பென்ட்லீயின் சிக்னேச்சர் எடிசன் ஸ்மார்ட்போன்: விலை ஜஸ்ட் ரூ.10 லட்சம்

By Saravana

கார்களுடன் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு தருவதற்காக பிரத்யேகமான கைக்கடிகாரங்கள், போன்கள், சாவிகள் போன்றவற்றை விசேஷமாக வடிவமைத்து வழங்குவதை சொகுசு கார் நிறுவனங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. பிராண்டு முத்திரை மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வடிவமைத்து வெளியிடுகின்றன.

அந்த வகையில், தற்போது பென்ட்லீ சொகுசு கார் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கும், தனது ரசிகர்களுக்காகவும் பிரத்யேகமான ஆடம்பர ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வெர்டு நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இதற்காக, பென்ட்லீ மற்றும் வெர்டு நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


 ஆன்ட்ராய்டு போன்

ஆன்ட்ராய்டு போன்

இந்த 4ஜி ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் டைட்டானியத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 1,080பிக்செல் துல்லியத்தை வழங்கும் 4.7 இஞ்ச் திரை கொண்டது.

 லெதர் வேலைப்பாடு

லெதர் வேலைப்பாடு

இந்த ஸ்மார்ட்போனின் ஃப்ரேம் உயர்தர லெதர் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, லெதர் உறையில் பென்ட்லீயின் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கிறது.

 ஸ்மார்ட்போன் அம்சங்கள்

ஸ்மார்ட்போன் அம்சங்கள்

13 மெகாபிக்செல் கேமரா, 2.3 ஜிகாஹெர்ட்ஸ் கோர் க்யூவல்காம் ஸ்நாப்டிராகன் 801 பிராசஸர் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 64 ஜிபி அளவுக்கு சேமிப்பு திறன் கொண்டது.

 வயர்லெஸ் சார்ஜ்

வயர்லெஸ் சார்ஜ்

இந்த ஸ்மார்ட்போனை வயர்லெஸ் நுட்பத்தில் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். கூகுள் ஆன்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்கு தளம் கொண்டது.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தம் 2,000 பென்ட்லீ- வெர்டு ஸ்மார்ட்போன்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளன. ஒரு போன் 12,500 யூரோ விலையில் விற்பனைக்கு செல்கிறது.

பென்ட்லீ

பென்ட்லீ

இந்த ஸ்மார்ட்போனில் பென்ட்லீ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை ஸ்மார்ட்போனை ரிமோட் கன்ட்ரோல் போன்று பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும்.

 விலை பொருட்டல்ல

விலை பொருட்டல்ல

இந்த ஸ்மார்ட்போன்கள் எந்திர உதவியின்றி முழுவதும் மனித ஆற்றல் மூலம் உருவாக்கப்படுகின்றன. இதற்கு விலை ஒரு பொருட்டகாக இருக்காது.

வெர்டு பின்னணி

வெர்டு பின்னணி

1998ம் ஆண்டு வெர்டு நிறுவனம் நோக்கியா நிறுவனத்தால் துவங்கப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு வெர்டு நிறுவனத்தை நோக்கியா விற்பனை செய்துவிட்டது. தற்போது வெர்டு நிறுவனத்தில் நோக்கியா நிறுவனம் 10 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

Most Read Articles
English summary

 World renowned luxury smartphone manufacturer Vertu has unveiled a €12,500 smartphone for Bentley owners and enthusiasts. Named as Vertu for Bentley, is the first device to come out of the new five-year partnership with the high-end British car maker.
Story first published: Wednesday, October 15, 2014, 13:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X