுமாக கண்காணித்து ஓட்டும் வசதி போன்றவை குறிப்பிடத்தக்கது. அனைத்துக் கட்டுப்பாட்டு அம்சங்களும் நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றியுள்ளார்.

 ட்ரெயிலர்

ட்ரெயிலர்

தங்குவதற்கான படுக்கை அறை, சமையலறை, அலுவலக அறை, வீடியோ எடிட்டிங் ஸ்டூடியோ உள்ளிட்ட பல வசதிகள் ட்ரெயிலரில் உள்ளது. அதற்கு தகுந்தாற்போல் எந்தவொரு இடத்திலிருந்தும் வெளியுலகை தொடர்பு கொள்வதற்கான சேட்டிலைட் தொடர்பு வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதர வசதிகள்

இதர வசதிகள்

முதலுதவி சிகிச்சைக்கான கிட், குடிநீர் சுத்திகரிப்பு வசதி, தீயணைப்பு வசதி, கிளைமேட் கன்ட்ரோல், போதுமான மின்சாரத்தை அளிக்கும் இரண்டு ஜெனரேட்டர்கள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. இதில், மோட்டார்சைக்கிள் ஒன்றை எடுத்துச் செல்வதற்கான வசதியும் உள்ளது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

இந்த வாகனத்தில் 170 கேலன் டீசல் நிரப்பும் வசதி கொண்டது என்றும், 3200 கிமீ தூரம் வரை செல்லலாம் என்றும் ஃபெரன் தெரிவித்துள்ளார்.

 வேகம்

வேகம்

இதன் டிராக்டரில் 260எச்பி பவரை அளிக்கும் 6 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8 ஸ்பீடு (6 ஃபார்வர்டு+ 2 ரிவர்ஸ்) கியர் பாக்ஸ் கொண்டது. கிராவ்லர் ரிடக்ஷன் கியர் வசதியும் உள்ளது. நெடுஞ்சாலையில் மணிக்கு 112 கிமீ வேகம் வரை செல்லும். 6 வீல் டிரைவ் ஆப்ஷனில் செல்லும்போது அதிகபட்சமாக மணிக்கு 48 கிமீ வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 சுற்றுலா

சுற்றுலா

இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய உல்லாச வாகனத்தின் கட்டமைப்புப் பணிகள் நிறைவுபெறும் என ஃபெரன் தெரிவித்துள்ளார். அதன்பின்னர், தனது இளைய மகள் கிராவுடன் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிற்கு இந்த வாகனத்தில் சுற்றுலா செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
The KiraVan tractor is a modified Mercedes-Benz Unimog U500NA with a Mercedes Benz 6-cylinder in-line 260HP high-efficiency intercooled turbo-diesel engine providing 700ft-lb of torque. The chassis frame has been stretched and reinforced, a four-door composite crew cabin added, and an off-road articulating fifth-wheel trailer hitch attached.
Story first published: Thursday, August 14, 2014, 12:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X